::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, May 24, 2010

நாளை மறுதினம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியாகின்றன.

கடந்த மார்ச் 23ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் எட்டரை லட்சம் பேர் நேரடியாக தேர்வு எழுதினர்.

இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன.

இந்த முடிவுகள் நாளை மறுதினம் (மே 26ம் தேதி) வெளியாகின்றன.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in-ல் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Monday, May 17, 2010

கூத்தாநல்லூர் பள்ளியில் மாணவர் முதலிடம்

கூத்தாநல்லூர் மன்ப–உல்–உலா மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார்.மாணவர் ஸ்ரீராம் 1080 மதிப்பெண், முகமது முபஷீர் 990, முகமது அப்துல்காதர் 989 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் தமிஜுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அன்வர்தீன், தலைமை ஆசிரியர் உதயகுமார் மற்றும் பலர் பாராட்டினர்.

திருவாரூர் மாவட்டத்தில் 100 சதத் தேர்ச்சி பெற்ற பள்​ளி​கள்

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் பல்​வேறு பள்​ளி​கள் 100 சதத் தேர்ச்​சியை பெற்​றுள்​ளன.​ ஆனால்,​​ ஒரு அர​சுப் பள்​ளி​யும் முழு​மை​யான தேர்ச்சி விகி​தத்தை எட்டி பிடிக்​க​வில்லை.​ ​​ ​ ​

புனித தெர​சாள் பெண்​கள் மேல்​நி​லைப் பள்ளி ​(திருத்​து​றைப்​பூண்டி)​,​​ நீலன் மெட்​ரிக் பள்ளி ​(நீடா​மங்​க​லம்)​,​​ நவ​பா​ரத் மெட்​ரிக் பள்ளி ​(உள்​ளிக்​கோட்டை)​,​​ மகா​தேவ குருஜி மெட்​ரிக் பள்ளி ​(வலங்​கை​மான்)​,​​ புனித அந்​தோ​னி​யார் மெட்​ரிக் பள்ளி ​(திருத்​து​றைப்​பூண்டி)​,​​ மன்ப உல்​உலா மேல்​நி​லைப் பள்ளி ​(கூத்​தா​நல்​லூர்)​,​​ சண்​முகா மெட்​ரிக் பள்ளி ​(மன்​னார்​குடி)​,​​ சங்​கரா மெட்​ரிக் பள்ளி ​(பேர​ளம்)​ ஆகிய பள்​ளி​கள் 100சதத் தேர்ச்​சியை பெற்​றுள்​ளன.​ ​

பின்​தங்​கிய அர​சுப் பள்​ளி​கள்:​​ அரசு பள்​ளி​கள் அள​வில் மகா​தே​வப்​பட்​டி​னம் மேல்​நி​லைப் பள்ளி 96 சத​மும்,​​ பூந்​தோட்​டம் மேல்​நி​லைப் பள்ளி 95.8 சத​மும்,​​ திருத்​து​றைப்​பூண்டி பெண்​கள் மேல்​நி​லைப் பள்ளி 93.3 சத​மும்,​​ நன்​னி​லம் மேல்​நி​லைப் பள்ளி 92.9 சத​மும்,​ஆவூர் 92.50 சத​மும்,​​ பொதக்​குடி பெண்​கள் பள்ளி 92.43 சத​மும்,​​ குளிக்​கரை அர​சுப் பள்ளி ​ 91.76 சத​மும்,​​ ஆலங்​கோட்டை அர​சுப் பள்ளி 90 சத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளன.

நன்றி - தினமணி.காம்

கூத்தாநல்லூர் நகராட்சி பகுதியில் காலாவதியான உணவுப்பொருட்கள்அழிப்பு

Thursday, May 13, 2010

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியாகின்றன.

இந்த முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in இணையத் தளத்தில் மதிப்பெண்கள் பட்டியலுடன் மாணவ, மாணவிகள் காணலாம்.

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 தேர்வை தமிழகத்தில் 6.93 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தனித் தேர்வர்களாக 60,000 பேர் எழுதினர்.

இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வுஎழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், எஸ்.எம்.எஸ். தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Saturday, May 8, 2010

குடும்ப அட்​டை​தா​ரர்​கள் கவ​னத்​துக்கு....

