Thursday, April 30, 2009
Wednesday, April 29, 2009
நாகை தொகுதி: மக்களவைத் தேர்தல் களத்தில் 7 வேட்பாளர்கள்
திருவாரூர், ஏப். 29: மக்களவைத் தேர்தலில் நாகை தொகுதியில் 7 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் ஏப்.17-ம் தேதி தொடங்கியது. இதில் நாகைத் தொகுதியில் முக்கிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள் உள்ளிட்ட 8 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் என மொத்தம் 13 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
சனிக்கிழமை வேட்புமனுப் பரிசீலனையில் பிரதான கட்சிகளின் நான்கு மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுவைத் திரும்பப் பெற கடைசி நாளான திங்கள்கிழமை சுயேச்சை வேட்பாளர்கள் எஸ். ராஜசேகரன், டி. அருண்குமார் ஆகியோர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து, இறுதி வேட்பாளர்களின் பட்டியல் மற்றும் சின்னத்தை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரன் திங்கள்கிழமை மாலை அறிவித்தார்.
இதன்படி போட்டியிடும் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் (அடைப்புக்குள்):
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி -எம். செல்வராசு (தானியக் கதிர்களும் அரிவாளும்),
திமுக -ஏ.கே.எஸ். விஜயன் (உதயசூரியன்),
பகுஜன் சமாஜ் கட்சி -கோ. வீரமுத்து (யானை),
தேமுதிக -ம. முத்துக்குமார் (முரசு),
சுயேச்சைகள் -
ஆர். தேவதாஸ் (ரயில் என்ஜின்),
வி. முனுசாமி (தொலைக்காட்சிப் பெட்டி),
ப. வீராசாமி (மட்டைப் பந்தடி வீரர்)
ஆகிய 7 பேர் நாகை தொகுதியில் மக்களவைத் தேர்தலின் களத்தில் வேட்பாளராக உள்ளனர்.
- நன்றி / தினமணி.காம்

Tuesday, April 28, 2009
லெட்சுமாங்குடி / ஜன்னத் நகரில் "அல்-மத்ரஸத்துல் அஹ்மதிய்யா" அரபி பாட சாலை திறப்பு விழா
லெட்சுமாங்குடி, ஏப் 28
கூத்தாநல்லூர் அல்-அமான் இளைஞர் இயக்கத்தின் சார்பாக நேற்று 27/04/2009 (திங்கட் கிழமை) காலை 10.30 மணியளவில் லெட்சுமாங்குடி / ஜன்னத் நகரில் "அல்-மத்ரஸத்துல் அஹ்மதிய்யா" அரபி பாட சாலை திறக்கப்பட்டது.
இத்திறப்பு விழாவுக்கு அல்-அமான் இளைஞர் இயக்க கெளரவ ஆலோசகர் ஜனாப். தி.மு. தமீஜ்ஜுத்தீன் தலைமை ஏற்றார். கூத்தாநல்லூர் ஊர்உறவின் முறை ஜமாஅத்தின் தலைவர் ஜனாப். N.M.A. சிஹாபுதீன் அவர்கள் புதிய மத்ரஸாவை திறந்து வைத்தார்.
இத்திறப்பு விழாவில் கூத்தாநல்லூர் ஊர்உறவின் முறை ஜமாஅத்தை சார்ந்த நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், உலமாக்கள், சமூகநல ஆர்வலர்கள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திறப்புவிழாவின் புகைப்படங்கள்

-நன்றி/படங்கள்: தாஹிர் அலி
Sunday, April 26, 2009
நாகை மக்களவைத் தொகுதிக்கு 13 பேர் வேட்பு மனுத் தாக்கல்
திருவாரூர், ஏப். 24: நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 13 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் ஏப். 17-ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.
இதில் திமுக சார்பில் ஏ.கே.எஸ். விஜயன், இவருக்கு மாற்று வேட்பாளராக தாழை. மு. அறிவழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எம். செல்வராசு, இவருக்கு மாற்று வேட்பாளராக க. சுஜாதா, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கோ. வீரமுத்து, இவருக்கு மாற்று வேட்பாளராக பன்னீர்செல்வம், தேமுதிக சார்பில் மகா. முத்துக்குமார், மாற்று வேட்பாளராக என். மோகன்குமார், சுயேச்சையாக முனுசாமி ஆகியோர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாளான வெள்ளிக்கிழமை எம். வீராசாமி, எஸ். ராஜசேகரன், டி. அருண்குமார் ஆகியோர் சுயேச்சைகளாகவும், மக்கள் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஆர். தேவதாஸ் ஆகியோர் மனுத் தாக்கல் செய்தனர். நாகை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 13 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Saturday, April 25, 2009
இந்திய கம்யூ. வேட்பாளர் கூத்தாநல்லூர் நகரில் வாக்கு சேகரிப்பு
நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம். செல்வராசு திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகரில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.
