::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, November 25, 2009

வேன் - பைக் மோதல்: பூதமங்கலம் வாலிபர் மரணம்

திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கட்டடக் கட்டுமானப் பிரிவின் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டடக் கட்டுமானப் பணிகளை வரும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டுள்ளார்.

கூத்தாநல்லூரில் தீயணைப்பு நிலையக் கட்டடக் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர் எம். சந்திரசேகரன் அங்கு தேங்கியிருந்த தண்ணீரை மோட்டார் பம்பு மூலம் வெளியேற்ற உத்தரவிட்டார்.

ஆய்வின் போது பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் இரா. பாஸ்கரன், வட்டாட்சியர் குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவஞானபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் எம். சந்திரசேகரன் உத்தரவிட்டார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் 142 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தொடர்புடைய அலுவலர்களை உடன் அழைத்து, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த தகுதியுடைய நபர்களுக்கு ஒரு மாத காலத்துக்குள் அட்டை வழங்க வேண்டும் என அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அலுவலர்களை நம்பி, தங்கள் தேவைகள் குறித்து மனு செய்கின்றனர். எனவே அரசு அலுவலர்கள் அந்த மனுக்களை மனுதாரர் நிலையிலிருந்து பரிசீலித்து உடன் நிறைவேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாரமும் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அடுத்த வாரம் நடைபெறும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே மனுக்கள் பெற வேணடும் என்றார் ஆட்சியர்.

Monday, November 23, 2009

அரசின் திட்டங்களை சிறுபான்மையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - மாவட்ட ஆட்சியர்

சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் தினம் கொண்டாடப்பட்டது.

விழாவுக்குத் தலைமை வகித்து ஆட்சியர் பேசியது: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாளையொட்டி, தேசிய ஒருமைப்பாடு வாரம் கொண்டாடப்படுகிறது. இதன்படி உறுதிமொழி ஏற்பு, சிறுபான்மையினர் தினம், மனித நேய வார விழா, கலை நிகழ்ச்சிகள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு உள்ளிட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

தமிழக அரசு குழந்தைகள், மாணவ, மாணவிகள், திருமண வயதுள்ள பெண்கள், முதியோர்கள் என அனைவருக்கும் தேவையான பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக சிறுபான்மையினருக்கு அவர்களது நலன் கருதி தொழில் செய்ய கடனுதவி, கல்வியில் இட ஒதுக்கீடு மற்றும் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இத் திட்டங்களை தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.

Thursday, November 12, 2009

10 லட்சம் 'இலவச விமான டிக்கெட்டுகள்' வழங்கும் ஏர் ஆசியா!

கோலாலம்பூர்: உலகின் மிகக் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனம் என்ற விளம்பரத்தை தீவிரப்படுத்தியுள்ள ஏர் ஆசியா, பயணிகளுக்கு அதிரடிச் சலுகையாக 10 லட்சம் இலவச டிக்கெட்டுகளை வழங்குகிறது.

ஏர் ஆசியா விமானங்கள் செல்லும் அனைத்து நாடுகளுக்கும் இந்த இலவச டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த டிக்கெட்டுகளை ஏர் ஆசியாவின் இணையதளத்தில் பதிவு செய்து பெற வேண்டும். நவம்பர் 11-ம் தேதி துவங்கிய இந்த முன்பதிவு வரும் நவம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை நீடிக்கிறது. இந்த டிக்கெட்டுகள் மூலம் வரும் மே 10, 2010 முதல் அக்டோபர் 10ம் தேதி வரை பயணம் செய்ய முடியும்.

இந்த இலவச டிக்கெட் அறிவிப்பால் 11 -ம் தேதி மட்டும் இந்த விமான நிறுவனத்தின் தளத்துக்கு 300 மில்லியன் ஹிட்ஸ் கிடைத்ததாக ஏர் ஆசியா தெரிவித்துள்ளது.

முதல்நாள் மட்டும் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாம். எரிபொருள் கட்டணம், விமானக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்றாலும், விமான நிலையக் கட்டணம், சீட் கட்டணம் என அடிப்படைக் கட்டணங்களை வசூலிக்கப்படுகிறது.

இந்தியாவிலிருந்து திருச்சி, கொச்சி, திருவனந்தபுரம் மற்றும் கொல்கத்தாவிலிருந்து இந்த விமான சேவையைப் பெற முடியும். சென்னைக்கு இந்த விமான சேவை இல்லை.

- நன்றி/தட்ஸ்தமிழ்.com

கனமழை எதிரொலி - காய்கறி விலை உயர்வு

Saturday, November 7, 2009

தொடரும் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக பெய்து வரும் மழையால் ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, அக்.28-ம் தேதி இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் புதன்கிழமை முழுவதும் பெய்த மழை காரணமாக வியாழக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால், வியாழக்கிழமை பகலில் விட்டு, விட்டு தூறல் விழுந்தவண்ணம் இருந்தது. வியாழக்கிழமை இரவு முழுவதும் மழை தொடர்ந்தது. வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தொடர்ந்து மழைத் தூறல்கள் இருந்தது. பிற்பகலில் லேசான வெயில் அடித்தது. பெரும்பாலான நேரங்களில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன.

Blog Archive