::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, March 24, 2010

திருவாரூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வை 15,555 பேர் எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (நேற்று) தொடங்கிய எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வை 15,555 மாணவ,​​ மாணவிகள் எழுதினர்.​ ​ ​

திருவாரூர் மாவட்டம் முழுவதும் மாணவ,​​ மாணவிகள் எஸ்எஸ்எல்சி ​ தேர்வு எழுத 47 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​ ​ இதில் 7,124 மாணவர்களும்,​​ 8,431 மாணவிகளும் என மொத்தம் 15,555 பேர் தேர்வு எழுதினர்.​ ​ ​

தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களைக் கொண்டு செல்ல ஏதுவாக மாவட்டம் முழுவதும் 6 இடங்களில் கட்டுக்காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.​

Friday, March 19, 2010

கூத்தாநல்லூரில் மார்ச் 21ல் மின்தடை

கூத்தாநல்லூரில் வரும் 21ம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது. மின்வாரிய மன்னார்குடி கோட்ட அளவிலான அவசரகால பணிகளுக்காக வரும் 21ம் தேதி கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் பகுதிகளிலும், 22ம் தேதி உள்ளிக்கோட்டையிலும் , 23ம் தேதி மன்னார்குடியிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது என்று மின்வாரிய செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (மார்ச் 19) ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வெளியான துண்டு பிரசுரங்கள்
















Tuesday, March 16, 2010

தக்பீர் ஹஜ் சர்வீஸின் உம்ரா பயிற்சி முகாம்

தக்பீர் ஹஜ் சர்வீஸின் உம்ரா பயிற்சி முகாம் கடந்த 13-03-2010 சனிக்கிழமை அன்று நமதூர் செல்வி மஹாலில் காலை 9.30 மணி முதல் 1.30 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அல்ஹாஜ் கே.எம்.ஏ.முஹம்மது மைதீன் காதிரி அவர்கள் தலைமை ஏற்க, நமதூரைச் சார்ந்த அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், தக்பீர் ஹஜ் சா்வீஸில் உம்ரா சென்றவர்கள், செல்ல இருப்பவர்கள் மற்றும்
ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

நமதூர் ஜமாஅத் தலைவர் ஹாஜி என்.ஏ. சகாபுதீன் அவர்கள் வரவேற்புரையாற்ற, நமதூர் பள்ளிவாயில்களின் இமாம்கள் வாழ்த்துரை வழங்கினர். உம்ரா பிரயாண விளக்கவுரையை தக்பீர் ஹஜ் சர்வீஸின் நிர்வாக இயக்குனர் அல்ஹாஜ். என்.எஸ். சிராஜூதீன் அவர்கள் விவரித்தார்.

உம்ராவிற்கான பயிற்சி வகுப்பில் சென்னை அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா அல்ஹாஜ். எம். அபூபக்கர் சித்திக் யூசுபி ரஷாதி அவர்கள் ‌நேரடி விளக்கமளித்தார்.

இறுதியாக அல்ஹாஜ். கே.ஏ.பரக்கத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரை கூற நீண்ட துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.













Tuesday, March 9, 2010

கூத்தாநல்லூரில் இன்று ​ மின் நிறுத்தம்

கூத்தாநல்லூர், மார்ச்.​ 9:​ ​
மன்னார்குடி துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால்,​​ செவ்வாய்க்கிழமை ​(மார்ச் 9) காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது.

இதனால்,​​ மன்னார்குடி,​​ கூத்தாநல்லூர்,​​ வடபாதிமங்கலம்,​​ பருத்திக்கோட்டை,​​ பரவாக்கோட்டை,​​ உள்ளிக்கோட்டை,​​ ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

Tuesday, March 2, 2010

திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (01-03-2010) 5 ஆயிரத்து 212 மாணவர்கள், 6 ஆயிரத்து 869 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 81 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

இவர்களுக்காக 32 பேர் தேர்வு மையங்கள் செயல்படுத்தப்பட்டன. மொத்தம் 5 இடங்களில் வினாத்தாள் மையங்கள் வைக்கப்பட்டுள்ளன. தேர்வு எழுதும் மையங்களை முதன்மைக்கல்வி அலுவலர் கலைவாணி மற்றும் பறக்கும் படையினர் சென்று ஆய்வு செய்தனர்.

நன்றி - தினமலர்.காம்

Blog Archive