::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, May 8, 2010

குடும்ப அட்​டை​தா​ரர்​கள் கவ​னத்​துக்கு....

திரு​வா​ரூர் மாவட்ட குடும்ப அட்​டை​தா​ரர்​கள் எப்​போது வேண்​டு​மா​னா​லும் அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​களை நியாய விலைக் கடை​க​ளில் பெற்​றுக் கொள்​ள​லாம் என மாவட்ட ஆட்​சி​யர் ​(பொறுப்பு)​ எம்.​ தங்​க​வேல் தெரி​வித்​துள்​ளார்.​​ ​ ​ இது​கு​றித்து அவர் வெளி​யிட்ட செய்​திக்​கு​றிப்பு:​​

குடும்ப அட்​டை​யில் தொடர்ந்து மூன்று மாதங்​க​ளா​கப் பொருள்​கள் பெற்​றுக் கொள்​ளா​மல் இருந்​தால்,​​ அந்த குடும்ப அட்டை தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைக்​கப்​ப​டு​கி​றது என புகார்​கள் வந்​துள்​ளன.​

இத​ன​டிப்​ப​டை​யில் ஏற்​கெ​னவே இது​கு​றித்து அறி​வு​ரை​கள் அனைத்து வட்ட வழங்​கல் அலு​வ​லர்​கள் மற்​றும் நியாய விலைக் கடை ஊழி​யர்​க​ளுக்​கும் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

குடும்ப அட்​டை​க​ளைப் பயன்​ப​டுத்தி பொருள்​கள் வாங்​கு​வதோ,​​ வாங்​கா​மல் இருப்​பதோ குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளின் முழு உரிமை.​ எனவே,​​ தொடர்ந்து பொருள்​கள் வாங்​கா​மல் இருக்​கும் குடும்ப அட்​டை​களை பொருள்​கள் வாங்​கு​வ​தற்​காக நிறுத்தி வைக்​கக் கூடாது என மீண்​டும் அறி​வு​ரை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​

அதோடு,​​ பல மாதங்​க​ளாக பொருள்​கள் வாங்​கா​மல் தேவைப்​ப​டும் போது பொருள்​கள் வாங்​கச் செல்​லும் குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளுக்கு பொருள்​கள் வழங்க மறுக்​கக் கூடாது என்​றும் அவர்​க​ளுக்கு தொடர்ந்து பொருள்​கள் வழங்​கப்​பட வேண்​டு​மென நியாய விலைக் கடைப் பணி​யா​ளர்​க​ளுக்கு அறி​வு​ரை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

எனவே குடும்ப அட்​டை​தா​ரர்​கள் குடும்ப அட்​டை​யைப் பயன்​ப​டுத்தி தொடர்ந்து எல்லா மாதங்​க​ளி​லும் பொருள்​கள் வாங்க வேண்​டு​மென்ற நிர்​பந்​தம் கிடை​யாது. ​ ​

குடும்ப அட்​டை​தா​ரர்​கள் தங்​க​ளுக்​குத் தேவைப்​ப​டும் போது குடும்ப அட்​டை​யைப் பயன்​ப​டுத்தி தேவை​யான பொருள்​களை பெற்​றுக் கொள்​ள​லாம்.​​ ​ ​ ​

இது தொடர்​பான குறை​கள் ஏதே​னும் இருப்​பின் திரு​வா​ரூர் மாவட்ட வழங்​கல் அலு​வ​லர் செல்​பேசி எண் 94450 00295 ​ தொடர்பு கொண்டு தெரி​விக்​க​லாம் என எம்.​ தங்​க​வேல் தெரி​வித்​துள்​ளார்.​

Blog Archive