::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, August 31, 2009

இளைஞர் படுகொலை; தேடப்பட்டவர் கைது

கூத்தாநல்லூர், அன்வாரியா தெருவைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் நூர் முகம்மது (32). தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு சில மாதம் முன் நடைபெற்ற அன்வாரியா பள்ளிவாயில் ஜமாத் தேர்தலின்போது நூர் முகம்மதுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஷாவின் மகன் அனஸ் மைதீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்வாரியா பள்ளிவாசல் அருகே நூர் முகம்மதுவை வழிமறித்து, அனஸ் மைதீன் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த நூர் முகம்மது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து அனஸ் மைதீனைத் தேடி வந்தனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டக் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் துரைராஜன், துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், கொராடாச்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அனஸ் மைதீனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தகவல்- தினமணி.காம்

Blog Archive