கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தேர்தல் கடந்த 07/04/2009 அன்று நடைபெற்று முடிவுகள் அதே தினத்தன்று இரவு வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிர்வாகிகள் அவர்களுக்குள்ளாகவே நிர்வாகக்குழு பதவிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து 15 நிர்வாகிகளும் வக்பு வாரியத்தின் அனுமதிபடியும், அதே சமயம் பெரியப்பள்ளிவாயில் By Law வில் அனுமதிக்கப்பட்ட படியும் தங்களுக்குள் தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், ஜாமியா பள்ளிக்கூட தாளாளர் மற்றும் பெரியப்பள்ளி மத்ரஸா நாஜிர் பதவிகளை தேர்ந்தெடுத்து கொள்வதென முடிவு செய்தனர்.
இந்நி்லையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிர்வாகிகளும் தங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடு ஏற்படாத வகையிலும், வரும் காலங்களில் ஏற்படப்போகும் அடுத்த நிர்வாக அமைப்பிற்கு முன்னுதாரணமாகவும், நிர்வாகக்குழு பதவிகளை தங்களுக்குள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு வாக்களித்தனர். இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிகள் முடிவு செய்யப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
நிர்வாகிகளுக்குள் நடந்த ரகசிய வாக்கெடுப்பில்...
தலைவர் : N.M.A. சிஹாபுதீன்
துணை தலைவர் : கோ.அ. பரக்கத்துல்லாஹ்
செயலாளர் : J.M.A. ஷேக் அப்துல் காதர்
துணை செயலாளர் : தி.மு. தமீஜூத்தீன்
ஆகியோர் நான்கு பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜாமியா பள்ளிக்கூட தாளாளர் பதவி பெ.அ. முஹம்மது ரஃபீயுதீன் அவர்களுக்கும், பெரியப்பள்ளி மத்ரஸா நாஜிர் பதவி A.M. அப்துல் ஹக்கீம் அவர்களுக்கும் ஏனையோர் நிர்வாகக்குழு உறுப்பினராக பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 25 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி செய்யப்பட்ட அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த புதிய கூத்தாநல்லூர் ஜமாஅத் நிர்வாகிகளின் சிறந்த நிர்வாகத்தினாலும், சமூக கட்டுப்பாட்டினாலும் வருகின்ற 3 வருடங்கள் நமதூர் அனைத்து துறையிலும் மேன்மை பெற்று சிறந்து விளங்க நமது www.koothanallur.co.in இணையதள குழுமத்தின் சார்பில் வல்ல நாயன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
- ஆசிரியர் / www.koothanallur.co.in
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2009
(208)
-
▼
April
(32)
- நாளிதழ் செய்திகள் / 30 ஏப்ரல் 2009
- நாகை தொகுதி: மக்களவைத் தேர்தல் களத்தில் 7 வேட்பாளர...
- லெட்சுமாங்குடி / ஜன்னத் நகரில் "அல்-மத்ரஸத்துல் அஹ...
- இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி லெட்சு...
- நாகை மக்களவைத் தொகுதிக்கு 13 பேர் வேட்பு மனுத் தாக...
- இந்திய கம்யூ. வேட்பாளர் கூத்தாநல்லூர் நகரில் வாக்க...
- இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேலை நிறுத்தம்
- நாகை: தேமுதிக வேட்பாளர் மனுத் தாக்கல்
- நாகை தொகுதி: திமுக, இந்திய கம்யூ., பகுஜன் சமாஜ் மற...
- மக்களவைத் தேர்தல் 2009 - ஓர் பார்வை!
- கூத்தாநல்லூர் திமுக - தேர்தல் முன்னேற்பாடுகள்
- No title
- No title
- கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகக்குழு பதவி ...
- லெட்சுமாங்குடி வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- No title
- கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகக்குழு பதவி ...
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் அதிக வாக...
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் அதிக வாக...
- No title
- வக்ஃபு வாரியத்தினால் வெளியிடப்பட்ட கூத்தாநல்லூர் ப...
- பொதக்குடியில் மீலாது விழா
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் / 2009
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் முடிவுகள்.
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் களத்தின் புகைப்படங்கள்
- No title
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்
- No title
- No title
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் களம் 2009
- கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாசல் வக்ஃபு நிர்வாக கமிட்...
