::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, December 26, 2009

நமதூரில் தமிழக அரசின் 24மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கடந்த 22/12/2009 வியாழன் அன்று காலை சுமார் 11.00 மணியளவில் கூத்தாநல்லூா் ‌செல்வி மஹால் திருமண அரங்கத்தில் நமதூருக்கான தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு மின்வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் திரு. பூண்டி கலைவாணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இத்துவக்கவிழாவிற்கு கூத்தாநல்லூா் நகர்மன்ற தலைவர் ஜனாபா. யாஸ்மீன் பர்வீன், நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் மற்றும் நகராட்சி ஆணையா் திரு.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் கூத்தாநல்லூா் ஊர்உறவின் முறை ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய ஆர்வலா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

பலரது உயிர்காக்கும் இச்சேவையை திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் பலமான கோரிக்கை மூலம் பெற்றுத் தந்த நமதூா் நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் அவர்களுக்கு நமது இணையதள குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவசர தேவைக்கு 108 எண்ணில் ‌தொலைபேசி வழியாக தொடா்பு கொள்ளவும்.
நமதூர் நகராட்சி முன்புறம் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் 24 மணிநேரமும்...







வௌ்ளிக்கிழமை (25 டிசம்பர்) ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு வெளியான துண்டு பிரசுரங்கள்













Wednesday, December 16, 2009

காப்​பீட்​டுத் திட்​டம்:​ விடு​பட்​ட​வர்​க​ளுக்கு புகைப்​ப​டம் எடுக்க மீண்​டும் வாய்ப்பு

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் கலை​ஞர் மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளா​மல் விடு​பட்​ட​வர்​க​ளுக்கு மீண்​டும் எடுத்​துக் கொள்ள வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

இது​கு​றித்து ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்பு:​​ ​ ​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஆண்டு வரு​மா​னம் ரூ.72,000-த்துக்​கும் குறை​வாக உள்ள ஏழை,​​ எளிய மக்​க​ளுக்​கா​க​வும்,​​ 26 நல​வா​ரி​யங்​க​ளில் உறுப்​பி​னர்​க​ளா​க​வும் உள்​ள​வர்​க​ளுக்கு 51 வகை​யான நோய்​க​ளுக்கு தனி​யார் மருத்​து​வ​ம​னை​க​ளில் ஆண்​டுக்கு ரூ.1 லட்​சம் மதிப்​பில் உயர் சிகிச்​சைப் பெறு​வ​தற்கு ஏது​வாக தமி​ழக அரசு உயிர் காக்​கும் உயர் சிகிச்​சைக்​கான கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​டத்தை அறி​வித்​துள்​ளது.​​ ​ ​

இதன்​படி,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஏற்​க​னவே அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக 2,52,570 குடும்​பங்​கள் புகைப்​ப​டம் எடுக்​கப்​பட்டு,​​ இது​வரை 1,97,790 பேருக்கு அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

மேலும் முதல் சுற்​றில் விடு​பட்​ட​வர்​க​ளுக்​காக மாவட்​டம் முழு​வ​தும் இரண்​டாம் சுற்று புகைப்​ப​டம் எடுக்​கும் பணி தொடங்​க​பட்​டுள்​ளது.​ இதன்​படி,​​ குட​வா​சல் வட்​டத்​தில் டிச.16-ம் தேதி​யும்,​​ நன்​னி​லம் வட்​டத்​தில் டிச.17 முதல் 19-ம் தேதி வரை​யி​லும்,​​ வலங்​கை​மான் வட்​டத்​தில் டிச.20,21 தேதி​க​ளி​லும்,​​ நீடா​மங்​க​லம் வட்​டத்​தில் டிச.22 முதல் 24-ம் தேதி வரை​யி​லும்,​​ திருத்​து​றைப்​பூண்டி வட்​டத்​தில் டிச.25 முதல் டிச.​ 27-ம் தேதி வரை​யி​லும்,​​ திரு​வா​ரூர் வட்​டத்​தில் டிச.​ 28,​ 29 தேதி​க​ளி​லும் அந்​தந்த கிரா​மம் அல்​லது அரு​கி​லுள்ள கிராம பள்​ளி​க​ளில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​றும்.​​ ​ ​

