திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த எம். சந்திரசேகரன் இந்திய மருத்துவக் கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றிய கே. பாஸ்கரன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Friday, January 21, 2011
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே. பாஸ்கரன் நியமனம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த எம். சந்திரசேகரன் இந்திய மருத்துவக் கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றிய கே. பாஸ்கரன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Tuesday, January 11, 2011
பெரியபள்ளிவாயில் பரக்கத்துல்லா-மெஹர்நிஸா ஹால்
மேற்காணும் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்கள் அளிக்க முன்வந்துள்ளார்கள். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இவ்வரங்கத்திற்கு “பரக்கத்துல்லாஹ் - மெஹர்நிஸா ஹால்” எனப் பெயரிட்டு கட்டிமுடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10-1-2011) திங்கள் மாலை 5-00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:
நீடூர் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்
உங்களுடைய ஆலோசனைகளை பெரியப்பள்ளிவாயில் ஜமாஅத் நிர்வாகத்திற்கு தெரிவிக்க அல்லது மேலும் விளக்கம் பெற கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில் செயலாளர் ஜனாப். ஜமால் ஷேக் (+91 99425 20419) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
பெரியப்பள்ளிவாயில் குளத்தின் சுற்றுச்சுவர் மறுசீரமைப்பு பணி

மழைக்காலம் முடிந்த இந்நிலையில் இடிந்த பெரியப்பள்ளிவாயில் குளத்தின் சுற்றுச்சுவரினை மீண்டும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஊகிக்கப்பட்ட செலவுகள் கணக்கிடப்பட்டு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் என முடிவெடுக்கப்பட்டது.
எனினும் இத்தொகையை தமிழக அரசின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் பகிர்ந்து கொண்டு கட்டி முடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான சரிபாதி பங்குத்தொகை ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் நமது பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தின் சார்பாக திருவாரூா் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இன்னும் ஓரிரு வாரங்களில் குளத்தின் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விரைவில் வேலைகள் துரிதமாக நடைபெறும் என பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.
தகவல் - ஜமால். ஷேக் அப்துல் காதர்
செயலாளர், கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில்
Saturday, January 8, 2011
அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளி (அரையாண்டுத் தேர்வு முடிவுகள் டிசம்பர்-2010)
உங்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பின், ஒவ்வொரு தேர்வுகளின் முடிவுகளை தேர்வு முடிந்த 15 நாட்களுக்குள் எதிர்பாருங்கள்.
அன்னை கஸ்தூரிபா காந்தி
நர்சரி & பிரைமரி பள்ளி,
(நாளைய அதிகாரிகளுக்கான இன்றைய பள்ளி)
கம்பர்தெரு, லெட்சுமாங்குடி.
போன்: +91 4367 234384
செல் : +91 9976 234384
Friday, December 31, 2010
இணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்துவது தமிழகம் முழுவதும் விரிவாக்கம்
இதுகுறித்து, வெளியிட்டுள்ள அறிக்கை: www.tneb.in என்ற இணைய தளத்தில் சென்று, billing services என்ற தலைப்புக்குள் online bill payment என்ற உபதலைப்பை கிளிக் செய்து மின்கட்டண நுழைவாயில் (internet payment gateway) படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து மின்கட்டணத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி பண அட்டை மூலமாகவோ, அனைத்து மாஸ்டர்/விசா கடன் அட்டைகள் மூலமாகவோ இந்த இணைய தளத்தில் செலுத்தலாம் . இணைய தள வணிக சேவை மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதி ஆக்சிஸ், ஐசிஐசிஐ, சிட்டி யூனியன், ஐஓபி, இந்தியன் வங்கிகளில் உள்ளது.
தற்போது ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் கனரா வங்கிகள் மூலம் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த முடியும். மேலும் கூடுதலாக பல வங்கிகளை இத்திட்டத்தில் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆகவே, மின்கட்டணத்தை www.tneb.in என்ற இணையதளம் மூலம் நுகர்வோர்கள் எளிதில் கட்டலாம்.
Tuesday, December 28, 2010
உலமாக்கள் நல வாரியத்தில் உதவிகள் பெற அழைப்பு
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் இதுவரை 442 பேர் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர். இந்த வாரியத்தின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத் திட்ட உதவிகளின் விவரம் அடையாள அட்டையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை, கண் கண்ணாடி, ஈமச்சடங்கு உதவித் தொகை ஆகியவற்றை மட்டும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரே உடனுக்குடன் ஒப்பளிப்பு செய்யும் வகையில் இம் மாவட்டத்துக்கு இதுவரை ரூ. 87,500 ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரையில் 4 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ. 7,000 வழங்கப்பட்டுள்ளது.
எனவே, மேற்காணும் அடையாள அட்டை பெற்றுள்ளவர்கள் தகுதியான நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேலும், இந்த வாரியத்தில் இதுவரை பதிவு செய்யாத நபர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் மற்றும் தஞ்சையில் உள்ள மாவட்ட வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகம் ஆகியவற்றில் விண்ணப்பங்களை நேரடியாகப் பெற்று முழுமையான சான்றுகளுடன் விண்ணப்பித்து வாரியத்தில் உறுப்பினராகிப் பயன் பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- நன்றி (தினமணி.காம்)
Thursday, December 16, 2010
மேல் சபை வாக்காளர் பட்டியல் சேர நாளை கடைசி நாள் (டிசம்பர் - 17)
தமிழக அரசின் மேல் சபைக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களில் சென்று சரிபார்த்துகொள்ளலாம். இதில் விடுபட்டவர்கள், மேலும் புதிதாக விண்ணப்பிக்க விரும்புவோர் நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 17 வரை விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர்பட்டியல் விரைவில் வெளியிடப்படும். எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும். உங்களுக்கு தெரிந்த நமதூர் பட்டதாரிகள், ஆசிரியர்கள் இருந்தால் இந்த தகவலை தெரியப்படுத்த வேண்டுகிறோம்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலை கழகத்தில் 2007-ல் பட்ட படிப்பு முடித்தவர்கள் மற்றும் 2007-க்கு முன்பாக பட்ட படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தொலைதூர கல்வியில் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எங்கு விண்ணப்பிப்பது?
நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகம்
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்கள் விநியோகிப்படும் மையங்களில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். http://www.elections.tn.gov.in/tnmlc/FORM18TAMIL.pdf இணையதளத்திலும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்து நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவத்துடன் சமர்பிக்க வேண்டிய சான்றிதழ்கள்:
1. பட்ட சான்றிதழ் (Degree Certificate or provisional Certificate )
2. குடும்ப அட்டை (Ration Card) அல்லது ஓட்டுனர் உரிமம் (Driving Licence)
3. வேறு முகவரியில் வசிப்பின் வீட்டு வாடகை ரசீது (அல்லது) இருப்பிடச் சான்றிதழ்
மூல சான்றிதழை (ஒரிஜினல் சர்டிபிகேட்) சமர்பிக்க வேண்டாம். சான்றிதழை நகல் (Xerox copy) எடுத்து Self Attested செய்து சமர்பித்தால் போதும். ஆனால் ஒரிஜினல் சர்டிபிகேட்டை அதிகாரி சரிபார்க்க உடன் எடுத்து செல்வது அவசியம்.
மேலும் விபரங்கள் நமதூருக்கான நீடாமங்கலம் வட்டாச்சியர் அலுவலகத்தில் (Ph: 04367 260456) அல்லது இந்த இணையத்திலும் http://www.elections.tn.gov.
