திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஜனவரி மாதமும் 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்படும் என ஆட்சியர் எம். சந்திரசேகரன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாத மற்றும் ஒரு இணைப்பு உள்ளவர்களுக்கு ஆக. 2008 முதல் மாதந்தோறும் தொடர்ந்து 3 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஜனவரி மாதத்துக்கும் தலா மூன்று லிட்டர் வீதம் மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே, மண்ணெண்ணெய் பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு அங்காடிகளில் 3 லிட்டர் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.