::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, December 16, 2009

காப்​பீட்​டுத் திட்​டம்:​ விடு​பட்​ட​வர்​க​ளுக்கு புகைப்​ப​டம் எடுக்க மீண்​டும் வாய்ப்பு

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் கலை​ஞர் மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளா​மல் விடு​பட்​ட​வர்​க​ளுக்கு மீண்​டும் எடுத்​துக் கொள்ள வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

இது​கு​றித்து ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்பு:​​ ​ ​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஆண்டு வரு​மா​னம் ரூ.72,000-த்துக்​கும் குறை​வாக உள்ள ஏழை,​​ எளிய மக்​க​ளுக்​கா​க​வும்,​​ 26 நல​வா​ரி​யங்​க​ளில் உறுப்​பி​னர்​க​ளா​க​வும் உள்​ள​வர்​க​ளுக்கு 51 வகை​யான நோய்​க​ளுக்கு தனி​யார் மருத்​து​வ​ம​னை​க​ளில் ஆண்​டுக்கு ரூ.1 லட்​சம் மதிப்​பில் உயர் சிகிச்​சைப் பெறு​வ​தற்கு ஏது​வாக தமி​ழக அரசு உயிர் காக்​கும் உயர் சிகிச்​சைக்​கான கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​டத்தை அறி​வித்​துள்​ளது.​​ ​ ​

இதன்​படி,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஏற்​க​னவே அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக 2,52,570 குடும்​பங்​கள் புகைப்​ப​டம் எடுக்​கப்​பட்டு,​​ இது​வரை 1,97,790 பேருக்கு அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

மேலும் முதல் சுற்​றில் விடு​பட்​ட​வர்​க​ளுக்​காக மாவட்​டம் முழு​வ​தும் இரண்​டாம் சுற்று புகைப்​ப​டம் எடுக்​கும் பணி தொடங்​க​பட்​டுள்​ளது.​ இதன்​படி,​​ குட​வா​சல் வட்​டத்​தில் டிச.16-ம் தேதி​யும்,​​ நன்​னி​லம் வட்​டத்​தில் டிச.17 முதல் 19-ம் தேதி வரை​யி​லும்,​​ வலங்​கை​மான் வட்​டத்​தில் டிச.20,21 தேதி​க​ளி​லும்,​​ நீடா​மங்​க​லம் வட்​டத்​தில் டிச.22 முதல் 24-ம் தேதி வரை​யி​லும்,​​ திருத்​து​றைப்​பூண்டி வட்​டத்​தில் டிச.25 முதல் டிச.​ 27-ம் தேதி வரை​யி​லும்,​​ திரு​வா​ரூர் வட்​டத்​தில் டிச.​ 28,​ 29 தேதி​க​ளி​லும் அந்​தந்த கிரா​மம் அல்​லது அரு​கி​லுள்ள கிராம பள்​ளி​க​ளில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​றும்.​​ ​ ​

முதல் சுற்​றில் புகைப்​ப​டம் எடுக்​கா​மல் விடு​பட்ட நபர்​கள் இந்த வாய்ப்​பைப் பயன்​ப​டுத்தி குடும்​பத்​து​டன் வந்து புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளு​மாறு ஆட்​சி​யர் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.​

-நன்றி/ தினமணி.காம்

Blog Archive