நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி அமலாக்க கமிட்டியின் தலைவராக நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரை கொண்ட இந்த கமிட்டி, நாடு முழுவதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதி மூலம் செய்யப்படும் பணிகளைக் கண்காணித்தல், மறறும் அந்த திட்டத்தின் பயன்கள் மக்களை முழுமையாகச் சென்றடையும் வகையில் உரிய மாற்றங்களைக் கொண்டு வருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த கமிட்டியின் அலுவலகம் நாடாளுமன்ற வளாகத்திலேயே உள்ளது.
இந்த பதவியின் மூலமாக நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக செயல்படுத்தப்படும் பணிகள் அனைத்திலும் கிராமப்புற மேம்பாடு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் விஜயன்.
நாகை மக்களவை தொகுதியில் மூன்றாவது முறையாக உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயன்.