கூத்தாநல்லூர் அருகே லட்சுமாங்குடியில் வர்த்தக சங்க கூட்டம் நடந்தது. தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் லட்சுமணன், பொருளாளர் கண்ணையன், துணைச்செயலாளர் ஆரிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை நகராட்சி துணைத்தலைவர் காதர்உசேன், வருவாய் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வழங்கினர்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் வசதிக்காக லட்சுமாங்குடி, கூத்தாநல்லூரில் இருந்து பள்ளி நேரத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். வர்த்தகர்களுக்கு சிறுதொழில் கடன் வழங்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. துணைத்தலைவர் அப்துல்பாரி வரவேற்றார். முன்னாள் தலைவர் நாகூர்கனி நன்றி கூறினார்.