முதல் சுற்​றில் புகைப்​ப​டம் எடுக்​கா​மல் விடு​பட்ட நபர்​கள் இந்த வாய்ப்​பைப் பயன்​ப​டுத்தி குடும்​பத்​து​டன் வந்து புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளு​மாறு ஆட்​சி​யர் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.​

-நன்றி/ தினமணி.காம்

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழை,​​ புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திருவாரூர் மாவட்​டத்​தில் ​ இயல்பு வாழ்க்​கை​யில் பாதிப்பு ஏற்​பட்​டது.​

திருவாரூர் மாவட்​டத்​தில் கடந்த 4 ​ நாள்​க​ளா​கத் தொடர்ந்து மழை பெய்து வரு​கி​றது.​ வங்​கக் கட​லில் புயல் உரு​வா​ன​தை​ய​டுத்து,​​ சனிக்​கி​ழமை முதல் செவ்​வாய்க்​கி​ழமை வரை நாகை துறை​முக அலு​வ​ல​கத்​தில் 3-ம் எண் புயல் எச்​ச​ரிக்​கைக் கூண்டு ஏற்​றப்​பட்​டி​ருந்​தது.​ பிற்​ப​கல் இந்த எச்​ச​ரிக்​கைக் கூண்டு இறக்​கப்​பட்​டது.​​ ​

இருந்​த​போ​தி​லும்,​​ திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் தொடர்ந்து பலத்த மழை பெய்​தது.​ தொடர் மழை நீடிப்​ப​தால் திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​ மாவட்​டத்​தின் ஒரு சில பகு​தி​க​ளில் போக்​கு​வ​ரத்​தில் பிரச்னை ஏற்​பட்​டது.​

​பள்​ளி​க​ளுக்கு ​ விடு​முறை:​​ புயல் எச்​ச​ரிக்கை மற்​றும் தொடர் மழை கார​ண​மாக திருவாரூர் மாவட்​டத்​தில் பள்ளி,​​ கல்​லூரி உள்​ளிட்ட அனைத்​துக் கல்வி நிலை​யங்​க​ளுக்​கும் செவ்வாய்க்கிழமை ​(டிச.​ 15) விடு​முறை அறி​விக்​கப்​பட்​டிருந்தது.​

அதிரடி குறைந்த கட்டணத்தில் உம்ரா (ரூ.39000/-) தக்பீர் ஹஜ் சர்வீஸ்

குவைத் K-Tic வழங்கும் முப்பெரும் முத்தான நிகழ்ச்சிகள்

Tuesday, December 15, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​பள்​ளி​க​ளுக்கு இன்று விடு​முறை

புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​ பள்​ளி​க​ளுக்கு செவ்​வாய்க்​கி​ழமை விடு​முறை அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

தென்​மேற்கு வங்​கக்​கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளுக்கு மேலாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால் கடந்த இரு தினங்​க​ளாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் பர​வ​லாக மழை​பெய்து வரு​கி​றது.​ தொடர்ந்து திங்​கள்​கி​ழ​மை​யும் அதி​காலை தொடங்கி பகல் முழு​வ​தும் வானம் மேக​மூட்​டத்​து​டனே காணப்​பட்​டது.​ தொடர்ந்து மழை பெய்து கொண்​டே​யி​ருந்​தது.​ அவ்​வப்​போது லேசாக வெயில் அடித்​தது.​​ ​ ​ ​

விடு​முறை குறித்து மாவட்ட ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்தி:​ ​​ ​ ​ புயல் செவ்​வாய்க்​கி​ழமை கரையை கடக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் மழை அதிக அள​வில் இருக்​கு​மெ​ன​வும்,​​ பலத்த காற்​றும் வீசக்​கூ​டும் என​வும் வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது.​ ​ ​ ​ மேலும் கடல் சீற்​றம் அதி​க​மாக இருக்​கும் என்​ப​தால்,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த மீன​வர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை கட​லுக்​குச் செல்ல வேண்​டா​மென அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​​ ​ ​

