::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, December 11, 2009

செல்பேசி பேசிக் கொண்டு வாக​னம் ஓட்டினால் கடும் நடவடிக்கை

செல்​பே​சி​யில் பேசிக் கொண்டே வாக​னங்​களை ஓட்​டு​ப​வர்​கள் மீது காவல் துறை மூலம் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டு​மென மாவட்ட ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ரன் எச்​ச​ரித்​துள்​ளார்.​ ​ ​

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் சாலை​க​ளில் இரு​சக்​கர மற்​றும் மூன்று,​ நான்கு சக்​கர வாக​னங்​களை ஓட்​டிச் செல்​லும் பொது​மக்​கள் மற்​றும் ஓட்​டு​நர்​கள் வாக​னங்​களை ஒரு கையால் இயக்​கிக் கொண்டே மற்​றொரு கையில் ​ செல்​பே​சியை வைத்​துக் கொண்டு அதில் பேசிக் கொண்டு செல்​வ​தாக புகார்​கள் வந்​த​வண்​ணம் உள்​ளன.​ ​ ​

ஒரு சில​ரின் இது​போன்ற நட​வ​டிக்​கை​கள் கார​ண​மாக சாலை​யில் கவ​னம் சிதறி விபத்​து​க​ளும்,​ போக்​கு​வ​ரத்து நெரி​சல் மற்​றும் இதர வாகன ஓட்​டு​நர்​க​ளுக்கு இடை​யூ​று​க​ளும் ஏற்​ப​டு​கின்​றன.​ ​ ​ ​

எனவே,​ சாலை​க​ளில் வாக​னங்​களை இயக்​கு​ப​வர்​கள் செல்​பே​சி​யில் பேசிக் கொண்டே வாக​னங்​களை இயக்​கி​னால் அவர்​கள் மீது காவல்​துறை மூலம் சட்​டப்​ப​டி​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்​பில் எச்​ச​ரித்​துள்​ளார்.

Blog Archive