வேட்பாளர் எம். செல்வராசு: நான் இத்தொகுதியில் ஏற்கனவே 3 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளேன். அப்போது பல்வேறு திட்டங்களை இப்பகுதிக்கென மக்களவையில் கோரிப் பெற்றுள்ளேன். இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவும், ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை மேம்படவும் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
பிரசாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் வெ. வீரசேனன், துணைச் செயலர் வை. செல்வராஜ், மதிமுக மாவட்டச் செயலர் எம்.ஏ. முப்பால், மாவட்ட ஊராட்சித் தலைவர் எம்.எஸ். கமலவதனம், மதிமுக கொள்கை விளக்க அணி மாநில துணைச் செயலர் ப. சீனுவாசன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி.எஸ். மாசிலாமணி மற்றும் பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
-நன்றி / தினமணி.காம்

நாகை: தேமுதிக வேட்பாளர் மனுத் தாக்கல்
Last Updated :
திருவாரூர், ஏப். 23: நாகை மக்களவை (தனி) தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மகா. முத்துக்குமார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரேசகரனிடம் புதன்கிழமை தனது மனுவைத் தாக்கல் செய்தார்.
மனுத் தாக்கலின்போது, தேமுதிக மாநில மாணவரணிச் செயலர் ஈஸ்வரன், மாவட்டச் செயலர் என். முத்தையா, நாகை மாவட்டச் செயலர் எஸ்.எம்.ஏ. கணேசன், திருத்துறைப்பூண்டி நகரச் செயலர் ஜி.எஸ். செந்தில் ஆகியோர் வேட்பாளருடன் சென்றனர். மாற்று வேட்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் என். மோகன்குமார் மனுத் தாக்கல் செய்தார்.

Thursday, April 23, 2009
நாகை தொகுதி: திமுக, இந்திய கம்யூ., பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல்
திருவாரூர், ஏப். 22: நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, இந்திய கம்யூ., பகுஜன் சமாஜ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் நேற்று புதன்கிழமை (22-04-2009) தங்களது வேட்புமனுவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரனிடம் தாக்கல் செய்தனர்.
திமுக வேட்பாளர் மனு: நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் புதன்கிழமை தனது வேட்புமனுவை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரனிடம் தாக்கல் செய்தார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக பால் வளத் துறை அமைச்சர் உ. மதிவாணன், திருவாரூர் மாவட்ட திமுக செயலர் பூண்டி.கே. கலைவாணன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் ஆகியோருடன் வந்து தனது மனுவை ஏ.கே.எஸ். விஜயன் தாக்கல் செய்தார். கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளருமான தாழை.மு. அறிவழகன் மாற்று வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார்.
இந்திய கம்யூ. வேட்பாளர் மனுத் தாக்கல்: நாகை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம். செல்வராசு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரனிடம் புதன்கிழமை தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அதிமுக மாவட்டச் செயலர் ஆர். காம்ராஜ், முன்னாள் அமைச்சர் ஆர். ஜீவானந்தம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் கோ. பழனிச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் மனுவைத் தாக்கல் செய்தார். திருத்துறைப்பூண்டி வட்டம், கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த காத்தையா மகள் சுஜாதா மாற்று வேட்பாளராக வேட்பு மனுத் தாக்கல் செய்தார். இவர் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட துணைச் செயலர்.
பகுஜன் சமாஜ் வேட்பாளர் மனுத் தாக்கல்: நாகை மக்களவைத் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிடும் ஜி. வீரமுத்து (38) புதன்கிழமை தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். திருவாரூரில் நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான எம். சந்திரசேகரனிடம் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் வீரமுத்து. இவர் நாகப்பட்டினம், வெளிப்பாளையம், முனிசிபல் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர். இவரது தந்தை வி. கோபால். இவருக்கு மாற்று வேட்பாளராக நாகப்பட்டினம், வடக்கு பால்பண்ணைச்சேரியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்தார்.
சுயேச்சை வேட்பாளர் மனுத் தாக்கல்: நாகை மக்களவைத் தொகுதியில் மயிலாடுதுறை நல்லத்துக்குடி, வைத்தியலிங்கம் மகன் சுயேச்சை வேட்பாளராக முனுசாமி (40) (ஊனமுற்றவர்) சுயேச்சையாக போட்டியிட மனுத் தாக்கல் செய்தார். இவர் தமிழ் மாநில மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவதாகவும், ஊனமுற்றோருக்கு அரசு வழங்கும் திட்டங்களைப் பெற்றுத் தருவதே தான் போட்டியிடுவதன் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் 2009 - ஓர் பார்வை!
