புயல் எச்சரிக்கை காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்களுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது. இதனால் கடந்த இரு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. தொடர்ந்து திங்கள்கிழமையும் அதிகாலை தொடங்கி பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்தது. அவ்வப்போது லேசாக வெயில் அடித்தது.
விடுமுறை குறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்தி: புயல் செவ்வாய்க்கிழமை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் செவ்வாய்க்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் மழை அதிக அளவில் இருக்குமெனவும், பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மழை, காற்று அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதால் செவ்வாய்க்கிழமை ஒருநாள் மட்டும் இம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளிகளில் பல்வேறு வகுப்புகளுக்கு நடைபெறும் அரையாண்டுத் தேர்வுகள் வேறொரு நாளில் நடத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.