::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, December 8, 2009

திரு​வாரூரில் தமு​முக,​ தவ்​ஹீத் ஜமாஅத் ஆர்ப்​பாட்​டம்

பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட தின​மான டிச. 6-ம் தேதி​யை​யொட்டி,​ தமி​ழக முஸ்​லிம் முன்​னேற்​றம் கழ​கம்,​ தமிழ்​நாடு தவ்​ஹீத் ஜமாத் சார்​பில் திரு​வா​ரூரில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன.​ ​ ​

கோரிக்​கை​கள்:​ பாபர் மசூ​தியை அதே இடத்​தில் கட்ட அனு​ம​திக்க வேண்​டும். பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட போது அப்​போ​தைய காங்​கி​ரஸ் அரசு அளித்த வாக்​கு​று​தியை தற்​போ​தைய காங்​கி​ரஸ் அரசு நிறை​வேற்ற வேண்​டும். பாபர் மசூதி இடத்தை முஸ்​லிம்​க​ளி​டம் ஒப்​ப​டைக்க வேண்​டும். பாபர் மசூதி இடிப்​பில் குற்​றஞ்​சாட்​டப்​பட்​ட​வர்​க​ளுக்கு உட​ன​டி​யாக தண்​டனை வழங்க வேண்​டும் என்​பன உள்​ளிட்​டக் கோரிக்​கை​கள் வலி​யு​றுத்​தப்​பட்​டன.​ ​​

தமு​முக சார்​பில்... ​ திரு​வா​ரூர் ரயில் நிலை​யம் அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்ட துணைச் செய​லர் ஓய். சாதிக் பாட்ஷா ​ தலைமை வகித்​தார். மாநில துணைத் தலை​வர் ஹாஜா குத்​பு​தீன் சிறப்​பு​ரை​யாற்​றி​னார். மாவட்​டச் செய​லர் குத்​பு​தீன் மற்​றும் மாவட்ட நிர்​வா​கி​கள்,​ கிளை நிர்​வா​கி​கள் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.​

தவ்​ஹீத் ஜமாஅத்:​ ​ ​ திரு​வா​ரூர் தலைமை அஞ்​சல் அலு​வ​ல​கம் முன்பு நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லர் எச். பீர்​மு​க​மது தலைமை வகித்​தார். மாநி​லப் பேச்​சா​ளர் கோவை அப்​துல் ரகீம் சிறப்​பு​ரை​யாற்​றி​னார். மாவட்​டப் பொரு​ளாலர் எஸ்.எம். ஹாஜா மைதீன் மற்​றும் மாவட்ட நிர்​வா​கி​கள்,​ கிளை நிர்​வா​கி​கள் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.​

ஆர்ப்​பாட்​டத்​தில் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.

Blog Archive