::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, May 8, 2009

வாக்கை மறுக்க '49ஓ' படிவம் - தேர்தல் ஆணையம்


வாக்குப்பதிவு செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள் 49ஓ படிவத்தை நிரப்பி கொடுக்கலாம். தாங்கள் ஏன் வாக்களிக்க விரும்பவில்லை என அவர்கள் தங்களது கருத்தை 17ஏ படிவத்தில் நிரப்பி கொடுக்கலாம் என டெல்லி தேர்தல் ஆணையாளர் ஜே.கே.சர்மா தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் குறித்து டெல்லி தேர்தல் அதிகாரி ஜே.கே.சர்மா கூறுகையில்,
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நினைக்கும் வாக்காளர்கள் வாக்குக் சாவடிக்குச் சென்று ஓட்டுபோடாமல் இருக்க தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையை பயன்படுத்தலாம். அவர்கள் வாக்குச்சாவடிகளில் இருக்கும் 49ஓ படிவத்தை வாங்கி அதை நிரப்பி அங்கிருக்கும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டம் வாக்காளர்களுக்கு வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை வழங்குகிறது. ஆனால் அந்த உரிமையை பதிவு செய்யும் வசதி தற்போது வாக்குப் பதிவு எந்திரத்தில் இல்லை என்பதால் படிவத்தை கேட்டு வாங்கி கொள்ளவும்.

படிவத்தை கேட்கும் வாக்காளர்களுக்கு அதை கொடுக்கும்படி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். டெல்லியில் இந்த தேர்தலில் எத்தனை பேர் இந்த படிவத்தை கேட்கிறார்கள் என்பது கண்டறிய திட்டமிட்டுள்ளோம்.

1961ம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதியின்படி வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் அதை பதிவு செய்யலாம். தாங்கள் ஏன் வாக்களிக்க விரும்பவில்லை என்ற கருத்தை அவர்கள் படிவம் 17ஏல் பதிவு செய்யலாம். பின்னர் அவர்களிடம் இருந்து அதில் கையெழுத்து அல்லது விரல் ரேகை பெறப்படும்.

வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் எண்ணிக்கையானது வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் இரண்டாவது இடத்தை பிடித்த வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தாலும் தேர்தல் செல்லாது என கூற முடியாது என்றார்.

- நன்றி / தினமணி.காம்

No comments:

Blog Archive