::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, April 28, 2009

லெட்சுமாங்குடி / ஜன்னத் நகரில் "அல்-மத்ரஸத்துல் அஹ்மதிய்யா" அரபி பாட சாலை திறப்பு விழா

லெட்சுமாங்குடி, ஏப் 28

கூத்தாநல்லூர் அல்-அமான் இளைஞர் இயக்கத்தின் சார்பாக நேற்று 27/04/2009 (திங்கட் கிழமை) காலை 10.30 மணியளவில் லெட்சுமாங்குடி / ஜன்னத் நகரில் "அல்-மத்ரஸத்துல் அஹ்மதிய்யா" அரபி பாட சாலை திறக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவுக்கு அல்-அமான் இளைஞர் இயக்க கெளரவ ஆலோசகர் ஜனாப். தி.மு. தமீஜ்ஜுத்தீன் தலைமை ஏற்றார். கூத்தாநல்லூர் ஊர்உறவின் முறை ஜமாஅத்தின் தலைவர் ஜனாப். N.M.A. சிஹாபுதீன் அவர்கள் புதிய மத்ரஸாவை திறந்து வைத்தார்.

இத்திறப்பு விழாவில் கூத்தாநல்லூர் ஊர்உறவின் முறை ஜமாஅத்தை சார்ந்த நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திறப்புவிழாவின் புகைப்படங்கள்















-நன்றி/படங்கள்: தாஹிர் அலி

No comments:

Blog Archive