கோலாலம்பூர்: உலகின் மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் என்ற விளம்பரத்தை தீவிரப்படுத்தியுள்ள ஏர் ஆசியா, பயணிகளுக்கு அதிரடிச் சலுகையாக 10 லட்சம் இலவச டிக்கெட்டுகளை வழங்குகிறது.ஏர் ஆசியா விமானங்கள் செல்லும் அனைத்து நாடுகளுக்கும் இந்த இலவச டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த டிக்கெட்டுகளை ஏர் ஆசியாவின் இணையதளத்தில் பதிவு செய்து பெற வேண்டும். நவம்பர் 11-ம் தேதி துவங்கிய இந்த முன்பதிவு வரும் நவம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை நீடிக்கிறது. இந்த டிக்கெட்டுகள் மூலம் வரும் மே 10, 2010 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை பயணம் செய்ய முடியும்.
இந்த இலவச டிக்கெட் அறிவிப்பால் 11 -ம் தேதி மட்டும் இந்த விமான நிறுவனத்தின் தளத்துக்கு 300 மில்லியன் ஹிட்ஸ் கிடைத்ததாக ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.
முதல்நாள் மட்டும் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம். எரிபொருள் கட்டணம், விமானக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றாலும், விமான நிலையக் கட்டணம், சீட் கட்டணம் என அடிப்படைக் கட்டணங்களை வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தாவிலிருந்து இந்த விமான சேவையைப் பெற முடியும். சென்னைக்கு இந்த விமான சேவை இல்லை.
- நன்றி/தட்ஸ்தமிழ்.com