திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் நூர்முகம்மது (32). அவர் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க., தொண்டரணி செயலாளராக இருந்தார். அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனஸ் (38) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
நேற்றிரவு தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த அனஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நூர்முகம்மதுவை பல முறை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிய நிலையில் நூர் முகம்மது துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த கூத்தாநல்லூர் போலீஸார் கொலையாளியை தேடி வருகின்றனர். கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தகவல்- தினமலர்.காம்
புனிதமிக்க ரமலானில் நடந்த இப்படுகொலையும், அதன் பின்னர் ஊரில் நிலவிய பதற்றமான சூழ்நிலையும் ஊர் மக்கள் அனைவராலும் கண்டிக்கப்படுவதுடன், அனைவரையும் மனவேதனை அடைய செய்திருக்கின்றது. இறந்த இஸ்லாமிய சகோதரரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.