நமது கூத்தாநல்லூர் பகுதியை உள்ளடக்கிய நாகை பாராளுமன்ற தொகுதி 1957-ம் ஆண்டு துவங்கப்பட்டது.கடந்த சட்டமன்ற தேர்தலில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியிலிருந்த நமதூர், தொகுதி மறு சீரமைப்பிற்கு பின் பிரிக்கப்பட்டு திருவாரூர் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப் பட்டுள்ளது. இப்பாராளுமன்ற தேர்தலில் நமதூர், திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் சேர்க்கப்பட்ட பின்னர் பங்கேற்கும் முதல் தேர்தல் களம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப காலத்தில் இந்த நாகை பாராளுமன்ற தொகுதி இரண்டு உறுப்பினர் கொண்ட தொகுதியாக இருந்தது. பின்பு ஒரு உறுப்பினர் கொண்ட தொகுதியாக மாற்றம் பெற்றது.
நாகை பாராளுமன்ற தொகுதியில் இதுவரை நாகை, திருவாரூர் (தனி), நன்னிலம் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது.
தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி(தனி), திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
நாகை தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சை பாராளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகை தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
நாகை பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 3 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
கடந்த தேர்தல் நிலவரம்
ஏ.கே.எஸ். விஜயன் (திமுக) 4,63,389
அர்ச்சுனன் (அதிமுக) - 2,47,166
வெற்றி வித்தியாசம் - 2,16,223 வாக்குகள்.
இதுவரை எம்.பி.ஆக இருந்தவர்கள்
1957 - அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் - காங்கிரஸ்
1962 - கோபால்சாமி - காங்கிரஸ்
1967 - சாம்பசிவம் - காங்கிரஸ்
1971 - காத்தமுத்து - சிபிஐ
1977 - எஸ்.ஜி. முருகையன் - சிபிஐ
1980 - தாழை.மு. கருணாநிதி - திமுக
1984 - மகாலிங்கம் - அதிமுக
1989 - செல்வராஜ் - சிபிஐ
1991 - பத்மா - காங்கிரஸ்
1996 - செல்வராஜ் - சிபிஐ
1998 - செல்வராஜ் - சிபிஐ
1999 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
2004 - ஏ.கே.எஸ். விஜயன் - திமுக
இத்தேர்தலில் பங்கேற்க அனைத்து கட்சி வேட்பாளர்களும் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் அவர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
நமது தமிழக இஸ்லாமிய சமுதாயத்தில் அரசியல் எழுச்சி ஏற்பட்டுள்ள இச்சூழ்நி்லையில் நமதூரின் இஸ்லாமிய பாரம்பரியத்தையும், சமூக நலனையும் காக்கும் மற்றும் அனைத்து துறைகளிலும் நமதூர் சமுதாய மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள கட்சியை இனங்கண்டு வாக்களிக்க தயாராகும் படி கேட்டுக் கொள்கிறோம்.
- ஆசிரியர் /www.koothanallur.co.in
Monday, April 20, 2009
Saturday, April 18, 2009
Friday, April 17, 2009
Thursday, April 16, 2009
கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகக்குழு பதவி அறிவிப்பு!
கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் தேர்தல் கடந்த 07/04/2009 அன்று நடைபெற்று முடிவுகள் அதே தினத்தன்று இரவு வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிர்வாகிகள் அவர்களுக்குள்ளாகவே நிர்வாகக்குழு பதவிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ள தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதி அளித்தது.
இதனை தொடர்ந்து 15 நிர்வாகிகளும் வக்பு வாரியத்தின் அனுமதிபடியும், அதே சமயம் பெரியப்பள்ளிவாயில் By Law வில் அனுமதிக்கப்பட்ட படியும் தங்களுக்குள் தலைவர், துணை தலைவர், செயலாளர், துணை செயலாளர், ஜாமியா பள்ளிக்கூட தாளாளர் மற்றும் பெரியப்பள்ளி மத்ரஸா நாஜிர் பதவிகளை தேர்ந்தெடுத்து கொள்வதென முடிவு செய்தனர்.
