திருவாரூர் மாவட்டத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுக்கும் மூன்றாம் கட்டப்பணி புதன்கிழமை முதல் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நலவாரிய உறுப்பினர்கள் மற்றும் ஆண்டு வருமானம் ரூ. 72,000-த்துக்கும் குறைவாக உள்ள அனைத்துக் குடும்பங்களையும் உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கும் பொருட்டு இரண்டு கட்டமாக ஏற்கெனவே நடத்தப்பட்ட புகைப்படம் எடுக்கும் பணியில் இதுவரை 2,86,374 குடும்பங்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் இதுவரை 2,11,925 பேருக்கு அடையாள அட்டைகள் வரப்பெற்று, அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து, மேலும் ஏதேனும் தகவல்களை பெற விரும்பினால் 04366-225662 அல்லது 94888 92608 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
மேலும் புதன்கிழமை முதல் அனைத்து வேலைநாள்களிலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மூன்றாம் கட்ட புகைப்படம் எடுக்கும் பணி நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விடுபட்டுள்ள அனைத்து குடும்பங்களும் புகைப்படம் எடுத்துக் கொள்ளுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.