மழை,​​ காற்று அதி​க​மாக இருக்​கு​மென எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை ஒரு​நாள் மட்​டும் இம்​மா​வட்​டத்​தில் உள்ள பள்​ளி​க​ளுக்கு விடு​முறை அளிக்​கப்​ப​டு​கி​றது.​ பள்​ளி​க​ளில் பல்​வேறு வகுப்​பு​க​ளுக்கு நடை​பெ​றும் அரை​யாண்​டுத் தேர்​வு​கள் வேறொரு நாளில் நடத்​தப்​ப​டும் என ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்.

Monday, December 14, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக பர​வ​லாக மழை

வங்​கக் கட​லில் ஏற்​பட்​டுள்ள காற்​ற​ழுத்த தாழ்வு நிலை கார​ண​மாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் பர​வ​லாக மழை பெய்​தது.​ ​ ​ ​

தென்​மேற்கு வங்​கக் கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால்,​​ சனிக்​கி​ழ​மையை தொடர்ந்து ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் காலை முதலே வானம் மேக மூட்​டத்​து​டன் காணப்​பட்​டது.​ சில நேரங்​க​ளில் நல்ல வெயில் அடித்​தது.​ சிறிது நேரத்​தில் திடீ​ரென மழை பெய்​தது.​

Sunday, December 13, 2009

வங்​கக்​கட​லில் குறைந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை

தென்​மேற்கு வங்​கக்​க​டல் அரு​கில் குறைந்​தத காற்​ற​ழுத்​தத் தாழ்வு மண்​டல நிலை கொண் ​டுள்​ளது.​ இத​னால் வானம் மேக​மூட்​டத்​து​டன் 23 டிகிரி வெப்​ப​நிலை உரு​வா​கும்.​ மேலும் 45 முதல் 55 கிலோ மீட்​டர் வேகத்​து​டன் காற்று வீசக்​கூ​டும்.​

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி தெற்கு கடல்​க​ரை​யோர மாவட்​டங்​க​ளி​லும்,​​ மாநி​லத்​தின் உள்​ப​கு​தி​யி​லும் அடுத்த 48 மணி நேரத்​தில் மித​மா​னது முதல் கனத்த மழை பெய்​யக் கூடும்.​ கடல் கொந்​த​ளிப்​பு​ட​னும்,​​ சீற்​றத்​து​ட​னும் காணப்​ப​டும்.​​ ​ ​ இத​னால் மீன​வர்​கள் கட​லுக்​குச் செல்ல வேண்​டா​மென அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​

தாழ்​வான பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாது​காப்​பான இடங்​க​ளில் இருக்க வேண்​டும்.​ ​மேலும் தீய​ணைப்​புத் துறை,​​ வரு​வாய்த் துறை,​​ பொதுப்​ப​ணித் துறை ஆகிய முக்​கிய துறை​கள் மூலம் பாது​காப்பு நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுóள்​ளது.​​ ​

தேவை​யான அள​வுக்கு உண​வுப் பொருள்​கள்,​​ மருத்​து​வப் பொருள்​கள் இருப்​பில் வைக்​கப்​பட்​டும்,​​ பள்ளி,​​ கல்​லூரி கட்​ட​டங்​க​ளில் பொது​மக்​கள் பாது​காப்​பாக தங்க வைக்க தேவை​யான ஏற்​பா​டு​க​ளும் செய்​யப்​பட்​டுள்​ளன.​ எந்த ஒரு இடர்​பாடு ஏற்​பட்​டா​லும் எதிர்​கொள்ள மாவட்ட நிர்​வா​கம் தயா​ராக உள்​ளது என ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்.

