::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, March 30, 2011

அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளி ஆண்டு சந்திப்பு 2011

லெட்சுமாங்கு‌டி - கம்பர் தெரு அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியின் 28-ம் ஆண்டு சந்திப்பு 2011 கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.

ஆண்டு சந்திப்பு 2011 வழக்கமான ஆண்டு விழாவினை போல் அல்லாமல் (பெற்றோர் ஆசிரியர் கூட்டம் - பரிசளிப்பு விழா - மாயாஜால தந்திர காட்சி) ஆகிய நிகழ்வுகளுடன் அனைத்து தரப்பு பெற்றோர்களின் அதிகமான வருகையுடனும், ஒத்துழைப்புடனும் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு கூத்தாநல்லூர் பெரியப்பள்ளி ஜமாஅத் செயலாளர் ஜனாப். J.M.A. ஷேக் அப்துல் காதர் அவர்கள் தலைமை வகித்தார். அன்னை கஸ்தூரிபா காந்தி கல்வி அறக்கட்டளையின் Board of Trustee K.A.செய்யது முபாரக் அவர்கள், ராயல் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் P.M.A.முஹம்மது ரபீயுதீன் அவர்கள், நமது www.koothanallur.co.in - Admin M.A.முஹம்மது ரியாசுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியின் முன்னாள் தாளாளர் திருமதி. R.சரஸ்வதி அவர்கள் வாழ்த்துரை வழங்கி, விளையாட்டுப் போட்‌டிகளின் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கினார்.

முன்னதாக, பள்ளி தாளாளர் / முதல்வர் N.A.செய்யது நாசர் அவர்கள் அனைவரையும் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் பள்ளி ஆசிரியை D.ரேகா நன்றி கூறினார்.

திருவாரூர் மாவட்டத்தில் 64 பேர் மனு தாக்கல்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மொத்தம் 64 பேர் மனு செய்துள்ளனர்.

மனு தாக்கல் செய்ய கடைசி நாளான சனிக்கிழமை வரை திருத்துறைப்பூண்டி தொகுதியில் 13, மன்னார்குடி தொகுதியில் 17, திருவாரூர் தொகுதியில் 18, நன்னிலம் தொகுதியில் 16 என மொத்தம் 64 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி (தனி): பி. செல்வதுரை (காங்கிரஸ்), டி. ஜெயலட்சுமி (காங்கிரஸ் - மாற்று), கே. உலகநாதன் (இந்திய கம்யூ.), பி. மாரிமுத்து (இந்திய கம்யூ. - மாற்று) ப. சிவசண்முகம் (பாஜக), ஏ. ரங்கசாமி (பாஜக - மாற்று), டி. கந்தசாமி (பகுஜன் சமாஜ்), தேவதாஸ் (மக்கள் மாநாடுக் கட்சி), சுயேச்சைகள் - ராமச்சந்திரன், ச. ராஜ்குமார், சிங்கபெருமாள், பி. க. கருணாநிதி, சா. சரவணன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மன்னார்குடி தொகுதி.... சிவா. ராஜமாணிக்கம் (அதிமுக), எஸ். காமராஜ் (அதிமுக - மாற்று), பி. ராஜா (திமுக), ஏ. சிவசுப்பிரமணியன் (திமுக -மாற்று), பி. வாசுதேவன் (பாஜக), ஆரோக்கியசாமி (ஐ.ஜே.கே), பி. அன்புதாஸ் (பகுஜன் சமாஜ்) சுயேட்சைகள் - ரா. பிச்சைக் கண்ணு, அ. அப்துல் சமது எஸ். ராஜேஷ், எம். லட்சுமி, எஸ். ராஜா, வெற்றிவேல், எல். வெங்கடாசலம், வி. செல்வராஜ், எம். ஜெயச்சந்திரன், எஸ். ராசா ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவாரூர் தொகுதி.... மு. கருணாநிதி (திமுக), கு.தெ. முத்து (திமுக - மாற்று) எம். ராஜேந்திரன் (அதிமுக), ஆர். தென்கோவன் (அதிமுக - மாற்று),), ஸ்ரீராமச்சந்திரன், செல்வம் (சிவசேனா), தை. ஜெயராமன் (பகுஜன் சமாஜ்), ஆர். பிங்களன் (பாஜக), ம. கணேசன் (பாஜக - மாற்று), சுயேட்சைகள் - எஸ். முத்தரசன், டி. அன்பழகன், பி. ரத்தினம், ரா. ரமேஷ்குமார், கே. சாந்தி, கே.ஆர். ராமசாமி, பி. சந்திரசேகரன், க. ஆனந்தராஜ் , பொ. ஜயகாந்தன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நன்னிலம் தொகுதி..... ஆர். இளங்கோவன் (திமுக), சுரேஷ்பாபு (திமுக- மாற்று), இரா. காம்ராஜ் (அதிமுக), இரா. குணசேகரன் (அதிமுக- மாற்று), ஜி. கணேசன் (ஐ.ஜே.கே), சுபா (ஐஜேகே- மாற்று), சி. இம்மானுவேல் (பகுஜன் சமாஜ்), சுயேட்சைகள் - வி. சந்திரசேகரன், ந. மீனாட்சி, பி. ஆறுமுகம், ந. பனசை அரங்கன், ராஜராஜன், சிவக்குமார், சுப்பிரமணியன், பி. பழனி அமுதன், ஏ. சேகர் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

நன்றி - தினமணி.காம்

கருணாநிதி தொகுதியில் ஜெயலலிதா பிரச்சாரம்

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டார்.

