::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, August 28, 2009

சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு (காஸ் சிலிண்டர்) பொதுமக்கள் கூடுதல் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை என ஆட்சியர் எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு இணைப்பு மற்றும் இரு இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள் சிலிண்டருக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமென்ற விவரம் எரிவாயு விநியோகம் செய்யும் போது மேற்காணும் முகவரால் வழங்கப்படும் ரசீதுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு இணைப்பு உள்ளவர்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டருக்கு தலா ரூ. 30 மானியமாக வழங்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் ரசீதுகளில் கண்டுள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதலாக பணம் செலுத்தத் தேவையில்லை. கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கப்பட்டால் 94450 00295 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்கப்படும் புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

- நன்றி/ தினமணி.காம்

Blog Archive