::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, May 27, 2009

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம்

திருவாரூர், மே 25:
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வ. செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எஸ்எஸ்எல்சி கல்வித் தகுதியை முன்னதாகவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பர். தற்போது கூடுதலாக பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற சான்றிதழைப் பதிவு செய்ய வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வரும் போது ஏற்கெனவே பதிவு செய்துள்ள அடையாள அட்டையுடன் தற்போது தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 சான்றிதழையும் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே பதிவு செய்யாதவர்கள் தற்போது பதிவு செய்ய விரும்பினால் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் சான்றொப்பமிட்ட குடும்ப அட்டையின் நகலுடன் வர வேண்டும்.

சிறப்பு முகாம்... வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் கூடும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மன்னார்குடி பின்லே மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் மே 27 முதல் 29-ம் தேதி வரை மூன்று தினங்களுக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இந்த முகாமில் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி வட்டங்களில் உள்ள மாணவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதர வட்டங்களில் உள்ளவர்கள் திருவாரூர், நேதாஜி சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி பதிவு செய்வோர்... நிகழாண்டில் பள்ளி இறுதிவகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் வழங்கும் போது கல்வித்துறையின் மூலம் அந்தந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மூலமாகவே பதிவுப்படிவங்களைப் பூர்த்தி செய்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கிய பின் வேலைவாய்ப்பு அலுவலர் ஒப்பமிடப்பட்ட அடையாள அட்டையை தொடர்புடைய பள்ளித் தலைமையாசிரியருக்கு வழங்கப்பட்டு, பள்ளி வளாகத்திலேயே மனுதாரருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விடும் பதிவு செய்வதற்கு தேவையான படிவங்கள் முதன்மை கல்வி அலுவலர் மூலமாக பள்ளிகளுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்கும் நாளில் தொடர்புடைய தலைமையாசிரியர்களிடம் வழங்கப்படும்.

பதிவு செய்ய விரும்புவோர் இந்த மாவட்டத்துக்குரிய குடும்ப அட்டையின் நகலில் சான்றொப்பம் பெற்று தலைமையாசிரியரிடம் அளித்தால் மட்டுமே பதிவு செய்ய முடியும். குடும்ப அட்டையில் பெயர் இல்லாதவர்களும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த மாவட்டத்தில் பதிவு செய்ய இயலாது. இந்த நடைமுறையின் மூலமாக எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் பதிவு செய்வதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரத்தேவையில்லை என வ. செல்லத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.

- நன்றி / தினமணி.காம்

Saturday, May 23, 2009

இன்று (23/05/2009) SSLC மற்றும் MATRICULATION (பத்தாம் வகுப்பு) தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகளை காண இங்கே கிளிக் செய்யுங்கள்.
SSLC , Matriculation தேர்வில் வெற்றி பெற இருக்கும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..! வாழ்வின் வெற்றிப் பயணத்தை மேலும் தொடர நமது www.koothanallur.co.in இணையதள குழுவின் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம்.
----------------------------------------------------

Saturday, May 16, 2009

நாகை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் விஜயன் வெற்றி!

நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் தொகுதியில் திமுக வேட்பாளர் விஜயன் 47 ஆயிரத்து 962 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் விஜயன் 3 லட்சத்து 69 ஆயிரத்து 915 வாக்குகள் பெற்றார். இது இரண்டாவது இடத்தை பிடித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் 3 லட்சத்து 21 ஆயிரத்து 953 வாக்குகள் அதிகமாகும்.

மூன்றாவது இடத்தை பிடித்த் தேமுதிக வேட்பாளர் 51 ஆயிரத்து 376 வாக்குகள் பெற்றுள்ளார். இது திமுக வேட்பாளரின் வெற்றி வித்தியாசத்தை விட சுமார் 3 ஆயிரத்து 414 வாக்குகள் அதிகமாகும்.

வெற்றி பெற்ற நாகை தொகுதி வேட்பாளர் திரு. AKS விஜயன் அவர்களுக்கு நமது இணையதள குழுமத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி - முதல் 5 மதிப்பெண்கள் பெற்ற நமதூர் மாணவ மாணவியர்



+2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்..! வாழ்வின் வெற்றிப் பயணத்தை மேலும் தொடர நமது www.koothanallur.co.in இணையதள குழுவின் சார்பில் மனமார வாழ்த்துகின்றோம்.