Friday, December 11, 2009

செல்பேசி பேசிக் கொண்டு வாக​னம் ஓட்டினால் கடும் நடவடிக்கை

செல்​பே​சி​யில் பேசிக் கொண்டே வாக​னங்​களை ஓட்​டு​ப​வர்​கள் மீது காவல் துறை மூலம் நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டு​மென மாவட்ட ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ரன் எச்​ச​ரித்​துள்​ளார்.​ ​ ​

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் சாலை​க​ளில் இரு​சக்​கர மற்​றும் மூன்று,​ நான்கு சக்​கர வாக​னங்​களை ஓட்​டிச் செல்​லும் பொது​மக்​கள் மற்​றும் ஓட்​டு​நர்​கள் வாக​னங்​களை ஒரு கையால் இயக்​கிக் கொண்டே மற்​றொரு கையில் ​ செல்​பே​சியை வைத்​துக் கொண்டு அதில் பேசிக் கொண்டு செல்​வ​தாக புகார்​கள் வந்​த​வண்​ணம் உள்​ளன.​ ​ ​

ஒரு சில​ரின் இது​போன்ற நட​வ​டிக்​கை​கள் கார​ண​மாக சாலை​யில் கவ​னம் சிதறி விபத்​து​க​ளும்,​ போக்​கு​வ​ரத்து நெரி​சல் மற்​றும் இதர வாகன ஓட்​டு​நர்​க​ளுக்கு இடை​யூ​று​க​ளும் ஏற்​ப​டு​கின்​றன.​ ​ ​ ​

எனவே,​ சாலை​க​ளில் வாக​னங்​களை இயக்​கு​ப​வர்​கள் செல்​பே​சி​யில் பேசிக் கொண்டே வாக​னங்​களை இயக்​கி​னால் அவர்​கள் மீது காவல்​துறை மூலம் சட்​டப்​ப​டி​யான நட​வ​டிக்கை எடுக்​கப்​ப​டும் என ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்​பில் எச்​ச​ரித்​துள்​ளார்.

நக‌ர்‌ப்​பு​ற‌ங்​க​ளி‌ல் வசி‌க்​கு‌ம் ஏழ‌ைக​ளு‌க்கு ​ வீடு க‌ட்ட கட​னு​தவி :​ ஆ‌ட்​சி​ய‌ர்

திரு​வ‌ா​ரூ‌ர் ம‌ாவ‌ட்​ட‌த்​தி‌ல் நக‌ர்​பு​ற‌ங்​க​ளி‌ல் வசி‌க்​கு‌ம் இது​வ‌ரை ‌சொந்த வீடு இ‌ல்​ல‌ாத ஏழ‌ைக​ளு‌க்கு வீடு​க‌ட்ட கட​னு​தவி வழ‌ங்​க‌ப்​ப​ட​வு‌ள்​ளது என ம‌ாவ‌ட்ட ஆ‌ட்​சி​ய‌ர் எ‌ம்.​ ச‌ந்​தி​ர​‌சே​க​ர‌ன் ‌தெரி​வி‌த்​து‌ள்​ள‌ார்.

