::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, August 31, 2009

இளைஞர் படுகொலை; தேடப்பட்டவர் கைது

கூத்தாநல்லூர், அன்வாரியா தெருவைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் நூர் முகம்மது (32). தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக திருவாரூர் மாவட்ட தொண்டரணி செயலாளராக இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஒரு சில மாதம் முன் நடைபெற்ற அன்வாரியா பள்ளிவாயில் ஜமாத் தேர்தலின்போது நூர் முகம்மதுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஷாவின் மகன் அனஸ் மைதீனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்வாரியா பள்ளிவாசல் அருகே நூர் முகம்மதுவை வழிமறித்து, அனஸ் மைதீன் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த நூர் முகம்மது, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து அனஸ் மைதீனைத் தேடி வந்தனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டக் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் துரைராஜன், துணைக் கண்காணிப்பாளர் சீனிவாசன், கொராடாச்சேரி காவல் ஆய்வாளர் ராஜசேகரன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அனஸ் மைதீனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

தகவல்- தினமணி.காம்

Sunday, August 30, 2009

இளைஞர் படுகொலை

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த அப்துல் சலாம் மகன் நூர்முகம்மது (32). அவர் திருவாரூர் மாவட்ட த.மு.மு.க., தொண்டரணி செயலாளராக இருந்தார். அவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனஸ் (38) என்பவருக்கும் நீண்ட நாட்களாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்றிரவு தகராறு முற்றியதில், ஆத்திரமடைந்த அனஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நூர்முகம்மதுவை பல முறை குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். உயிருக்கு போராடிய நிலையில் நூர் முகம்மது துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த கூத்தாநல்லூர் போலீஸார் கொலையாளியை தேடி வருகின்றனர். கொலையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.

தகவல்- தினமலர்.காம்

புனிதமிக்க ரமலானில் நடந்த இப்படுகொலையும், அதன் பின்னர் ஊரில் நிலவிய பதற்றமான சூழ்நிலையும் ஊர் மக்கள் அனைவராலும் கண்டிக்கப்படுவதுடன், அனைவரையும் மனவேதனை அடைய செய்திருக்கின்றது. இறந்த இஸ்லாமிய சகோதரரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

Friday, August 28, 2009

BSNL பிராட்பேண்ட் + Nova net PC OFFER!

சிலிண்டர்களுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்: ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு உருளைகளுக்கு (காஸ் சிலிண்டர்) பொதுமக்கள் கூடுதல் தொகை எதுவும் செலுத்தத் தேவையில்லை என ஆட்சியர் எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் ஒரு இணைப்பு மற்றும் இரு இணைப்பு பெற்றுள்ள பொதுமக்கள் சிலிண்டருக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டுமென்ற விவரம் எரிவாயு விநியோகம் செய்யும் போது மேற்காணும் முகவரால் வழங்கப்படும் ரசீதுகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு இணைப்பு உள்ளவர்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டருக்கு தலா ரூ. 30 மானியமாக வழங்கப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் ரசீதுகளில் கண்டுள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதுமானது. கூடுதலாக பணம் செலுத்தத் தேவையில்லை. கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திக்கப்பட்டால் 94450 00295 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

அவ்வாறு தெரிவிக்கப்படும் புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

- நன்றி/ தினமணி.காம்

Thursday, August 27, 2009

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் அபிமான நமதூர் இணையதளமான www.koothanallur.co.in அறிமுகப்படுத்திய E-Shopping -ன் பரபரப்பான விற்பனை மூலம் "புனித ரமளானுக்கான இனிய OFFER!" -ஐ ஆர்டர் செய்து பேராதரவளித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

கையிருப்பில் இருந்த அனைத்து பொருட்களும் தீர்ந்துவிட்ட நிலையில், இனியும் ஆர்டர் செய்ய விரும்புவோருக்கு தாங்கள் ஆர்டர் செய்த 5 தினங்கள் கழித்தே எங்களால் டெலிவரி செய்ய இயலும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தங்களின் பேராதரவுடன்...
www.koothanallur.co.in குழுவினர்.

CMN வழங்கும் ரமளான் சிறப்பு நிகழ்ச்சிகள் - உங்கள் VIJAY TVயில்...



Saturday, August 15, 2009

இனிய OFFER! புனித ரமளானுக்காக...


100% தெளிவாக காண்பதற்கு மேலே உள்ள படத்தின் மீது கிளிக் செய்யுங்கள்!

வௌ்ளிக்கிழமை (14 ஆகஸ்ட்) ஜூம்ஆ தொழுகைக்கு பிறகு வெளியான துண்டு பிரசுரங்கள்





























சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

நமது www.koothanallur.co.in இணையதள வாசகர்கள் அனைவருக்கும்...
63வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
கடல்கடந்து வாழ்வினும்...
இந்தியர்களாகவே இருப்போம்!
இந்தியர்களாகவே வாழ்வோம்!!

வாழ்த்துக்களுடன்...
www.koothanallur.co.in குழுவினர்.

