கடலோர மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி தெரிய வாய்ப்புள்ளதாக கருதப்படும், கங்கண சூரிய கிரகணம் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் வரும் 12ஆம் தேதி 3 இடங்களில் விழிப்புணர்வு பிரசார பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதுதொடர்பாக அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ராசப்பன், நீடாமங்கலத்தில் தெரிவித்ததாவது: கங்கண சூரிய கிரகணம் வரும் 15ம் தேதி பிற்பகல் 1.20 மணிக்கு நிகழ்கிறது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் 90 முதல் 98 சதவீதம் வரை தெரிய வாய்ப்பு உள்ளது. கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பாதிப்பு ஏற்படும். இதை பார்க்க அறிவியல் இயக்கம் சார்பில் பிரத்யேக கண்ணாடிகளை குறைந்த கட்டணத்தில் கண்ணாடி ஒன்று ரூ. 10-க்கும் வழங்கப்படவுள்ளது.