::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, April 29, 2009

நாகை தொகுதி: மக்களவைத் தேர்தல் களத்தில் 7 வேட்பாளர்கள்

திருவாரூர், ஏப். 29: மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் ஏப்.17-ம் தேதி தொடங்கியது. இதில் நாகைத் தொகுதியில் முக்கிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் என மொத்தம் 13 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

சனிக்கிழமை வேட்புமனுப் பரிசீலனையில் பிரதான கட்சிகளின் நான்கு மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் எஸ். ராஜசேகரன், டி. அருண்குமார் ஆகியோர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றனர்.

இதையடுத்து, இறுதி வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் சின்னத்தை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரன் திங்கள்கிழமை மாலை அறிவித்தார்.

இதன்படி போட்டியிடும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் (அடைப்புக்குள்):

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -எம். செல்வராசு (தானியக் கதிர்களும் அரிவாளும்),
திமுக -ஏ.கே.எஸ். விஜயன் (உதயசூரியன்),
பகுஜன் சமாஜ் கட்சி -கோ. வீரமுத்து (யானை),
தேமுதிக -ம. முத்துக்குமார் (முரசு),

சுயேச்சைகள் -
ஆர். தேவதாஸ் (ரயில் என்ஜின்),
வி. முனுசாமி (தொலைக்காட்சிப் பெட்டி),
ப. வீராசாமி (மட்டைப் பந்தடி வீரர்)

ஆகிய 7 பேர்
நாகை தொகுதியில் மக்களவைத் தேர்தலின் களத்தில் வேட்பாளராக உள்ளனர்.

- நன்றி / தினமணி.காம்

No comments:

Blog Archive