::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, December 26, 2009

நமதூரில் தமிழக அரசின் 24மணி நேர 108 ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்

கடந்த 22/12/2009 வியாழன் அன்று காலை சுமார் 11.00 மணியளவில் கூத்தாநல்லூா் ‌செல்வி மஹால் திருமண அரங்கத்தில் நமதூருக்கான தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையை தமிழ்நாடு மின்வாரிய ஆலோசனை குழு உறுப்பினர் திரு. பூண்டி கலைவாணன் அவர்கள் துவக்கி வைத்தார்.

இத்துவக்கவிழாவிற்கு கூத்தாநல்லூா் நகர்மன்ற தலைவர் ஜனாபா. யாஸ்மீன் பர்வீன், நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் மற்றும் நகராட்சி ஆணையா் திரு.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

இவ்விழாவில் கூத்தாநல்லூா் ஊர்உறவின் முறை ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய ஆர்வலா்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

பலரது உயிர்காக்கும் இச்சேவையை திருவாரூா் மாவட்ட ஆட்சியரிடம் பலமான கோரிக்கை மூலம் பெற்றுத் தந்த நமதூா் நகா்மன்ற துணைத் தலைவா் ஜனாப். காதா் உசேன் அவர்களுக்கு நமது இணையதள குழுவின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவசர தேவைக்கு 108 எண்ணில் ‌தொலைபேசி வழியாக தொடா்பு கொள்ளவும்.
நமதூர் நகராட்சி முன்புறம் 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் 24 மணிநேரமும்...







வௌ்ளிக்கிழமை (25 டிசம்பர்) ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு வெளியான துண்டு பிரசுரங்கள்













Wednesday, December 16, 2009

காப்​பீட்​டுத் திட்​டம்:​ விடு​பட்​ட​வர்​க​ளுக்கு புகைப்​ப​டம் எடுக்க மீண்​டும் வாய்ப்பு

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் கலை​ஞர் மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தில் புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளா​மல் விடு​பட்​ட​வர்​க​ளுக்கு மீண்​டும் எடுத்​துக் கொள்ள வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

இது​கு​றித்து ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​கு​றிப்பு:​​ ​ ​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஆண்டு வரு​மா​னம் ரூ.72,000-த்துக்​கும் குறை​வாக உள்ள ஏழை,​​ எளிய மக்​க​ளுக்​கா​க​வும்,​​ 26 நல​வா​ரி​யங்​க​ளில் உறுப்​பி​னர்​க​ளா​க​வும் உள்​ள​வர்​க​ளுக்கு 51 வகை​யான நோய்​க​ளுக்கு தனி​யார் மருத்​து​வ​ம​னை​க​ளில் ஆண்​டுக்கு ரூ.1 லட்​சம் மதிப்​பில் உயர் சிகிச்​சைப் பெறு​வ​தற்கு ஏது​வாக தமி​ழக அரசு உயிர் காக்​கும் உயர் சிகிச்​சைக்​கான கலை​ஞர் காப்​பீட்​டுத் திட்​டத்தை அறி​வித்​துள்​ளது.​​ ​ ​

இதன்​படி,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ஏற்​க​னவே அடை​யாள அட்டை வழங்​கு​வ​தற்​காக 2,52,570 குடும்​பங்​கள் புகைப்​ப​டம் எடுக்​கப்​பட்டு,​​ இது​வரை 1,97,790 பேருக்கு அடை​யாள அட்​டை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

மேலும் முதல் சுற்​றில் விடு​பட்​ட​வர்​க​ளுக்​காக மாவட்​டம் முழு​வ​தும் இரண்​டாம் சுற்று புகைப்​ப​டம் எடுக்​கும் பணி தொடங்​க​பட்​டுள்​ளது.​ இதன்​படி,​​ குட​வா​சல் வட்​டத்​தில் டிச.16-ம் தேதி​யும்,​​ நன்​னி​லம் வட்​டத்​தில் டிச.17 முதல் 19-ம் தேதி வரை​யி​லும்,​​ வலங்​கை​மான் வட்​டத்​தில் டிச.20,21 தேதி​க​ளி​லும்,​​ நீடா​மங்​க​லம் வட்​டத்​தில் டிச.22 முதல் 24-ம் தேதி வரை​யி​லும்,​​ திருத்​து​றைப்​பூண்டி வட்​டத்​தில் டிச.25 முதல் டிச.​ 27-ம் தேதி வரை​யி​லும்,​​ திரு​வா​ரூர் வட்​டத்​தில் டிச.​ 28,​ 29 தேதி​க​ளி​லும் அந்​தந்த கிரா​மம் அல்​லது அரு​கி​லுள்ள கிராம பள்​ளி​க​ளில் புகைப்​ப​டம் எடுக்​கும் பணி நடை​பெ​றும்.​​ ​ ​

