திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 30.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டம் முழுவதும் மழை விட்டு, விட்டு பெய்வதாலும், சீராக பெய்வதாலும் சம்பா, தாளடி பயிர்களுக்கு இந்த மழை நல்ல ஊட்டமளிப்பதாக இருக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்தனர். எனினும் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
- நன்றி / தினமணி.காம்