::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Tuesday, September 1, 2009

நமது இணையதளத்தின் புதிய சேவை அறிமுகம்!

நமது அன்பான நேயர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

தங்களின் மேலான வரவேற்புடன் நமது இணையதளத்தில் இதுவரை இடம்பெற்றிருந்த Chat Room பகுதி பலரது தனிப்பட்ட கருத்து பரிமாற்றத்திற்கு சரியான ஊடகமாக இருந்து வந்தது.

எனினும், எங்களின் இச்சேவை பலருக்கு பயனுள்ளதாக இருந்த போதிலும், இதனை யாரும் தவறாக பயன்படுத்தி எந்தவொரு தனிமனிதருக்கும் எவ்வித மனவேதனையையோ அல்லது இழப்பையோ ஏற்படுத்திவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இச்சேவையை நாங்கள் கடந்த சில நாட்களாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தோம்.

மேலும், இந்த Chat பகுதியை 24 மணிநேரமும் கண்காணிக்கவும், மட்டுப்படுத்தவும் போதிய கால அவகாசம் இல்லாமையினால் இதனை முழுவதுமாக நீக்கிவிட்டு, அதற்கு பதிலாக நமது பெரும்பாலான நேயர்களின் ஆலோசனையுடன் Buy / Sale என்ற பயனுள்ள பகுதியை அறிமுகப்படுத்துகின்றோம்.

இப்பகுதியில் வீடு, மனை, கார், பைக், செல்போன் அல்லது தங்களின் சொந்த தயாரிப்புகள் போன்ற எதுவாயினும் வாங்க அல்லது விற்க இலவசமாக பதிவு செய்யுங்கள்! அவை இணையதள குழுவின் பார்வைக்குப் பின்னர் இடம்பெறும்.

இந்த இலவச சேவை வாங்குபவரையும் விற்பவரையும் அறிமுகம் மட்டுமே செய்துவைக்கின்றது. மற்றபடி தாங்கள் வாங்கும் அல்லது விற்கும் பொருட்களின் முழு பொறுப்பு தங்களுடையதே! எங்களின் இணையதளம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது.

எங்களின் இம்முயற்சிக்கு தாங்கள் எப்போதும் போல் ஆதரவையும் முழு ஒத்துழைப்பையும் தந்துதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் பேராதரவுடன்...
www.koothanallur.co.in

Blog Archive