::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, December 5, 2009

தலை​மைத் தேர்​தல் அலு​வ​ல​ரு​டன் திருவாரூர் ஆட்​சி​யர் கலந்​து​ரை​யா​டல்

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் விடு​பட்ட வாக்​கா​ளர் சேர்த்​தல் மற்​றும் நூறு சத​வீத வாக்​கா​ளர் பட்​டி​யல் கள ஆய்​வுப் பணி ஆகி​ய​வற்றை விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் தமி​ழக தலை​மைத் தேர்​தல் அலு​வ​லர் நரேஷ் குப்தா வெள்​ளிக்​கி​ழமை ஆய்வு மேற்​கொண்​டார்.​ ​ ​

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் உள்ள திருத்​து​றைப்​பூண்டி,​ மன்​னார்​குடி,​ திரு​வா​ரூர்,​ நன்​னி​லம் ஆகிய நான்கு சட்​டப்​பே​ர​வைத் தொகு​தி​க​ளுக்​கான வாக்​கா​ளர் ப்ட​டி​யல்​க​ளைத் திருத்​தி​ய​மைக்​கும் பணி விரை​வில் தொடங்​கப்​ப​ட​வுள்​ளது. இதன் ஒரு கட்​ட​மாக,​ இன்​னும் ஒரு​வார காலத்​தில்,​ கிராம நிர்​வாக அலு​வ​லர்​கள் வாக்​கா​ளர் பட்​டி​ய​லு​டன் வீடு​தோ​றும் சென்று,​ வாக்​கா​ளர் பட்​டிய​லில் உள்ள விவ​ரங்​கள் சரி​யாக உள்​ளதா என்​பதை கள ஆய்வு மேற்​கொள்​ள​வுள்​ள​னர்.​ ​ ​ இது​தொ​டர்​பான பணி​க​ளில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து தலை​மைத் தேர்​தல் அலு​வ​லர் நரேஷ்​குப்தா மாவட்ட ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ர​னு​டன் விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் ஆய்வு மேற்​கொண்​டார்.​ ​

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் ​ அ. ஜான்​லூ​யிஸ்,​ மன்​னார்​குடி மற்​றும் திரு​வா​ரூர் வரு​வாய் கோட்​டாட்​சி​யர்​கள்,​ துணை ஆட்​சி​யர் நிலை​யி​லான மண்​டல அலு​வ​லர்​கள்,​ அனைத்து வட்​டாட்​சி​யர்​கள் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​லக தேர்​தல் வட்​டாட்​சி​யர் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

Blog Archive