முதல் சுற்​றில் புகைப்​ப​டம் எடுக்​கா​மல் விடு​பட்ட நபர்​கள் இந்த வாய்ப்​பைப் பயன்​ப​டுத்தி குடும்​பத்​து​டன் வந்து புகைப்​ப​டம் எடுத்​துக் கொள்​ளு​மாறு ஆட்​சி​யர் கேட்​டுக் கொண்​டுள்​ளார்.​

-நன்றி/ தினமணி.காம்

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தொடர் மழை,​​ புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திருவாரூர் மாவட்​டத்​தில் ​ இயல்பு வாழ்க்​கை​யில் பாதிப்பு ஏற்​பட்​டது.​

திருவாரூர் மாவட்​டத்​தில் கடந்த 4 ​ நாள்​க​ளா​கத் தொடர்ந்து மழை பெய்து வரு​கி​றது.​ வங்​கக் கட​லில் புயல் உரு​வா​ன​தை​ய​டுத்து,​​ சனிக்​கி​ழமை முதல் செவ்​வாய்க்​கி​ழமை வரை நாகை துறை​முக அலு​வ​ல​கத்​தில் 3-ம் எண் புயல் எச்​ச​ரிக்​கைக் கூண்டு ஏற்​றப்​பட்​டி​ருந்​தது.​ பிற்​ப​கல் இந்த எச்​ச​ரிக்​கைக் கூண்டு இறக்​கப்​பட்​டது.​​ ​

இருந்​த​போ​தி​லும்,​​ திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் தொடர்ந்து பலத்த மழை பெய்​தது.​ தொடர் மழை நீடிப்​ப​தால் திருவாரூர் மாவட்​டத்​தின் அனைத்​துப் பகு​தி​க​ளி​லும் இயல்பு வாழ்க்கை பாதிக்​கப்​பட்​டி​ருந்​தது.​ ​ மாவட்​டத்​தின் ஒரு சில பகு​தி​க​ளில் போக்​கு​வ​ரத்​தில் பிரச்னை ஏற்​பட்​டது.​

​பள்​ளி​க​ளுக்கு ​ விடு​முறை:​​ புயல் எச்​ச​ரிக்கை மற்​றும் தொடர் மழை கார​ண​மாக திருவாரூர் மாவட்​டத்​தில் பள்ளி,​​ கல்​லூரி உள்​ளிட்ட அனைத்​துக் கல்வி நிலை​யங்​க​ளுக்​கும் செவ்வாய்க்கிழமை ​(டிச.​ 15) விடு​முறை அறி​விக்​கப்​பட்​டிருந்தது.​

அதிரடி குறைந்த கட்டணத்தில் உம்ரா (ரூ.39000/-) தக்பீர் ஹஜ் சர்வீஸ்

குவைத் K-Tic வழங்கும் முப்பெரும் முத்தான நிகழ்ச்சிகள்

Tuesday, December 15, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​பள்​ளி​க​ளுக்கு இன்று விடு​முறை

புயல் எச்​ச​ரிக்கை கார​ண​மாக,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் ​ பள்​ளி​க​ளுக்கு செவ்​வாய்க்​கி​ழமை விடு​முறை அறி​விக்​கப்​பட்​டுள்​ளது.​​ ​ ​

தென்​மேற்கு வங்​கக்​கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளுக்கு மேலாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால் கடந்த இரு தினங்​க​ளாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் பர​வ​லாக மழை​பெய்து வரு​கி​றது.​ தொடர்ந்து திங்​கள்​கி​ழ​மை​யும் அதி​காலை தொடங்கி பகல் முழு​வ​தும் வானம் மேக​மூட்​டத்​து​டனே காணப்​பட்​டது.​ தொடர்ந்து மழை பெய்து கொண்​டே​யி​ருந்​தது.​ அவ்​வப்​போது லேசாக வெயில் அடித்​தது.​​ ​ ​ ​

விடு​முறை குறித்து மாவட்ட ஆட்​சி​யர் எம்.​ சந்​தி​ர​சே​க​ரன் வெளி​யிட்​டுள்ள செய்தி:​ ​​ ​ ​ புயல் செவ்​வாய்க்​கி​ழமை கரையை கடக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் மழை அதிக அள​வில் இருக்​கு​மெ​ன​வும்,​​ பலத்த காற்​றும் வீசக்​கூ​டும் என​வும் வானிலை ஆய்வு மையம் அறி​வித்​துள்​ளது.​ ​ ​ ​ மேலும் கடல் சீற்​றம் அதி​க​மாக இருக்​கும் என்​ப​தால்,​​ திரு​வா​ரூர் மாவட்​டத்​தைச் சேர்ந்த மீன​வர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை கட​லுக்​குச் செல்ல வேண்​டா​மென அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​​ ​ ​

