தென்மேற்கு வங்கக்கடல் அருகில் குறைந்தத காற்றழுத்தத் தாழ்வு மண்டல நிலை கொண் டுள்ளது. இதனால் வானம் மேகமூட்டத்துடன் 23 டிகிரி வெப்பநிலை உருவாகும். மேலும் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துடன் காற்று வீசக்கூடும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தெற்கு கடல்கரையோர மாவட்டங்களிலும், மாநிலத்தின் உள்பகுதியிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மிதமானது முதல் கனத்த மழை பெய்யக் கூடும். கடல் கொந்தளிப்புடனும், சீற்றத்துடனும் காணப்படும். இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். மேலும் தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை ஆகிய முக்கிய துறைகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுóள்ளது.
தேவையான அளவுக்கு உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் இருப்பில் வைக்கப்பட்டும், பள்ளி, கல்லூரி கட்டடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எந்த ஒரு இடர்பாடு ஏற்பட்டாலும் எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.