தஞ்சாவூரிலிருந்து செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டர் மூலம் நாகை மாவட்டம், செம்பனார்கோவில் செல்லும் ஜெயலலிதா, அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு, அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தார்.

அங்கிருந்து, பிரசார வேன் மூலம் திருவாரூர் தெற்கு வீதியில் பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் ஆர். காம்ராஜ் (நன்னிலம்), குடவாசல் எம். ராஜேந்திரன் (திருவாரூர்), சிவா. ராஜமாணிக்கம் (மன்னார்குடி) மற்றும் கே. உலகநாதன் (திருத்துறைப்பூண்டி - இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்கிறார். திருவாரூரிலிருந்து மீண்டும் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கடலூர் மாவட்டம், புவனகிரிக்குச் சென்றார் ஜெயலலிதா.

நன்றி - தினமணி.காம்

முதல்வர் கருணாநிதியின் வேட்பு மனு ஏற்பு

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதி முதல் முறையாக தான் படித்து, வளர்ந்த ஊரான திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட விரும்பி, மார்ச் 24-ம் தேதி தொகுதி உதவித் தேர்தல் அலுவலர் ந. ஜயராஜிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

வேட்பு மனுக்கள் கடந்த திங்கள்கிழமை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பரிசீலனை செய்யப்பட்டன.

இதில் திருவாரூர் தொகுதியில் மு. கருணாநிதி தாக்கல் செய்திருந்த வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

திருவாரூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 18 வேட்பு மனுக்களில் 6 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 12 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

நன்றி - தினமணி.காம்

Monday, March 14, 2011

மின் கட்டண கணக்கீட்டு முறையில் மாற்றம்

ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் திருவாரூர் மாவட்டத்தில் மின் கட்டண கணக்கீட்டு முறையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

இதுகுறித்து திருவாரூர் மின் வாரிய செயற்பொறியாளர் எஸ். சத்தியநாராயணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மின் கட்டணக் கணக்கீடு மற்றும் வசூல் செய்வதில் தற்போதுள்ள முறையில் மாற்றம் செய்யப்பட்டு மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் புதிய திட்டத்தை ஏப். 1-ம் தேதி முதல் திருவாரூர் மின் பகிர்மான வட்டத்தில் அமல்படுத்த மின் வாரியம் உத்தேசித்துள்ளது.

தற்போது உள்ள பிரதி மாதம் 16-ம் தேதி முதல் மின் கணக்கீடு செய்தல், பிரதி மாதம் 1-ம் தேதி முதல் வசூல் செய்யும் முறையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் 1-ம் தேதி முதல் மாத கடைசி வரை மின் கணக்கீடும், மின் கணக்கீடு முடிந்த 2-ம் நாளிலிருந்து மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் முறையும் அமல்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய முறையின் மூலம் கட்டணம் செலுத்துவதில் கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.

இந்த புதிய திட்டத்தில் மின் நுகர்வோர்கள் தங்களது மின் கட்டணத்தை கணக்கீடு செய்த 20 நாள்களுக்குள் செலுத்த வேண்டும். உதாரணமாக ஒரு நுகர்வோரின் மீட்டரில் கணக்கெடுப்பு செய்து வெள்ளை அட்டையில் பதிவு செய்த நாள் ஏப்ரல் 1-ம் தேதி எனில், அவர் தமது மின் கட்டணத்தை ஏப்ரல் 20-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு கட்டத் தவறினால் ஏப்ரல் 21-ம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

மின் கணக்கீட்டில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், கணக்கீடு முடிந்த 5 தினங்களுக்குள் பிரிவு அலுவலரை சந்தித்து குறையை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அதேபோல, ஏப்ரல் 30-ம் தேதி கணக்கெடுப்பு செய்யப்பட்ட மின் நுகர்வோர் தனது கட்டணத்தை மே 18-ம் தேதிக்குள் கட்ட வேண்டும்.

முன்பிருந்தது போலவே இரு மாதத்துக்கு ஒரு முறை கணக்கீடு செய்யும் முறைதான் இந்த புதிய முறையிலும் பின்பற்றப்படும். ஆனால், கணக்கெடுப்பு 16-ம் தேதிக்கு பதிலாக 1-ம் தேதி தொடங்கும். எனவே, மாதம் முழுவதும் வேலை நாள்களில் பணம் செலுத்தும் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மின் நுகர்வோர் தங்கள் மின் கட்டணத்தை திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் செலுத்தலாம்.

நன்றி - தினமணி.காம்

Blog Archive