::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, April 2, 2010

அன்னை கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

கூத்தாநல்லூர்,​​ஏப் 1-
லெட்சுமாங்குடி கம்பர் தெருவிலுள்ள அன்னை கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் பள்ளியின் 27ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் சேர்மேன் பேராசிரியர் எஸ்.வெங்கட்ராஜலு அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.மணிகண்டன், கூத்தாநல்லூர் ஜமாஅத் தலைவர் என்.எம்.சிஹாபுதீன், கூத்தாநல்லூர் ஜமாஅத் செயலாளர் ஜே.எம்.ஏ. ஷேக் அப்துல் காதர், கூத்தாநல்லூர் ஜமாஅத் நிர்வாகி எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில் கனி ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.​

கூத்தாநல்லூர் ஜமாஅத் தலைவர் என்.எம்.சிஹாபுதீன், மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக கூத்தாநல்லூர் நகராட்சி பணியாளர் ஏ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளியின் முதல்வர் என்.ஏ.செய்யது நாசர் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக பள்ளியின் தாளாளர் ஆர்.சரஸ்வதி அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

No comments:

Blog Archive