::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, January 22, 2011

நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து!

5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் செயல்படும்.

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தவணையாக ஜனவரி 23-ம் தேதியும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27-ம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம் நாள்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளிலும் முகாம் நாள்களின்போது இலவசமாக சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட உடன் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாள்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

நமது கூத்தாநல்லூரில்...
அரசு மருத்துவமனை,
நகராட்சி அலுவலகம்
(ஏ.ஆர். ரோடு),
ஜாமியா பெண்கள் தொடக்கப்பள்ளி
(ஜின்னா தெரு),
NRI சேவை அலுவலகம்
(அண்ணா காலனி),
புதிய பேருந்து நிலையம்
(லெட்சுமாங்குடி),
காதர் மஸ்தான் தைக்கால்
(கொரடாச்சேரி ரோடு),
பிடாரி கோவில்
(மரக்கடை),
தாய் சேய் நல மையம்
(மேல்கொண்டாழி)
ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

Blog Archive