::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, January 22, 2011

நாளை முதல் தவணை போலியோ சொட்டு மருந்து!

5 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கொடுக்க தமிழகம் முழுவதும் 70 லட்சம் குழந்தைகளுக்கு முதல் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) நடைபெறுகிறது.

இதற்காக மாநிலம் முழுவதும் 40 ஆயிரத்து 399 சிறப்பு மையங்கள் செயல்படும்.

போலியோவை முற்றிலும் ஒழிப்பதற்காக நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதல் தவணையாக ஜனவரி 23-ம் தேதியும், இரண்டாம் தவணையாக பிப்ரவரி 27-ம் தேதியும் முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாம் நாள்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகளிலும் முகாம் நாள்களின்போது இலவசமாக சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட உடன் குழந்தையின் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும். விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அடுத்தடுத்த நாள்களில் சொட்டு மருந்து வழங்கப்படும்.

நமது கூத்தாநல்லூரில்...
அரசு மருத்துவமனை,
நகராட்சி அலுவலகம்
(ஏ.ஆர். ரோடு),
ஜாமியா பெண்கள் தொடக்கப்பள்ளி
(ஜின்னா தெரு),
NRI சேவை அலுவலகம்
(அண்ணா காலனி),
புதிய பேருந்து நிலையம்
(லெட்சுமாங்குடி),
காதர் மஸ்தான் தைக்கால்
(கொரடாச்சேரி ரோடு),
பிடாரி கோவில்
(மரக்கடை),
தாய் சேய் நல மையம்
(மேல்கொண்டாழி)
ஆகிய இடங்களில் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


இந்த முகாம் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.

Friday, January 21, 2011

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே. பாஸ்கரன் நியமனம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக கே. பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த எம். சந்திரசேகரன் இந்திய மருத்துவக் கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசின் செய்தி - மக்கள் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றிய கே. பாஸ்கரன் திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tuesday, January 11, 2011

பெரியபள்ளிவாயில் பரக்கத்துல்லா-மெஹர்நிஸா ஹால்

கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில் பள்ளிக்கொல்லை அருகிலிருந்த பழமைவாய்ந்த மிராசுதார் சங்க ஓட்டுக் கட்டிடம் மிகவும் வழுவிழந்து காணப்பட்டதால் அதனை சமீபத்தில் இடித்துவிட்டு புதிதாக காண்கிரீட் கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கான செலவீனங்கள் ஆராயப்பட்டு, ரூ.10 லட்சத்தில் சிறப்பாக கீழ்தளம் 1000 சதுர அடியில் கட்டுவதென முடிவெடுக்கப்பட்டது.

மேற்காணும் ரூ.10 லட்சத்தை நன்கொடையாக அல்ஹாஜ். K.A.பரக்கத்துல்லாஹ் (துணை தலைவர், கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில்) அவர்கள் அளிக்க முன்வந்துள்ளார்கள். அவருடைய வேண்டுகோளுக்கிணங்க இவ்வரங்கத்திற்கு “பரக்கத்துல்லாஹ் - மெஹர்நிஸா ஹால்” எனப் பெயரிட்டு கட்டிமுடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (10-1-2011) திங்கள் மாலை 5-00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்:

நீடூர் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஆலோசனைக் கூட்டம்


சுமார் ரூ.350 கோ‌டி எனும் பெரும் பொருட்செலவில் வக்பு வாரியத்தின் கீழ் தொடங்கப்பட உள்ள நீடூர் மருத்துவக் கல்லூரி - முதலீட்டு தொகையை பொதுமக்களிடமிருந்து பங்குத்தொகையாக பெற்று தொடங்க முயற்சி மேற்கொண்டுள்ள நிலையில் நமதூருக்கு ஆலோசனை முகமாக ஆதரவையும், பங்குத் தொகையை பெறவும் விளக்கக் கூட்டம் நடத்த வருகைதர உள்ளனர்.