திரு​வா​ரூர் மாவட்ட குடும்ப அட்​டை​தா​ரர்​கள் எப்​போது வேண்​டு​மா​னா​லும் அத்​தி​யா​வ​சி​யப் பொருள்​களை நியாய விலைக் கடை​க​ளில் பெற்​றுக் கொள்​ள​லாம் என மாவட்ட ஆட்​சி​யர் ​(பொறுப்பு)​ எம்.​ தங்​க​வேல் தெரி​வித்​துள்​ளார்.​​ ​ ​ இது​கு​றித்து அவர் வெளி​யிட்ட செய்​திக்​கு​றிப்பு:​​

குடும்ப அட்​டை​யில் தொடர்ந்து மூன்று மாதங்​க​ளா​கப் பொருள்​கள் பெற்​றுக் கொள்​ளா​மல் இருந்​தால்,​​ அந்த குடும்ப அட்டை தாற்​கா​லி​க​மாக நிறுத்தி வைக்​கப்​ப​டு​கி​றது என புகார்​கள் வந்​துள்​ளன.​

இத​ன​டிப்​ப​டை​யில் ஏற்​கெ​னவே இது​கு​றித்து அறி​வு​ரை​கள் அனைத்து வட்ட வழங்​கல் அலு​வ​லர்​கள் மற்​றும் நியாய விலைக் கடை ஊழி​யர்​க​ளுக்​கும் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

குடும்ப அட்​டை​க​ளைப் பயன்​ப​டுத்தி பொருள்​கள் வாங்​கு​வதோ,​​ வாங்​கா​மல் இருப்​பதோ குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளின் முழு உரிமை.​ எனவே,​​ தொடர்ந்து பொருள்​கள் வாங்​கா​மல் இருக்​கும் குடும்ப அட்​டை​களை பொருள்​கள் வாங்​கு​வ​தற்​காக நிறுத்தி வைக்​கக் கூடாது என மீண்​டும் அறி​வு​ரை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​

அதோடு,​​ பல மாதங்​க​ளாக பொருள்​கள் வாங்​கா​மல் தேவைப்​ப​டும் போது பொருள்​கள் வாங்​கச் செல்​லும் குடும்ப அட்​டை​தா​ரர்​க​ளுக்கு பொருள்​கள் வழங்க மறுக்​கக் கூடாது என்​றும் அவர்​க​ளுக்கு தொடர்ந்து பொருள்​கள் வழங்​கப்​பட வேண்​டு​மென நியாய விலைக் கடைப் பணி​யா​ளர்​க​ளுக்கு அறி​வு​ரை​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.​​ ​ ​

எனவே குடும்ப அட்​டை​தா​ரர்​கள் குடும்ப அட்​டை​யைப் பயன்​ப​டுத்தி தொடர்ந்து எல்லா மாதங்​க​ளி​லும் பொருள்​கள் வாங்க வேண்​டு​மென்ற நிர்​பந்​தம் கிடை​யாது. ​ ​

குடும்ப அட்​டை​தா​ரர்​கள் தங்​க​ளுக்​குத் தேவைப்​ப​டும் போது குடும்ப அட்​டை​யைப் பயன்​ப​டுத்தி தேவை​யான பொருள்​களை பெற்​றுக் கொள்​ள​லாம்.​​ ​ ​ ​

இது தொடர்​பான குறை​கள் ஏதே​னும் இருப்​பின் திரு​வா​ரூர் மாவட்ட வழங்​கல் அலு​வ​லர் செல்​பேசி எண் 94450 00295 ​ தொடர்பு கொண்டு தெரி​விக்​க​லாம் என எம்.​ தங்​க​வேல் தெரி​வித்​துள்​ளார்.​

Saturday, May 1, 2010

இன்று (01-05-2010) முதல் PreKG, LKG, UKG, I to V அட்மிஷன் ஆரம்பம்!


இன்று (01-05-2010) முதல் PreKG, LKG, UKG, I to V அட்மிஷன் ஆரம்பம்!

இன்று (01-05-2010) முதல் PreKG, LKG, UKG, I to V அட்மிஷன் ஆரம்பம்!

Blog Archive