::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Sunday, April 26, 2009

நாகை மக்களவைத் தொகுதிக்கு 13 பேர் வேட்பு மனுத் தாக்கல்

திருவாரூர், ஏப். 24: நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 13 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் ஏப். 17-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இதில் திமுக சார்பில் ஏ.கே.எஸ். விஜயன், இவருக்கு மாற்று வேட்பாளராக தாழை. மு. அறிவழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம். செல்வராசு, இவருக்கு மாற்று வேட்பாளராக க. சுஜாதா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோ. வீரமுத்து, இவருக்கு மாற்று வேட்பாளராக பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் மகா. முத்துக்குமார், மாற்று வேட்பாளராக என். மோகன்குமார், சுயேச்சையாக முனுசாமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான வெள்ளிக்கிழமை எம். வீராசாமி, எஸ். ராஜசேகரன், டி. அருண்குமார் ஆகியோர் சுயேச்சைகளாகவும், மக்கள் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஆர். தேவதாஸ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். நாகை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

- நன்றி / தினமணி.காம்

No comments:

Blog Archive