உங்களுடைய ஆலோசனைகளை பெரியப்பள்ளிவாயில் ஜமாஅத் நிர்வாகத்திற்கு தெரிவிக்க அல்லது மேலும் விளக்கம் பெற கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில் செயலாளர் ஜனாப். ஜமால் ‌ஷேக் (+91 99425 20419) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சின்னப்பள்ளி தெருவில் பெண்கள் மத்ரஸா துவக்கம்

பெரியப்பள்ளிவாயில் குளத்தின் சுற்றுச்சுவர் மறுசீரமைப்பு பணி


நமது கூத்தாநல்லூர் பெரியபள்ளிவாயில் குளத்தின் 104 ஆண்டுகள் பழமையான சுற்றுச்சுவர் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக மஸ்ஜிதியா தெரு - ஜாவியா தெரு சந்திப்பை ஒட்டிய சாலையில் நடுபகுதியுடன் விரிசல் கண்டு கடந்த 2010 - நவம்பர் மாதம் - 27ம் தேதி இரவு சுமார் 7.30 மணிக்கு குளத்திற்குள் விழுந்துவிட்டது.

இச்சம்பவத்தில் எவ்வித ஆபத்தும் இன்றி காப்பாற்றிய இறைவனுக்கும், சாலைய‌ை முடக்கி முன்னேற்பாடுகள் செய்த பெரியப்பள்ளி நிர்வாகத்திற்கும் ஏனைய தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மழைக்காலம் முடிந்த இந்நிலையில் இடிந்த பெரியப்பள்ளிவாயில் குளத்தின் சுற்றுச்சுவரினை மீண்டும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அதற்கான ஊகிக்கப்பட்ட செலவுகள் கணக்கிடப்பட்டு ரூ.7 லட்சத்து 20 ஆயிரம் என முடிவெடுக்கப்பட்டது.

எனினும் ‌இத்தொகையை தமி‌ழக அரசின் “நமக்கு நாமே” திட்டத்தின் கீழ் பகிர்ந்து கொண்டு கட்டி முடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு அதற்கான சரிபாதி பங்குத்தொகை ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் நமது பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தின் சார்பாக திருவாரூா் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்னும் ஓரிரு வாரங்களில் குளத்தின் தண்ணீர் வெளியேற்றப்பட்டு விரைவில் வேலைகள் துரிதமாக நடைபெறும் என பெரியப்பள்ளிவாயில் நிர்வாகத்தினர் தெரிவித்துக் கொள்கின்றனர்.

தகவல் - ஜமால். ஷேக் அப்துல் காதர்
செயலாளர், கூத்தாநல்லூர் பெரியப்பள்ளிவாயில்

Saturday, January 8, 2011

அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளி (அரையாண்டுத் தேர்வு முடிவுகள் டிசம்பர்-2010)

லெட்சுமாங்குடி, கம்பர் தெருவில் இயங்கிவரும் அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகளின் டிசம்பர் -2010 அரையாண்டுத் தேர்வு முடிவுகள‌ை வெளியூர் அல்லது வெளிநாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் தந்தைமார்களின் கவனத்திற்கு எடுத்து செல்லவே இம்முயற்சியை அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியின் நிர்வாகம் ‌மேற்கொண்டுள்ளது.

உங்களின் பிள்ளைகள் இப்பள்ளியில் படித்துக் கொண்டிருப்பின், ஒவ்வொரு தேர்வுகளின் முடிவுகளை தேர்வு மு‌டிந்த 15 நாட்களுக்குள் எதிர்பாருங்கள்.


மாணவர்களின் நலனுக்காக என்றென்றும்...
அன்னை கஸ்தூரிபா காந்தி
நர்சரி & பிரைமரி பள்ளி,
(நாளைய அதிகாரிகளுக்கான இன்றைய பள்ளி)
கம்பர்தெரு, லெட்சுமாங்குடி.
போன்: +91 4367 234384
செல் : +91 9976 234384

Blog Archive