மழை,​​ காற்று அதி​க​மாக இருக்​கு​மென எதிர்​பார்க்​கப்​ப​டு​வ​தால் செவ்​வாய்க்​கி​ழமை ஒரு​நாள் மட்​டும் இம்​மா​வட்​டத்​தில் உள்ள பள்​ளி​க​ளுக்கு விடு​முறை அளிக்​கப்​ப​டு​கி​றது.​ பள்​ளி​க​ளில் பல்​வேறு வகுப்​பு​க​ளுக்கு நடை​பெ​றும் அரை​யாண்​டுத் தேர்​வு​கள் வேறொரு நாளில் நடத்​தப்​ப​டும் என ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்.

Monday, December 14, 2009

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக பர​வ​லாக மழை

வங்​கக் கட​லில் ஏற்​பட்​டுள்ள காற்​ற​ழுத்த தாழ்வு நிலை கார​ண​மாக திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் 2-வது நாளாக ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் பர​வ​லாக மழை பெய்​தது.​ ​ ​ ​

தென்​மேற்கு வங்​கக் கட​லில் ஆழ்ந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை கடந்த இரு தினங்​க​ளாக நிலை கொண்​டுள்​ளது.​ இத​னால்,​​ சனிக்​கி​ழ​மையை தொடர்ந்து ஞாயிற்​றுக்​கி​ழ​மை​யும் காலை முதலே வானம் மேக மூட்​டத்​து​டன் காணப்​பட்​டது.​ சில நேரங்​க​ளில் நல்ல வெயில் அடித்​தது.​ சிறிது நேரத்​தில் திடீ​ரென மழை பெய்​தது.​

Sunday, December 13, 2009

வங்​கக்​கட​லில் குறைந்த காற்​ற​ழுத்​தத் தாழ்வு நிலை

தென்​மேற்கு வங்​கக்​க​டல் அரு​கில் குறைந்​தத காற்​ற​ழுத்​தத் தாழ்வு மண்​டல நிலை கொண் ​டுள்​ளது.​ இத​னால் வானம் மேக​மூட்​டத்​து​டன் 23 டிகிரி வெப்​ப​நிலை உரு​வா​கும்.​ மேலும் 45 முதல் 55 கிலோ மீட்​டர் வேகத்​து​டன் காற்று வீசக்​கூ​டும்.​

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி தெற்கு கடல்​க​ரை​யோர மாவட்​டங்​க​ளி​லும்,​​ மாநி​லத்​தின் உள்​ப​கு​தி​யி​லும் அடுத்த 48 மணி நேரத்​தில் மித​மா​னது முதல் கனத்த மழை பெய்​யக் கூடும்.​ கடல் கொந்​த​ளிப்​பு​ட​னும்,​​ சீற்​றத்​து​ட​னும் காணப்​ப​டும்.​​ ​ ​ இத​னால் மீன​வர்​கள் கட​லுக்​குச் செல்ல வேண்​டா​மென அறி​வு​றுத்​தப்​பட்​டுள்​ள​னர்.​

தாழ்​வான பகு​தி​க​ளில் வசிப்​ப​வர்​கள் பாது​காப்​பான இடங்​க​ளில் இருக்க வேண்​டும்.​ ​மேலும் தீய​ணைப்​புத் துறை,​​ வரு​வாய்த் துறை,​​ பொதுப்​ப​ணித் துறை ஆகிய முக்​கிய துறை​கள் மூலம் பாது​காப்பு நட​வ​டிக்​கை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுóள்​ளது.​​ ​

தேவை​யான அள​வுக்கு உண​வுப் பொருள்​கள்,​​ மருத்​து​வப் பொருள்​கள் இருப்​பில் வைக்​கப்​பட்​டும்,​​ பள்ளி,​​ கல்​லூரி கட்​ட​டங்​க​ளில் பொது​மக்​கள் பாது​காப்​பாக தங்க வைக்க தேவை​யான ஏற்​பா​டு​க​ளும் செய்​யப்​பட்​டுள்​ளன.​ எந்த ஒரு இடர்​பாடு ஏற்​பட்​டா​லும் எதிர்​கொள்ள மாவட்ட நிர்​வா​கம் தயா​ராக உள்​ளது என ஆட்​சி​யர் தெரி​வித்​துள்​ளார்.