::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, December 26, 2009

நமதூரில் தமிழக அரசின் 24மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கடந்த 22/12/2009 வியாழன் அன்று காலை சுமார் 11.00 மணியளவில் கூத்தாநல்லூா் ‌செல்வி மஹால் திருமண அரங்கத்தில் நமதூருக்கான தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு மின்வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் திரு. பூண்டி கலைவாணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இத்துவக்கவிழாவிற்கு கூத்தாநல்லூா் நகர்மன்ற தலைவர் ஜனாபா. யாஸ்மீன் பர்வீன், நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் மற்றும் நகராட்சி ஆணையா் திரு.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் கூத்தாநல்லூா் ஊர்உறவின் முறை ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய ஆர்வலா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

பலரது உயிர்காக்கும் இச்சேவையை திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் பலமான கோரிக்கை மூலம் பெற்றுத் தந்த நமதூா் நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் அவர்களுக்கு நமது இணையதள குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவசர தேவைக்கு 108 எண்ணில் ‌தொலைபேசி வழியாக தொடா்பு கொள்ளவும்.
நமதூர் நகராட்சி முன்புறம் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் 24 மணிநேரமும்...







Blog Archive