Thursday, May 14, 2009

இன்று (14/05/2009) +2 (பன்னிரெண்டாம் வகுப்பு) தேர்வு முடிவுகள்

என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? - பேராசிரியர். ஆபிதீன்

பொதுவாக நமதூர் மாணவர்கள் +2 தேர்வு முடிவுகள் வந்த பின்னரே என்ன படிப்பது, எங்கு படிப்பது என்பது பற்றி யோசிக்கின்றனர். தெளிவில்லாத முடிவினாலும் அல்லது சரியான வழிகாட்டி இல்லாமையாலும் குழப்பமடைகின்றனர். பின்னர் அவசர அவசரமாக ஏதோ ஒருபாடப்பிரிவுகளை தேர்ந்தெடுத்து படிப்பை முடிக்கும் முன்னரே அதில் ஆர்வமி்ல்லாமல் போய் பாதியில் நிறுத்திவிடுகின்றனர்.

அதற்கு ஒரே தீர்வு, நீங்கள் (மாணவர்கள்) ஆர்வமாக இருக்கும் பல துறைகள், பல கல்லூரிகளில் பட்ட படிப்புகளாகவும் (Degree Courses) , பட்டயப் படிப்புகளாகவும் (Diploma Courses)பல காலியிடங்களுடன் உங்களுக்காக காத்திருக்கின்றன. அவற்றில் உங்களுடைய ஆர்வத்திற்கேற்ற பாடப் பிரிவுகளை முழு திருப்தியுடன் தேர்ந்தெடுத்து முழு முனைப்புடன் படித்து சாதித்துக் காட்டுங்கள்; ஊருக்கு பெருமை சேருங்கள்!

கீழே கொடுக்கப்பட்டுள்ள PDF File -ல் பல பாடப்பிரிவுகள் மற்றும் கல்லூரிகள் பற்றிய முழுவிவரங்களுடனும், முகவரியுடனும் விவரிக்கிறார் பேராசிரியர். S.ஆபிதீன் (Dr. ஜாஹிர்உசேன் கல்லூரி, இளையான்குடி)

(Click here to download Education Guide)