Wednesday, August 12, 2009

பன்றிக் காய்ச்சல்: பதற்றமடைய வேண்டாம் - ஆட்சியர்

திருவாரூர் மாவட்டத்தில் பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பதற்றமடைய வேண்டாம். அதே நேரத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பன்றிக் காய்ச்சல் நோய் தடுப்பு குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:
காய்ச்சல், இருமல், தொண்டையில் புண், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும்.

இதை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களுக்குச் சென்று வருபவர்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே பதிவு செய்து சிகிச்சை பெற வேண்டும்.

பொது மக்கள் தும்மல், இருமல் ஏற்படும் போது வாய் மற்றும் மூக்கு ஆகியவற்றை துணியால் மூடிக் கொள்ள வேண்டும். இதேபோன்று, கை, கால்கள், வாய், மூக்கு போன்றவற்றை தண்ணீரில் கழுவி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும்.

மக்கள் நெருக்கடியான இடங்களில் அதிக நேரம் இருக்கக் கூடாது. நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து இரண்டடி தொலைவுக்கு தள்ளி இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத்தக்க சத்தான உணவு, அதிகப்படியான திரவ உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இந்த நோய்க்கு ""டேமி புளு'' என்ற மாத்திரை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த நோய்க்கான அறிகுறிகள் உள்ளவர்கள் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும்.

நோய் தடுப்புக்கென மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே, பொதுமக்கள் பதற்றமடையாமல், விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்த நோய் குறித்த அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும் போது மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் தக்க தற்காப்பு சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த அறிகுறிகள் மாணவ, மாணவிகளுக்கு ஏற்பட்டால் ஆசிரியர்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மட்டுமே மாணவர்களை சிகிச்சை பெற அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் உள்ள மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாமென ஆட்சியர் அப்போது கேட்டுக் கொண்டார்.

-நன்றி/ தினமணி.காம்

Friday, August 7, 2009

ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கிச் சேவை பாதிப்பு

திருவாரூர், ஆக. 6:

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, வியாழக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் 67 வங்கிகளில் பணிகள் முற்றிலுமாக முடங்கின.

கோரிக்கைகள்: வங்கி ஊழியர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வூதியப் பலனை அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். ஊழியர் இறந்தாலோ அல்லது ஊனமுற்றாலோ கருணை அடிப்படையில், அவரது வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

இதன்படி திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 67 வங்கிகளில் பணியாற்றும் 737 ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. வங்கிகளில் மேலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் வங்கிப் பணிகள் முற்றிலுமாக முடங்கின.

ஆர்ப்பாட்டம்: வேலைநிறுத்தப் போராட்டத்தை விளக்கி, திருவாரூர் நகர வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் சங்கச் செயலர் அழகிரிசாமி தலைமை வகித்தார். இந்தியன் வங்கி ஊழியர் சங்கச் செயலர் காளிமுத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர் சங்கக் கிளைச் செயலர் ஏ. அப்துல் ரகீம், அலகாபாத் வங்கியின் அப்துல் சலீம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

ஆதரவு கூட்டம்: வங்கி ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆயுள் காப்பீட்டுக் கழக திருவாரூர் கிளை முன்பு வியாழக்கிழமை வாயில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கிளைச் செயலர் எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். வளர்ச்சி அதிகாரிகள் சங்கத் தலைவர் ஆர். வீரையன், முகவர் சங்க நிர்வாகிகள் வி. ராமதாஸ், ஏ. அறிவழகன், ஊழியர் சங்க நிர்வாகிகள் ஆர். தட்சிணாமூர்த்தி, ஆர். சங்கரன், எஸ். நித்தீஷ் ஆகியோர் பேசினர். வங்கி ஊழியர்கள், ஆயுள் காப்பீட்டுக் கழக ஊழியர்கள், முகவர்கள் பங்கேற்றனர்.


- நன்றி/ தினமணி.காம்

விடுபடாமல் முதியோர் ஓய்வூதிய உதவித் தொகை: ஆட்சியர்

திருவாரூர், ஆக. 6:
திருவாரூர் மாவட்டத்தில் விடுதலின்றி முதியோர் ஓய்வூதிய உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் 32,555 பேருக்கு முதியோர் உதவித் தொகைகள் அந்தந்த வட்டத்தில் உள்ள சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர்களால் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

இதில் தற்போது கணினி மூலம் பணவிடைகள் அச்சடித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் சில பயனாளிகளுக்கு சரியான முகவரியில்லாமல் பணவிடைகள் சென்றடையாமல் உள்ளதாகத் தெரிகிறது.

இதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, முகவரிகள் சரிசெய்யப்பட்டு ஜூன் மாதத்துக்கு விடுதலின்றி பயனாளிகள் அனைவருக்கும் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறும் பயனாளிகளுக்கு ஏதேனும் தகவல்கள், குறைகள் இருப்பின் 94888 92608 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

- நன்றி/ தினமணி.காம்

Blog Archive