இந்நி்லையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 நிர்வாகிகளும் தங்களுக்குள் எவ்வித கருத்து வேறுபாடு ஏற்படாத வகையிலும், வரும் காலங்களில் ஏற்படப்போகும் அடுத்த நிர்வாக அமைப்பிற்கு முன்னுதாரணமாகவும், நிர்வாகக்குழு பதவிகளை தங்களுக்குள் ரகசிய வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு வாக்களித்தனர். இதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிகள் முடிவு செய்யப்பட்டு பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
நிர்வாகிகளுக்குள் நடந்த ரகசிய வாக்கெடுப்பில்...
தலைவர் : N.M.A. சிஹாபுதீன்
துணை தலைவர் : கோ.அ. பரக்கத்துல்லாஹ்
செயலாளர் : J.M.A. ஷேக் அப்துல் காதர்
துணை செயலாளர் : தி.மு. தமீஜூத்தீன்
ஆகியோர் நான்கு பதவிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மேலும் ஜாமியா பள்ளிக்கூட தாளாளர் பதவி பெ.அ. முஹம்மது ரஃபீயுதீன் அவர்களுக்கும், பெரியப்பள்ளி மத்ரஸா நாஜிர் பதவி A.M. அப்துல் ஹக்கீம் அவர்களுக்கும் ஏனையோர் நிர்வாகக்குழு உறுப்பினராக பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 25 பேர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட உள்ளதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதி செய்யப்பட்ட அறிவிப்பு ஓரிரு நாளில் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த புதிய கூத்தாநல்லூர் ஜமாஅத் நிர்வாகிகளின் சிறந்த நிர்வாகத்தினாலும், சமூக கட்டுப்பாட்டினாலும் வருகின்ற 3 வருடங்கள் நமதூர் அனைத்து துறையிலும் மேன்மை பெற்று சிறந்து விளங்க நமது www.koothanallur.co.in இணையதள குழுமத்தின் சார்பில் வல்ல நாயன் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறோம்.
- ஆசிரியர் / www.koothanallur.co.in

Tuesday, April 14, 2009
Friday, April 10, 2009
கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகக்குழு பதவி - மக்களின் விருப்பம் இதோ..!
| கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற இவர்களில் புதிய நிர்வாகத்தின் தலைவராக யாரை நியமிக்கலாம்? / மக்களின் கருத்து ! | ||
| மொத்த வாக்குகள் = | 132 | |
| நிர்வாகிகளின் பெயர் | பெற்ற வாக்குகள் | சதவீதம் % |
| 3. A.A. அப்துல் ரவூப் (APN) | 25 | 18.94 |
| 6. ச.யி.மு. காதர் உசேன் | 22 | 16.67 |
| 1. பெ.அ.முஹம்மது ரஃபீயுத்தீன் | 21 | 15.91 |
| 4. N.M.A. சிஹாபுதீன் | 15 | 11.36 |
| 8. ஜ.மு. ரஹ்மத்துல்லாஹ் | 15 | 11.36 |
| 9. S.M. தாஜ் முஹம்மது | 8 | 6.06 |
| 2. தி.மு. தமீஜூத்தீன் | 6 | 4.55 |
| 10. S.M. Mohd. இஸ்மாயில் கனி | 4 | 3.03 |
| 15. A.M. அப்துல் ஹக்கீம் | 4 | 3.03 |
| 7. S.A. ஜபருல்லாஹ்கான் | 3 | 2.27 |
| 5. J.M.A. ஷேக் அப்துல் காதர் | 2 | 1.52 |
| 11. கோ.அ. பரக்கத்துல்லாஹ் | 2 | 1.52 |
| 12. L.M. முஹம்மது அஷ்ரப் | 2 | 1.52 |
| 14. ரா.மு. அப்துல் கரீம் | 2 | 1.52 |
| 13. அ.செ.மு. அப்துல் ரஜாக் | 1 | 0.76 |
| கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற இவர்களில் புதிய நிர்வாகத்தின் செயலாளராக யாரை நியமிக்கலாம்? / மக்களின் கருத்து ! | ||
| மொத்த வாக்குகள் = | 135 | |
| நிர்வாகிகளின் பெயர் | பெற்ற வாக்குகள் | சதவீதம் % |
| 1. பெ.அ. முஹம்மது ரஃபீயுத்தீன் | 45 | 33.33 |
| 2. தி.மு. தமீஜூத்தீன் | 21 | 15.56 |
| 4. N.M.A. சிஹாபுதீன் | 12 | 8.89 |
| 8. ஜ.மு. ரஹ்மத்துல்லாஹ் | 11 | 8.15 |
| 3. A.A. அப்துல் ரவூப் (APN) | 9 | 6.67 |
| 5. J.M.A. ஷேக் அப்துல் காதர் | 9 | 6.67 |
