::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, April 25, 2009

இந்திய கம்யூ. வேட்பாளர் கூத்தாநல்லூர் நகரில் வாக்கு சேகரிப்பு

நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம். செல்வராசு திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

வேட்பாளர் எம். செல்வராசு: நான் இத்தொகுதியில் ஏற்கனவே 3 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போது பல்வேறு திட்டங்களை இப்பகுதிக்கென மக்களவையில் கோரிப் பெற்றுள்ளேன். இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்படவும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.

பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வெ. வீரசேனன், துணைச் செயலர் வை. செல்வராஜ், மதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ. முப்பால், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ். கமலவதனம், மதிமுக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலர் ப. சீனுவாசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி.எஸ். மாசிலாமணி மற்றும் பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

-நன்றி / தினமணி.காம்

No comments:

Blog Archive