::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, December 16, 2009

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழை,​​ புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திருவாரூர் மாவட்​டத்​தில் ​ இயல்பு வாழ்க்​கை​யில் பாதிப்பு ஏற்​பட்​டது.​

திருவாரூர் மாவட்​டத்​தில் கடந்த 4 ​ நாள்​க​ளா​கத் தொடர்ந்து மழை பெய்து வரு​கி​றது.​ வங்​கக் கட​லில் புயல் உரு​வா​ன​தை​ய​டுத்து,​​ சனிக்​கி​ழமை முதல் செவ்​வாய்க்​கி​ழமை வரை நாகை துறை​முக அலு​வ​ல​கத்​தில் 3-ம் எண் புயல் எச்​ச​ரிக்​கைக் கூண்டு ஏற்​றப்​பட்​டி​ருந்​தது.​ பிற்​ப​கல் இந்த எச்​ச​ரிக்​கைக் கூண்டு இறக்​கப்​பட்​டது.​​ ​

இருந்​த​போ​தி​லும்,​​ திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் தொடர்ந்து பலத்த மழை பெய்​தது.​ தொடர் மழை நீடிப்​ப​தால் திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​ மாவட்​டத்​தின் ஒரு சில பகு​தி​க​ளில் போக்​கு​வ​ரத்​தில் பிரச்னை ஏற்​பட்​டது.​

​பள்​ளி​க​ளுக்கு ​ விடு​முறை:​​ புயல் எச்​ச​ரிக்கை மற்​றும் தொடர் மழை கார​ண​மாக திருவாரூர் மாவட்​டத்​தில் பள்ளி,​​ கல்​லூரி உள்​ளிட்ட அனைத்​துக் கல்வி நிலை​யங்​க​ளுக்​கும் செவ்வாய்க்கிழமை ​(டிச.​ 15) விடு​முறை அறி​விக்​கப்​பட்​டிருந்தது.​

Blog Archive