| 6. ச.யி.மு. காதர் உசேன் | 7 | 5.19 |
| 9. S.M. தாஜ் முஹம்மது | 7 | 5.19 |
| 12. L.M. முஹம்மது அஷ்ரப் | 5 | 3.7 |
| 11. கோ.அ. பரக்கத்துல்லாஹ் | 4 | 2.96 |
| 10. S.M. Mohd. இஸ்மாயில் கனி | 3 | 2.22 |
| 14. ரா.மு. அப்துல் கரீம் | 2 | 1.48 |
| 7. S.A. ஜபருல்லாஹ்கான் | 0 | 0 |
| 13. அ.செ.மு. அப்துல் ரஜாக் | 0 | 0 |
| 15. A.M. அப்துல் ஹக்கீம் | 0 | 0 |
| கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற இவர்களில் புதிய நிர்வாகத்தின் பொருளாளராக யாரை நியமிக்கலாம்? - மக்களின் கருத்து! | ||
| மொத்த வாக்குகள் = | 134 | |
| நிர்வாகிகளின் பெயர் | பெற்ற வாக்குகள் | சதவீதம் % |
| 1. பெ.அ. முஹம்மது ரஃபீயுத்தீன் | 21 | 15.67 |
| 7. S.A. ஜபருல்லாஹ்கான் | 18 | 13.43 |
| 4. N.M.A. சிஹாபுதீன் | 14 | 10.45 |
| 2. தி.மு. தமீஜூத்தீன் | 12 | 8.96 |
| 3. A.A. அப்துல் ரவூப் (APN) | 11 | 8.21 |
| 8. ஜ.மு. ரஹ்மத்துல்லாஹ் | 9 | 6.72 |
| 11. கோ.அ. பரக்கத்துல்லாஹ் | 9 | 6.72 |
| 14. ரா.மு. அப்துல் கரீம் | 9 | 6.72 |
| 5. J.M.A. ஷேக் அப்துல் காதர் | 7 | 5.22 |
| 6. ச.யி.மு. காதர் உசேன் | 6 | 4.48 |
| 10. S.M. Mohd. இஸ்மாயில் கனி | 6 | 4.48 |
| 12. L.M. முஹம்மது அஷ்ரப் | 5 | 3.73 |
| 9. S.M. தாஜ் முஹம்மது | 3 | 2.24 |
| 13. அ.செ.மு. அப்துல் ரஜாக் | 2 | 1.49 |
| 15. A.M. அப்துல் ஹக்கீம் | 2 | 1.49 |
Thursday, April 9, 2009
Wednesday, April 8, 2009
கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் முடிவுகள்.
Tuesday, April 7, 2009
Subscribe to:
Comments (Atom)
Blog Archive
-
▼
2009
(208)
-
▼
April
(32)
- நாளிதழ் செய்திகள் / 30 ஏப்ரல் 2009
- நாகை தொகுதி: மக்களவைத் தேர்தல் களத்தில் 7 வேட்பாளர...
- லெட்சுமாங்குடி / ஜன்னத் நகரில் "அல்-மத்ரஸத்துல் அஹ...
- இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி லெட்சு...
- நாகை மக்களவைத் தொகுதிக்கு 13 பேர் வேட்பு மனுத் தாக...
- இந்திய கம்யூ. வேட்பாளர் கூத்தாநல்லூர் நகரில் வாக்க...
- இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேலை நிறுத்தம்
- நாகை: தேமுதிக வேட்பாளர் மனுத் தாக்கல்
- நாகை தொகுதி: திமுக, இந்திய கம்யூ., பகுஜன் சமாஜ் மற...
- மக்களவைத் தேர்தல் 2009 - ஓர் பார்வை!
- கூத்தாநல்லூர் திமுக - தேர்தல் முன்னேற்பாடுகள்
- No title
- No title
- கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகக்குழு பதவி ...
- லெட்சுமாங்குடி வர்த்தகர் சங்க நிர்வாகிகள் தேர்வு
- No title
- கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் நிர்வாகக்குழு பதவி ...
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் அதிக வாக...
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தலில் அதிக வாக...
- No title
- வக்ஃபு வாரியத்தினால் வெளியிடப்பட்ட கூத்தாநல்லூர் ப...
- பொதக்குடியில் மீலாது விழா
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் / 2009
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் முடிவுகள்.
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் களத்தின் புகைப்படங்கள்
- No title
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் கருத்துகணிப்பு முடிவுகள்
- No title
- No title
- கூத்தாநல்லூர் ஜமாஅத் தேர்தல் களம் 2009
- கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாசல் வக்ஃபு நிர்வாக கமிட்...
- KNR JAMAATH @ BRUNEI
-
▼
April
(32)