-------------------------------------------------------

Wednesday, May 13, 2009

இன்று இறுதிக்கட்ட ஓட்டுப் பதிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இறுதிக்கட்ட ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதில், 40 தொகுதிகளில் 852 வேட்பாளர்கள் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது. அமைதியான ஓட்டுப் பதிவுக்குத் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷனும் போலீசாரும் செய்து, தயார் நிலையில் உள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் ஐந்து கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி கடந்த மாதம் 16, 23, 30 மற்றும் இம்மாதம் 7ம் தேதிகளில் நான்கு கட்ட ஓட்டுப் பதிவு நடந்து முடிந்தது. இந்நிலையில், ஐந்தாம் கட்டமான இறுதிக்கட்ட ஓட்டுப் பதிவு இன்று நடக்கிறது. தமிழகம், புதுச்சேரி, ஜம்மு- காஷ்மீர், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களில், 86 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. இத்தொகுதிகளில் 1,432 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதில், பெண் வேட்பாளர்கள் 93 பேர்; 779 பேர் சுயேச்சைகள். தமிழகத்தில் அதிகபட்சமாக தென்சென்னை லோக்சபா தொகுதியில் 43 வேட்பாளர்களும், கரூரில் 38 வேட்பாளர்களும், மத்திய சென்னையில் 37 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். தமிழகத்திலேயே மிகக் குறைந்த எண்ணிக்கையில் வேட்பாளர்கள் போட்டியிடுவது நாகை மக்களவைத் தொகுதியில்தான் என்பது குறிப்பிட்டத்தக்கது. ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 632 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதல் முறையாக, இத்தேர்தலில் 7,115 மைக்ரோ பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 824 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 4.16 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். 52 ஆயிரத்து 175 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 7 மணிக்கு துவங்கும் ஓட்டுப் பதிவு, மாலை 5 மணியுடன் முடிகிறது. முடியும் நேரத்தில் வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தால், அவர்களுக்கு டோக்கன் அளித்து, ஓட்டு போட அனுமதியளிக்கப்படும்.தேர்தலில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க, ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 133 கம்பெனிகள் மத்திய போலீஸ் படையினர் பதட்டமான ஓட்டுச் சாவடிகளில் பணியாற்றுவர். இதுதவிர, தமிழக போலீசார் 58 ஆயிரத்து 257 பேரும், முன்னாள் ராணுவத்தினர் 20 ஆயிரம் பேரும், ஊர்க்காவல் படையினர் 5,000 பேரும், ஓய்வுப் பெற்ற போலீசார் 1,000 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தல், நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. தேசிய அளவில் பா.ஜ., ஆட்சியா, காங்கிரஸ் ஆட்சியா அல்லது மூன்றாவது அணி ஆட்சியா என்பதை மக்கள் முடிவு செய்யப் போகின்றனர். தமிழகத்தில் சிதம்பரம், மணிசங்கர் அய்யர், இளங்கோவன், பாலு, ராஜா, பழனிமாணிக்கம், வேலு ஆகிய மத்திய அமைச்சர்களும், வைகோ, தா.பாண்டியன், இல.கணேசன், தங்கபாலு, அழகிரி, திருநாவுக்கரசர் போன்ற வி.ஐ.பி.,க்களும் களமிறங்கியுள்ளனர்.இவர்களது எதிர்காலம் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் எதிர்காலமும் இன்று முடிவு செய்யப்பட உள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதும், அ.தி.மு.க., தலைமையிலான அணியை மத்தியில் ஆட்சியில் அமர்த்த மக்கள் விரும்புகின்றனரா என்பதும் இத்தேர்தலில் முடிவு செய்யப்பட உள்ளது.மேலும், விஜயகாந்தின் தே.மு.தி.க.,வுக்கு உள்ள செல்வாக்கு மற்றும் சரத்குமார், கார்த்திக் போன்றவர்களின் செல்வாக்கும், மனித நேய மக்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கும் இத்தேர்தலில் தெரியவரும். காரணம், லோக்சபா தேர்தலில் இக்கட்சிகள் முதல் முறையாக களமிறங்கியுள்ளன.

தேர்தலில் வெற்றியை பெற்றாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் ஜெயலலிதா, ஸ்டாலின், விஜயகாந்த், கனிமொழி போன்றவர்கள் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர். வழக்கமாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்யும் முதல்வர் கருணாநிதி, உடல்நிலை சரியில்லாததால் இம்முறை திருச்சி கூட்டத்தில் மட்டுமே பங்கேற்றார். மேலும், சோனியா, ராகுல் ஆகியோர் ஒரே நாளில் தமிழக பிரசாரத்தை முடித்துக் கொண்டனர். அத்வானி, நரேந்திர மோடி போன்றவர்கள், தங்கள் கட்சியினர் போட்டியிடும் முக்கிய தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்தனர்.மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய தலைவர்களும் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்துள்ளனர். இத்தேர்தலில் இலங்கை பிரச்னையை அரசியல் கட்சிகள் கையில் எடுத்தன. அது எந்தளவுக்கு எதிர்க்கட்சிகளுக்கு கைகொடுக்கும் என்பது, 16ம் தேதி முடிவுகள் வெளியாகும்போது தெரிந்துவிடும்.

-நன்றி / தினமலர்.காம்

Monday, May 11, 2009

Friday, May 8, 2009

போடுங்கம்மா ஓட்டு... ஊரு நலனை பார்த்து...

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற இருக்கின்றது.

5 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் தமிழகத்தில் இறுதி கட்டமாக மே மாதம் 13 ஆம் தேதி (புதன் கிழமை) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியிலும் அதே தினத்தில் வாக்குப் பதிவு நடக்கிறது.

நமதூரின் இஸ்லாமிய பாரம்பரியத்தையும், சமூக ந‌லனையும் காக்கும் மற்றும் அனைத்து துறைகளிலும் நமதூர் சமுதாய மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள சரியான கட்சிக்கு... சொந்த கொள்கை, அணி, கட்சி மற்றும் அமைப்பு வேற்றுமைகளை மறந்து, ஊரின் நலன் க‌ாக்கும் நியாயமான திறமையான வேட்பாளருக்கு வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.