இது​கு​றி‌த்து அவ‌ர் ‌வெளி​யி‌ட்​டு‌ள்ள ‌செ‌ய்​தி‌க்​கு​றி‌ப்பு:​​ ​ ​ நக‌ர்‌ப்​பு​ற‌ங்​க​ளி‌ல் வசி‌த்து வரு‌ம் இது​வ‌ரை ‌சொ‌ந்த வீடு இ‌ல்​ல‌ாத மாத வரு​மா​ன‌ம் ரூ.3,000-‌த்து‌க்​கு‌ள் உ‌ள்ள ‌பொரு​ளா​தா​ர‌த்​தி‌ல் மிக​வு‌ம் நலி​வ​‌டை‌ந்த ஏழ‌ை ம‌க்​க​ளு‌க்கு 25 சதுர மீ‌ட்​ட‌ர் பர‌ப்​ப​ள​வி‌ல் வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்ள,​​ வ‌ங்​கி‌க் கட​ன் ரூ.1 ல‌ட்​ச‌ம் வ‌ரை​யி​லு‌ம்,​​ ம‌ாத வரு​ம‌ா​ன‌ம் ரூ.3,301 முத‌ல் ரூ.7,300 வ‌ரை கு‌றை‌ந்த வரு​வ‌ா‌ய்‌ப்​பி​ரிவு
ஏழ‌ை ம‌க்​க​ளு‌க்கு 40 சதுர மீ‌ட்​ட‌ர் பர‌ப்​ப​ள​வி‌ல் வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்ள,​​ வ‌ங்​கி‌க் கட​ன் ரூ.1.60 ல‌ட்​ச‌ம் கட‌ன் வழ‌ங்​க​வு‌ம்,​​ கட‌ன் ‌தொ‌கை மீத‌ான வ‌ட்​டி​யி‌ல் 5 சத​வீத ம‌ானி​ய‌ம் வழ‌ங்​க​வு‌ம்,​​ ​ இ‌ந்த கட‌ன் ‌தொ‌கை‌யை 15 முத‌ல் 20 ஆ‌ண்​டு​க​ளி‌ல் திரு‌ம்ப ‌செலு‌த்​த​வு‌ம் அரசு அறி​வி‌த்​து‌ள்​ளது.​​ ​ ​

இ‌ந்த தி‌ட்​ட‌த்​தி‌ன் கீ‌ழ் திரு​வ‌ா​ரூ‌ர் ம‌ாவ‌ட்​ட‌த்​தி‌ல் தமி‌ழ்​நாடு அரசு பி‌ற்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்​‌டோ‌ர் ம‌ற்​று‌ம் மிக​வு‌ம் பி‌ற்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்​‌டோ‌ர் நல‌த்​து‌றை மூல‌ம் நக‌ர்‌ப்​பு​ற‌ங்​க​ளி‌ல் ​(நக​ர‌ாட்சி ம‌ற்​று‌ம் ‌பேரூ​ர‌‌ாட்சி பகு​தி​க‌ள் ம‌ட்​டு‌ம்)​ நில‌ம் ‌தே‌ர்வு ‌செ‌ய்​ய‌ப்​ப‌ட்டு,​​ இல​வச வீ‌ட்​டு​ம​‌னை‌ப் ப‌ட்ட‌ா வழ‌ங்​க‌ப்​ப‌ட்டு,​​ இது​வ‌ரை அ‌ந்த இட‌த்​தி‌ல் வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்​ளாத நப‌ர்​க‌ள் வ‌ங்​கி‌க் கட‌ன் ‌பெ‌ற்று வீடு க‌ட்​டி‌க் ‌கொ‌ள்​ள​ல‌ாம்.​ ​​ ​ ​

இ‌ந்த தி‌ட்​ட‌த்​தி‌ன் கீ‌ழ் பய​ன​‌டைய விரு‌ம்​பு​‌வோ‌ர் திரு​வ‌ாரூ‌ர் மாவ‌ட்ட பி‌ற்​ப​டு‌த்​த‌ப்​ப‌ட்ட ம‌ற்​று‌ம் சிறு​பா‌ன்​‌மை​யி​ன‌ர் நல அலு​வ​ல‌ரை ‌நேரி‌ல் அணு​கு​மாறு ஆ‌ட்​சி​ய‌ர் எ‌ம்.​ ச‌ந்​தி​ர​‌சே​க​ர‌ன் ‌கே‌ட்​டு‌க் ‌கொண்​டு‌ள்​ள‌ார்.

Tuesday, December 8, 2009

திரு​வாரூரில் தமு​முக,​ தவ்​ஹீத் ஜமாஅத் ஆர்ப்​பாட்​டம்

பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட தின​மான டிச. 6-ம் தேதி​யை​யொட்டி,​ தமி​ழக முஸ்​லிம் முன்​னேற்​றம் கழ​கம்,​ தமிழ்​நாடு தவ்​ஹீத் ஜமாத் சார்​பில் திரு​வா​ரூரில் ஞாயிற்​றுக்​கி​ழமை ஆர்ப்​பாட்​டங்​கள் நடை​பெற்​றன.​ ​ ​

