::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, April 23, 2009

மக்களவைத் தேர்தல் 2009 - ஓர் பார்வை!

நமது கூத்தாநல்லூர் பகுதியை உள்ளடக்கிய நாகை பாராளுமன்ற தொகுதி 1957-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்த நமதூர், தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் பிரிக்கப்பட்டு திருவாரூர் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளது. இப்பாராளுமன்ற தேர்தலில் நமதூர், திருவாரூர் சட்டமன்ற ‌தொகுதியில் சேர்க்கப்பட்ட பின்னர் பங்கேற்கும் முதல் தேர்தல் களம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப காலத்தில் இந்த
நாகை பாராளுமன்ற தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது. பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது.

நாகை பாராளுமன்ற தொகுதியில் இதுவரை நாகை, திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது.

தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி(தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.

நாகை தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

நாகை பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 3 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த தேர்தல் நிலவரம்

ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) 4,63,389
அர்ச்சுனன் (அதிமுக) - 2,47,166
வெற்றி வித்தியாசம் - 2,16,223 வாக்குகள்.

இதுவரை எம்.பி.ஆக இருந்தவர்கள்

1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரஸ்
1962 - கோபால்சாமி - காங்கிரஸ்
1967 - சாம்பசிவம் - காங்கிரஸ்
1971 - காத்தமுத்து - சிபிஐ
1977 - எஸ்.ஜி. முருகையன் - சிபிஐ
1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக
1984 - மகாலிங்கம் - அதிமுக
1989 - செல்வராஜ் - சிபிஐ
1991 - பத்மா - காங்கிரஸ்
1996 - செல்வராஜ் - சிபிஐ
1998 - செல்வராஜ் - சிபிஐ
1999 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
2004 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக

இத்தேர்தலில் பங்கேற்க அனைத்து கட்சி ‌
வேட்பாளர்களும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

நமது தமிழக இஸ்லாமிய சமுதாயத்தில் அரசியல் எழுச்சி ஏற்பட்டுள்ள இச்சூழ்நி்லையில் நமதூரின் இஸ்லாமிய பாரம்பரியத்தையும், சமூக ந‌லனையும் காக்கும் மற்றும் அனைத்து துறைகளிலும் நமதூர் சமுதாய மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள கட்சியை இனங்கண்டு வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.

- ஆசிரியர் /www.koothanallur.co.in

No comments:

Blog Archive