என்ன மே 13 ஆம் தேதி வாக்களிக்க தயாராகி விட்டீர்களா?

வாக்கை மறுக்க '49ஓ' படிவம் - தேர்தல் ஆணையம்


வாக்குப்பதிவு செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள் 49ஓ படிவத்தை நிரப்பி கொடுக்கலாம். தாங்கள் ஏன் வாக்களிக்க விரும்பவில்லை என அவர்கள் தங்களது கருத்தை 17ஏ படிவத்தில் நிரப்பி கொடுக்கலாம் என டெல்லி தேர்தல் ஆணையாளர் ஜே.கே.சர்மா தெரிவித்துள்ளார்.

வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் குறித்து டெல்லி தேர்தல் அதிகாரி ஜே.கே.சர்மா கூறுகையில்,
யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என நினைக்கும் வாக்காளர்கள் வாக்குக் சாவடிக்குச் சென்று ஓட்டுபோடாமல் இருக்க தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமையை பயன்படுத்தலாம். அவர்கள் வாக்குச்சாவடிகளில் இருக்கும் 49ஓ படிவத்தை வாங்கி அதை நிரப்பி அங்கிருக்கும் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

சட்டம் வாக்காளர்களுக்கு வாக்களிக்காமல் இருக்கும் உரிமையை வழங்குகிறது. ஆனால் அந்த உரிமையை பதிவு செய்யும் வசதி தற்போது வாக்குப் பதிவு எந்திரத்தில் இல்லை என்பதால் படிவத்தை கேட்டு வாங்கி கொள்ளவும்.

படிவத்தை கேட்கும் வாக்காளர்களுக்கு அதை கொடுக்கும்படி வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். டெல்லியில் இந்த தேர்தலில் எத்தனை பேர் இந்த படிவத்தை கேட்கிறார்கள் என்பது கண்டறிய திட்டமிட்டுள்ளோம்.

1961ம் ஆண்டின் தேர்தல் நடத்தை விதியின்படி வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் அதை பதிவு செய்யலாம். தாங்கள் ஏன் வாக்களிக்க விரும்பவில்லை என்ற கருத்தை அவர்கள் படிவம் 17ஏல் பதிவு செய்யலாம். பின்னர் அவர்களிடம் இருந்து அதில் கையெழுத்து அல்லது விரல் ரேகை பெறப்படும்.

வாக்களிக்க விருப்பம் இல்லாதவர்கள் எண்ணிக்கையானது வெற்றி பெற்ற வேட்பாளருக்கும் இரண்டாவது இடத்தை பிடித்த வேட்பாளருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக இருந்தாலும் தேர்தல் செல்லாது என கூற முடியாது என்றார்.

- நன்றி / தினமணி.காம்

Wednesday, May 6, 2009

திமுக வேட்பாளர் கூத்தாநல்லூர் நகரில் வாக்கு சேகரிப்பு





பிளஸ் 1: சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

திருவாரூர், மே 6: திருவாரூர் மாவட்ட அளவில் பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.

திருவாரூர் மாவட்ட அளவில் 9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து ஏ.எஸ். ராதாகிருஷ்ணன் பரிசுகள் வழங்கினார்.

பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் விவரம் (அடைப்புக்குள் பெற்ற மதிப்பெண்கள்) :
அரசுப் பள்ளி அளவில் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். செல்வபாரதி (1,069), நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ. ஆயிஷா ஷப்ரீன் (1,067), கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜி. திவ்யா (1,032) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

அரசு உதவிபெறும் பள்ளி அளவில் மன்னார்குடி தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி தி. தாபியா (1,107), திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எஸ். சொப்னா (1,100), ஆர். லெட்சுமி பிரியா (1,090) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

மெட்ரிக் பள்ளி அளவில் புனித ஜூட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி டி. பாரதி (1,116), நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஏ. கோகிலா (1,086), நீடாமங்கலம் நீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.எச். முகமது உசைன் (1,081) ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர்.