கோரிக்​கை​கள்:​ பாபர் மசூ​தியை அதே இடத்​தில் கட்ட அனு​ம​திக்க வேண்​டும். பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட போது அப்​போ​தைய காங்​கி​ரஸ் அரசு அளித்த வாக்​கு​று​தியை தற்​போ​தைய காங்​கி​ரஸ் அரசு நிறை​வேற்ற வேண்​டும். பாபர் மசூதி இடத்தை முஸ்​லிம்​க​ளி​டம் ஒப்​ப​டைக்க வேண்​டும். பாபர் மசூதி இடிப்​பில் குற்​றஞ்​சாட்​டப்​பட்​ட​வர்​க​ளுக்கு உட​ன​டி​யாக தண்​டனை வழங்க வேண்​டும் என்​பன உள்​ளிட்​டக் கோரிக்​கை​கள் வலி​யு​றுத்​தப்​பட்​டன.​ ​​

தமு​முக சார்​பில்... ​ திரு​வா​ரூர் ரயில் நிலை​யம் அருகே நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்ட துணைச் செய​லர் ஓய். சாதிக் பாட்ஷா ​ தலைமை வகித்​தார். மாநில துணைத் தலை​வர் ஹாஜா குத்​பு​தீன் சிறப்​பு​ரை​யாற்​றி​னார். மாவட்​டச் செய​லர் குத்​பு​தீன் மற்​றும் மாவட்ட நிர்​வா​கி​கள்,​ கிளை நிர்​வா​கி​கள் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.​

தவ்​ஹீத் ஜமாஅத்:​ ​ ​ திரு​வா​ரூர் தலைமை அஞ்​சல் அலு​வ​ல​கம் முன்பு நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​துக்கு மாவட்​டச் செய​லர் எச். பீர்​மு​க​மது தலைமை வகித்​தார். மாநி​லப் பேச்​சா​ளர் கோவை அப்​துல் ரகீம் சிறப்​பு​ரை​யாற்​றி​னார். மாவட்​டப் பொரு​ளாலர் எஸ்.எம். ஹாஜா மைதீன் மற்​றும் மாவட்ட நிர்​வா​கி​கள்,​ கிளை நிர்​வா​கி​கள் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.​

ஆர்ப்​பாட்​டத்​தில் ஏரா​ள​மா​னோர் பங்​கேற்​ற​னர்.

Saturday, December 5, 2009

தலை​மைத் தேர்​தல் அலு​வ​ல​ரு​டன் திருவாரூர் ஆட்​சி​யர் கலந்​து​ரை​யா​டல்

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் விடு​பட்ட வாக்​கா​ளர் சேர்த்​தல் மற்​றும் நூறு சத​வீத வாக்​கா​ளர் பட்​டி​யல் கள ஆய்​வுப் பணி ஆகி​ய​வற்றை விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் தமி​ழக தலை​மைத் தேர்​தல் அலு​வ​லர் நரேஷ் குப்தா வெள்​ளிக்​கி​ழமை ஆய்வு மேற்​கொண்​டார்.​ ​ ​

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் உள்ள திருத்​து​றைப்​பூண்டி,​ மன்​னார்​குடி,​ திரு​வா​ரூர்,​ நன்​னி​லம் ஆகிய நான்கு சட்​டப்​பே​ர​வைத் தொகு​தி​க​ளுக்​கான வாக்​கா​ளர் ப்ட​டி​யல்​க​ளைத் திருத்​தி​ய​மைக்​கும் பணி விரை​வில் தொடங்​கப்​ப​ட​வுள்​ளது. இதன் ஒரு கட்​ட​மாக,​ இன்​னும் ஒரு​வார காலத்​தில்,​ கிராம நிர்​வாக அலு​வ​லர்​கள் வாக்​கா​ளர் பட்​டி​ய​லு​டன் வீடு​தோ​றும் சென்று,​ வாக்​கா​ளர் பட்​டிய​லில் உள்ள விவ​ரங்​கள் சரி​யாக உள்​ளதா என்​பதை கள ஆய்வு மேற்​கொள்​ள​வுள்​ள​னர்.​ ​ ​ இது​தொ​டர்​பான பணி​க​ளில் ஏற்​பட்​டுள்ள முன்​னேற்​றம் குறித்து தலை​மைத் தேர்​தல் அலு​வ​லர் நரேஷ்​குப்தா மாவட்ட ஆட்​சி​யர் எம். சந்​தி​ர​சே​க​ர​னு​டன் விடியோ கான்​பி​ரன்​சிங் மூலம் ஆய்வு மேற்​கொண்​டார்.​ ​

