::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, April 28, 2010

திருவாரூர் மாவட்டத்தில் 'பந்த்': இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும் நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்து 189 பேரும், ரயில் மறியலில் ஈடுபட்ட 275 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஒருசில மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கின. இதேபோல் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், நன்னிலம் உட்பட அனைத்துபகுதிகளிலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Blog Archive