::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, March 30, 2011

முதல்வர் கருணாநிதியின் வேட்பு மனு ஏற்பு

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி முதல் முறையாக தான் படித்து, வளர்ந்த ஊரான திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்பி, மார்ச் 24-ம் தேதி தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் ந. ஜயராஜிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுக்கள் கடந்த திங்கள்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் திருவாரூர் தொகுதியில் மு. கருணாநிதி தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

திருவாரூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 18 வேட்பு மனுக்களில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 12 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நன்றி - தினமணி.காம்

Blog Archive