9-ம் வகுப்பு: அரசு பள்ளி அளவில் செருவாமணி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் வே. ஆதிகேசவன் (566), அத்திக்கடை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர் கே. குமரேசன் (564), விளமல் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் ம. சுப்பையன் (560), கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.ஏ. முர்ஷிதா சுமின் (560) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

அரசு உதவி பெறும் பள்ளிகள் அளவில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர் ஸ்ரீசக்தி (542), மஞ்சக்குடி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சி. சில்வியா (539), ஆர்.எம். புவனேஸ்வரி (536) ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர்.

இவ்விழாவில் முனைவர் செல்வசேகரன், ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆர். ரத்தினகுமாரி, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் எம். ராஜமாணிக்கம் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

- நன்றி / தினமணி.காம்

அரசு பேருந்து மோதி ஒருவர் மரணம்

திருவாரூர், மே 5: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே அரசுப் பேருந்து மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் திங்கள்கிழமை இரவு இறந்தார்.

நாகை மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் குருமூர்த்தி (32). இவர் ஒரு மோட்டார் சைக்கிளில் கூத்தாநல்லூர் அருகிலுள்ள குடிதாங்கிச்சேரி அருகே சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மோதியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் குருமூர்த்தி இறந்தார்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

- நன்றி/தினமணி.காம்

Tuesday, May 5, 2009

நாகை மக்களவை தொகுதி / வேட்பாளர்கள் பயோடேட்டா



நாகை மக்களவை தொகுதி: திமுக வேட்பாளர்- ஏ.கே.எஸ்.விஜயன்

நாகப்பட்டினம்: திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.கே.எஸ்.விஜயன், 3வது முறையாக நாகப்பட்டினம் தனி தொகுதியில் போட்டியிடுகிறார்.

48 வயதாகும் விஜயனின் தொழில் விவசாயம். இவரது தந்தை சுப்பையா முன்னாள் திமுக எம்.எல்.ஏ ஆவார்.

1991ம் ஆண்டு ஒன்றியத் துணைச் செயலாளராக, ஒன்றியச் செயலாளராக இருந்தார். 2004ம் ஆண்டு நாகப்பட்டனம் மாவட்ட திமுக செயலாளராக நிறுத்தப்பட்டார். 1999ம் ஆண்டு முதல் நாகை தொகுதியின் எம்.பியாக உள்ளார்.

3வது முறையாக எம்.பியாக காத்திருக்கும் விஜயன், மக்களிடையே நல்ல பெயர் பெற்றவர். இடதுசாரிகள் ஆதிக்கம் உள்ள இந்தத் தொகுதியில் அவர்களை சமாளிக்கும் திறனும் மக்கள் செல்வாக்கும் கொண்ட வேட்பாளர் என்பதால் இவர் இந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட 2 மாதத்துக்கு முன்பே முடிவாகிவிட்டது.

மக்களவையிலும் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்கியவர்.


நாகை மக்களவை தொகுதி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் -எம். செல்வராசு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் தனி தொகுதியில் 3 முறை எம்.பியாக இருந்த எம்.செல்வராஜ் மீண்டும் அங்கு போட்டியிடுகிறார்.

நாகை மாவட்டம் நீடாமங்கலம், கப்பலுடையான் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு கமலவதனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

மாநில நிர்வாகக் குழு உறுப்பினராகவும், நாகை மாவட்ட
சிபிஐ செயலாளராகவும் இருக்கிறார்.

நாகை தொகுதியில் ஐந்து முறை போட்டியிட்டுள்ளார் செல்வராஜ். இதில் 1989, 1996, 1998 ஆகிய தேர்தல்களில்
வெற்றி பெற்று எம்.பியானார்.

தற்போது 6வது முறையாக போட்டியிடுகிறார். 4வது முறையாக எம்.பி ஆவேன் என்ற நம்பிக்கையி்ல் பணிகளைத் தொடங்கியுள்ளார்.


நாகை மக்களவை தொகுதி: தேமுதிக வேட்பாளர்- மகா. முத்துக்குமார்

நாகை: ரியல் எஸ்டேட் தொழிலை முதன்மையாக பார்த்து வரும் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்த மகா. முத்துக்குமார், நாகை தொகுதி தேமுதிக வேட்பாளராக களம் புகுந்துள்ளார்.