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது மாவட்ட வரு​வாய் அலு​வ​லர் ​ அ. ஜான்​லூ​யிஸ்,​ மன்​னார்​குடி மற்​றும் திரு​வா​ரூர் வரு​வாய் கோட்​டாட்​சி​யர்​கள்,​ துணை ஆட்​சி​யர் நிலை​யி​லான மண்​டல அலு​வ​லர்​கள்,​ அனைத்து வட்​டாட்​சி​யர்​கள் மற்​றும் மாவட்ட ஆட்​சி​யர் அலு​வ​லக தேர்​தல் வட்​டாட்​சி​யர் உள்​ளிட்​டோர் உட​னி​ருந்​த​னர்.

ஏ.கே.எஸ். விஜ​யன் எம்.பி.க்கு புதிய பதவி

நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தொகுதி மேம்​பாட்டு நிதி அம​லாக்க கமிட்​டி​யின் தலை​வ​ராக நாகை மக்​க​ள​வைத் தொகுதி உறுப்​பி​னர் ஏ.கே.எஸ். விஜ​யன் நிய​மிக்​கப்​பட்​டுள்​ளார். ​ ​

நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​கள் 24 பேரை கொண்ட இந்த கமிட்டி,​ நாடு ​ முழு​வ​தும் ​ நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர்​க​ளின் மேம்​பாட்டு நிதி மூலம் செய்​யப்​ப​டும் பணி​க​ளைக் கண்​கா​ணித்​தல்,​ மற​றும் அந்த திட்​டத்​தின் பயன்​கள் மக்​களை முழு​மை​யா​கச் சென்​ற​டை​யும் வகை​யில் உரிய மாற்​றங்​க​ளைக் கொண்டு வரு​தல் உள்​ளிட்ட பணி​களை மேற்​கொள்​ளும். இந்த கமிட்​டி​யின் அலு​வ​ல​கம் நாடா​ளு​மன்ற வளா​கத்​தி​லேயே உள்​ளது.​ ​ ​

இந்த பத​வி​யின் மூல​மாக நாடா​ளு​மன்ற உறுப்​பி​னர் தொகுதி மேம்​பாட்டு நிதி​யின் மூல​மாக செயல்​ப​டுத்​தப்​ப​டும் பணி​கள் அனைத்​தி​லும் கிரா​மப்​புற மேம்​பாடு மற்​றும் கல்வி மேம்​பாட்​டுக்கு உயர் முன்​னு​ரிமை அளிக்​கப்​ப​டும் என்​றார் விஜ​யன்.​ ​ ​

நாகை மக்​க​ளவை தொகு​தி​யில் மூன்​றா​வது முறை​யாக உறுப்​பி​ன​ராக தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​ட​வர் விஜ​யன்.

Wednesday, December 2, 2009

திருவாரூர் மாவட்டத்தில் பரவலாக மழை

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை பரவலாக நல்ல மழை பெய்தது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக, கடலோர மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நன்னிலத்தில் 30.3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மாவட்டம் முழுவதும் மழை விட்டு, விட்டு பெய்வதாலும், சீராக பெய்வதாலும் சம்பா, தாளடி பயிர்களுக்கு இந்த மழை நல்ல ஊட்டமளிப்பதாக இருக்கும் என வேளாண் துறையினர் தெரிவித்தனர். எனினும் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.

- நன்றி / தினமணி.காம்

Blog Archive