::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Wednesday, April 28, 2010

திருவாரூர் மாவட்டத்தில் 'பந்த்': இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் சார்பில் திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டத்தில் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார கொள்கையை எதிர்த்தும் நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடந்தது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் சாலைமறியலில் ஈடுபட்ட ஆயிரத்து 189 பேரும், ரயில் மறியலில் ஈடுபட்ட 275 பேரும் கைது செய்யப்பட்டனர்.

ஒருசில மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கின. இதேபோல் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம், நன்னிலம் உட்பட அனைத்துபகுதிகளிலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Monday, April 5, 2010

திருவாரூர் மாவட்டத்தில் ஏப்.26ல் உள்ளூர் விடுமுறை

முத்துப்பேட்டை கந்தூரி விழாவை ஒட்டி வரும் 26ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முத்துப்பேட்டை மகான் ஹக்கீம் செய்குதாவூது வலியுல்லா தர்காவில் பெரிய கந்தூரி சந்தனக்கூடு திருவிழா வரும் 25ம் தேதி நடக்கிறது. இதை ஒட்டி 26ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. இதை ஈடு செய்யும் வகையில் மே 15ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளான 26ம் தேதி அரசு கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள், அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு செயல்படும்.

இந்த விடுமுறை அரசு தேர்வுகள், நேர்காணல்கள், வங்கிகளுக்கு பொருந்தாது.

நன்றி - தினமலர்.காம்

Friday, April 2, 2010

கூத்தாநல்லூரில் துணிகர கொள்ளை

கூத்தாநல்லூர், ஏப் 2-
கூத்தாநல்லூர் பெரியகடைத்தெருவில் நாச்சிமுத்து என்பவர் என்.எம் டெக்ஸ்டைல்ஸ் ரெடிமெட்ஸ் எனும் ஜவுளிக் கடையை நடத்திவருகிறார். சம்பவத்தன்று காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.ஆயிரம் மதிப்புள்ள டிஜிட்டல் கேமரா திருடப்பட்டு உள்ளது. இதே போல அதே தெருவிலுள்ள மணி ஜூவல்லரி நகை கடையின் வெளிக்கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்து உள்கதவை உடைக்க முடியாததால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.நடராஜன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

கூத்தாநல்லூர் நகராட்சி கூட்டம்

பஸ் மோதி வாலிபர் மரணம்

அன்னை கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

கூத்தாநல்லூர்,​​ஏப் 1-
லெட்சுமாங்குடி கம்பர் தெருவிலுள்ள அன்னை கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் பள்ளியின் 27ம் ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை அறிவியல் கல்லூரியின் சேர்மேன் பேராசிரியர் எஸ்.வெங்கட்ராஜலு அவர்கள் தலைமையேற்று சிறப்புரை வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ்.மணிகண்டன், கூத்தாநல்லூர் ஜமாஅத் தலைவர் என்.எம்.சிஹாபுதீன், கூத்தாநல்லூர் ஜமாஅத் செயலாளர் ஜே.எம்.ஏ. ஷேக் அப்துல் காதர், கூத்தாநல்லூர் ஜமாஅத் நிர்வாகி எஸ்.எம்.முஹம்மது இஸ்மாயில் கனி ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.​

கூத்தாநல்லூர் ஜமாஅத் தலைவர் என்.எம்.சிஹாபுதீன், மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாக கூத்தாநல்லூர் நகராட்சி பணியாளர் ஏ.ஆரோக்கியதாஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

பள்ளியின் முதல்வர் என்.ஏ.செய்யது நாசர் அவர்கள் ஆண்டறிக்கை வாசித்தார். முன்னதாக பள்ளியின் தாளாளர் ஆர்.சரஸ்வதி அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Blog Archive