36 வயதே ஆகும் முத்துக்குமார் பி.ஏ. படித்த பட்டதாரி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இவரது முதன்மைத் தொழில் ரியல் எஸ்டேட். அதில் கிடைத்த பெயருடன் விஜயகாந்த்தின் தேமுதிக வில் இணைந்தார். தற்போது திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.

ரியல் எஸ்டேட்டில் இருப்பதால் நாகை தொகுதி முழுக்க இவருக்கு அத்துப்படியாம்.

தனக்காக நிறையப் பேர் வாக்கு சேகரித்து வருவதாக கூறும் முத்துக்குமார், விஜயகாந்த்தின் பிரசாரம் தனக்கு கூடுதல் பலத்தைத் தரும், நிறைய வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.

- நன்றி / தட்ஸ்தமிழ்.காம்

Monday, May 4, 2009

இன்று பள்ளிக்கூடங்களில் தேர்வு முடிவுகள்

கூத்தாநல்லூரில் திமுக மகளிரணியினர் தேர்தல் பிரச்சாரம்!

திருவாரூர் மாவட்டத்தில் மே 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

திருவாரூர், மே 4:
முத்துப்பேட்டை தர்ஹா கந்தூரி விழாவையொட்டி, வருகின்ற மே 6-ம் தேதி திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருத்துறைப்பூண்டி வட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை ஹக்கீம் ஷெய்கு தாவூது காமில் வலியுல்லாஹ் தர்ஹாவில் சிறப்பு வாய்ந்த கந்தூரி விழா மே 5-ம் தேதி இரவு நடைபெறுகிறது.

இதையொட்டி மே 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 6-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 6-ம் தேதி அரசு கருவூலம் மற்றும் சார் நிலை கருவூலங்கள் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறை அரசுத் தேர்வுகள், நேர்காணல்கள் மற்றும் வங்கிகளுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

-நன்றி/தினமணி.காம்

Sunday, May 3, 2009

வாக்களிப்பதின் அவசியம்!

firos

- முஹம்மது பைரோஸ் கான், கூத்தாநல்லூர்.

ரண்டாவது கட்ட நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்துவிட்டது. தமிழகத்தில் மே 13-ல் வாக்குப்பதிவு. இந்தச் சூழலில் குடிமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

நாட்டில் பலர் தேர்தலில் வாக்களிப்பதால், தங்களுக்கு என்ன பயன் இருக்கிறது என்ற மனநிலையில் உள்ளனர். இங்கு முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். மக்களுக்கு தேர்தலில் வாக்களிக்க ஆர்வம் ஏன் குறைந்து வருகிறது என்பதை அறிந்தால், மக்களின் மனநிலைப் புரிந்து விடும். சிலரை கேட்டால் என்ன சொல்லுவார்கள்... தான் ஓட்டுப் போடுவதால் தனக்கு என்ன இலாபம் இருக்கிறது என்று கேட்பார்களே தவிர, வாக்களிப்பதால் நாட்டுக்கு என்ன நன்மை இருக்கிறது என்று நாட்டை பற்றி கவலை படமாட்டார்கள்.

மக்களின் மனமறிந்து செயல்படும் விதமாக சில அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து வாக்குகளை பெற முந்தி கொள்கின்றன என்பதை நாம் பத்திரிக்கைகள் வாயிலாக அறிகின்றோம். இந்த நிலை மாற வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பிரதிநிதியாக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை சுய சிந்தனையோடு முடிவு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு முறை நடக்கும் தேர்தலின் போதும் வாக்கு சதவிகிதம் குறைந்து வருவதை காணுகிறோம். 1984-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் அதிக பட்சமாக 63.56% வாக்குகள் பதிவாகியுள்ளன. கடைசியாக 1999 நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் 59.99% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 1984-ம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலை 1999-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.57% சதவிகித வாக்குகள் குறைந்துள்ளன.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் மேலே கூறியதைப்போல மக்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது என்பதை உணரலாம். இன்று பலர் சொல்வதை கேட்டிருப்போம், "யாரு ஆட்சிக்கு வந்தால் என்ன சார், நாம உழைத்தால்தான் உணவு கிடைக்கும்; குடும்பத்தை காப்பாற்ற முடியும்," என்று சொல்லுவார்கள். படிக்காத, பாமர மக்கள் தான் இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்று நினைத்தால், அது தவறு. இன்று படித்தவர்களும் அதே கருத்தை தான் சொல்லுகிறார்கள். இன்னும் சில பேர் அரசியல்வாதிகளையும், ஆட்சியாளர்களையும் குறை சொல்லி கொண்டிருப்பார்கள். இதையெல்லாம் கூர்ந்து கவனித்தால் இன்று பலரிடம் தேர்தல் பற்றிய விழிப்பு உணர்வு இல்லை என்றே கூறலாம்.