- KNR JAMAATH @ BRUNEI
-
▼
April
(32)
3 comments:
The news that Correspondent of Jamia School and Nazir of Madrasa have been assigned to Janab P.M.Rafiudeen and Janab A.M.Abdul Hakeem and an Advisory Committee of 25 Persons is going to formed is completely false. No such decision have been made in the Administrative Committee. In fact, the Correspondent and the Nazir will be appointed in the administrative Committee meeting to be convened in future. There is No chance of forming an Advisory Committee which is not contemplated in the Bye-Laws. Therefore please remove the false news immediately.I Condemn the author of the false news.
J.M.Rahmathullah
மதிப்பிற்குரிய ஜனாப். ஜ.மு.ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் ....
நமது இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்...
"ஜாமியா பள்ளிக்கூட தாளாளர் பதவி பெ.அ. முஹம்மது ரஃபீயுதீன் அவர்களுக்கும், பெரியப்பள்ளி மத்ரஸா நாஜிர் பதவி A.M. அப்துல் ஹக்கீம் அவர்களுக்கும் ஏனையோர் நிர்வாகக்குழு உறுப்பினராக பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 25 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று மட்டுமே செவிவழி செய்தியாக கிடைத்த உறுதிபடுத்தப்படாத தகவலாகவே குறிப்பிட்டுள்ளோம்.
எனும்போது இதில் மாற்றங்கள் நிகழவோ அல்லது நடக்காமல் போகவோ வாய்ப்பு இருப்பதாகவே தாங்கள் இதனை கொள்ள வேண்டும்.
மேலும் நான் தங்களிடம் மேலதிக விவரங்கள் கேட்டு உங்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது தாங்கள் "அதுதான் தாங்கள் அனைத்து செய்திகளையும் மற்றவர்களிடமிருந்து கேட்டறிந்துவிட்டீர்களே" என்பதுடன் முடித்துக் கொண்டீர்கள்.
எனவே வெளிநாட்டில் வசிக்கும் நாங்கள் தங்களை போன்ற விசயமறிந்த பெரியோர்களிடமிருந்து மட்டுமே இதுபோன்ற செய்திகளை விவரமாக தெரிந்து கொள்ள இயலும். எனவே தாஙகள் தயவுகூர்ந்து இனிவரும் காலங்களில் ஊர் செய்திகளை விவரமாக ஈமெயில் மூலமோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரியப்படுத்துமாறு வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர்-www.koothanallur.co.in
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....
பெரியப்பள்ளிவாசல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்காததும் தவறானதுமான செய்தியை தந்தவர்களைத்தான் கண்டனம் செய்திருந்தேன். தாங்கள் என்னிடம் பேசியபொழுது தாளாளர், நாஜிர் பதவிகள் பற்றியோ "ஆலோசனை குழு" பற்றியோ என்னிடம் தகவல் கேட்கவில்லை எனப்தை நினைவூட்டுகிறேன். தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர் பதவிகளுக்கு தேர்தெடுக்கப்பட்ட செய்தியை மட்டுமே என்னிடம் உறுதிப்படுத்திக்கொண்டீர்கள். எனவேதான் தவறான செய்தி பற்றி என்னுடைய கண்டனத்தை தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடந்த 19/4/2009 அன்று நடைபெற்ற நிர்வாகக்குழு கூட்டத்தில் பெ.அ. முஹம்மது ரஃபீயுதீன் ஜாமியா துவக்கப்பள்ளி தாளாளராகவும், ஹாஜி S.E.M.காதர் ஹூசைன் மத்ரஸா நாஜிராகவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் N.M.A. சிஹாபுதீன், J.M.A. ஷேக் அப்துல் காதர். ஜ.மு.ரஹ்மத்துல்லாஹ், A.S.M.அப்துல் ரெஜாக், R.A.அப்துல் கரீம், A.A.அப்துல் ரவூப், S.A.ஜபருல்லாஹ் கான் ஆகியோர் அடங்கிய பஞ்சாயத்து குழுவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியை வெளியிட்டு சரியான செய்தியை பொது மக்கள் அறிந்து கொள்ள வழி செய்யுங்கள்.
ஜ.மு.ரஹ்மத்துல்லாஹ்
Post a Comment