திருவாரூர் மாவட்டத்தில் நகர்புறங்களில் வசிக்கும் இதுவரை சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு வீடுகட்ட கடனுதவி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நகர்ப்புறங்களில் வசித்து வரும் இதுவரை சொந்த வீடு இல்லாத மாத வருமானம் ரூ.3,000-த்துக்குள் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த ஏழை மக்களுக்கு 25 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ள, வங்கிக் கடன் ரூ.1 லட்சம் வரையிலும், மாத வருமானம் ரூ.3,301 முதல் ரூ.7,300 வரை குறைந்த வருவாய்ப்பிரிவு ஏழை மக்களுக்கு 40 சதுர மீட்டர் பரப்பளவில் வீடு கட்டிக் கொள்ள, வங்கிக் கடன் ரூ.1.60 லட்சம் கடன் வழங்கவும், கடன் தொகை மீதான வட்டியில் 5 சதவீத மானியம் வழங்கவும், இந்த கடன் தொகையை 15 முதல் 20 ஆண்டுகளில் திரும்ப செலுத்தவும் அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் நகர்ப்புறங்களில் (நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகள் மட்டும்) நிலம் தேர்வு செய்யப்பட்டு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டு, இதுவரை அந்த இடத்தில் வீடு கட்டிக் கொள்ளாத நபர்கள் வங்கிக் கடன் பெற்று வீடு கட்டிக் கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்புவோர் திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை நேரில் அணுகுமாறு ஆட்சியர் எம். சந்திரசேகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.