நாட்டில் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதிகளும் தங்களின் பணிகளை செய்து கொண்டுதான் வருகிறார்கள். அதில் சிலர் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் சார்ந்துவிடுகிறது. மக்களின் வாழ்க்கை தரம் உயருவதற்கும், நாடு வல்லரசாக உருவாகி கொண்டிருக்கும் நிலைக்கும் ஆட்சியாளர்களே முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதில் அதிகாரிகள், விஞ்ஞானிகளின் பங்கும் உள்ளது. ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்படி பார்க்கையில், சிறந்த நிர்வாக திறமையுள்ள ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது மக்களின் கடமையாக உள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காகவும் மக்களின் நலனுக்காகவும் இதுவரை எவ்வளவோ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன, நிறைவேற்றப்பட்டும் வருகின்றன. அதன் மூலம் அனைவரும் பலன் அடைந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தபோதிலும் தனக்காக தனிப்பட்ட முறையில் அரசு என்ன செய்தது என்பதை பற்றி சுயநலத்தோடு சிந்திக்காமல் நாட்டுக்காக என்ன செய்கிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.

ஒரு நாடு வளர்ச்சி பெறுவதற்கு அந்த நாட்டில் அமையும் ஆட்சி முக்கியமான ஒன்றாக இருக்கிறது. நாடு வளர்ச்சி பெற்றால் அந்த நாட்டின் பொருளாதாரம் உயருகிறது. இதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. வேலை வாய்ப்பு அதிகரித்தால் தனி நபர் வருமானம் உயருகிறது. தனி நபர் வருமானம் உயர்ந்தால், நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மகிழ்ச்சி அடைகிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டும்.

நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லாம் ஆட்சியாளர்களின் கையில் இருக்கும் பட்சத்தில் சிறந்த ஆட்சியாளரை தேர்ந்தெடுக்க அனைவரும் கடமைப்பட்டிருக்கிறோம். ஓட்டு போடுவது ஜனநாயக கடமையாகும். மக்கள் தீர்ப்பே மகத்தான தீர்ப்பு என்பதற்கு இணங்க, மக்களின் ஒவ்வொரு வாக்குகளும் நமது நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.

ஒரு மாணவரின் எதிர்காலம் எவ்வாறு ஆசிரியரின் கையில் உள்ளதோ, அதுபோல நாட்டின் எதிர்காலம் நாட்டில் வாழும் மக்களின் கையில் இருக்கிறது. எனவே தேர்தல் நடைபெறும் அன்று அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.

நன்றி / விகடன்.காம்

கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் நிர்வாகக்குழு கூட்டத்தில்...

கடந்த 19/4/2009 அன்று நடைபெற்ற கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாயில் நிர்வாகக்குழு கூட்டத்தில்...

பெ.அ. முஹம்மது ரஃபீயுதீன் ஜாமியா துவக்கப்பள்ளி தாளாளராகவும்,
ஹாஜி S.E.M.காதர் ஹூசைன் மத்ரஸா நாஜிராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

N.M.A. சிஹாபுதீன்,
J.M.A. ஷேக் அப்துல் காதர்,
ஜ.மு.ரஹ்மத்துல்லாஹ்,
A.S.M.அப்துல் ரெஜாக்,
R.A.அப்துல் கரீம்,
A.A.அப்துல் ரவூப்,
S.A.ஜபருல்லாஹ் கான்
ஆகிய 7 பேர் கொண்ட பஞ்சாயத்து குழுவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது.

நன்றி / தகவல்: ஜ.மு.ரஹ்மத‌்துல‌்லாஹ‌்

Blog Archive