::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Friday, June 4, 2010

கூத்தாநல்லூரில் சாலை மறியல் - 57பேர் கைது

கலைஞர் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் கண்டறியும் முகாம்

திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் கண்டறியும் சிறப்பு முகாம்

ஜூன் 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது .

​இதுகுறித்து ஆட்சியர் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

​கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்புச் செயல்பாடாக வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை 73 நாள்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்,​​ அரசு மருத்துவமனைகள்,​​ அரசால் அங்கீகரிக்கப்பட்ட 5 தனியார் மருத்துவமனைகள் மூலம் பயனாளிகளைக் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

​பயனாளிகள்,​​ அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள்,​​ ​ அரசு மருத்துவமனைகள்,​​ அங்கீகரிக்கப்பட்ட 5 தனியார் மருத்துவமனைகளை அணுகி முகாம் நடத்தப்படவுள்ள தேதி மற்றும் விவரங்களை அறிந்து கொண்டு,​​ குறிப்பிட்ட நாளில் சென்று பரிசோதனை செய்து,​​ அரசு செலவிலேயே உயர் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

Monday, May 24, 2010

நாளை மறுதினம் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 26ம் தேதி வெளியாகின்றன.

கடந்த மார்ச் 23ம் தேதி பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் கிட்டத்தட்ட 9 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்களில் எட்டரை லட்சம் பேர் நேரடியாக தேர்வு எழுதினர்.

இதையடுத்து விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு தற்போது தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன.

இந்த முடிவுகள் நாளை மறுதினம் (மே 26ம் தேதி) வெளியாகின்றன.

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை உங்கள் www.koothanallur.co.in-ல் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Monday, May 17, 2010

கூத்தாநல்லூர் பள்ளியில் மாணவர் முதலிடம்

கூத்தாநல்லூர் மன்ப–உல்–உலா மேல்நிலைப்பள்ளியில் மாணவர் ஸ்ரீராம் முதலிடம் பெற்றுள்ளார்.மாணவர் ஸ்ரீராம் 1080 மதிப்பெண், முகமது முபஷீர் 990, முகமது அப்துல்காதர் 989 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் தமிஜுதீன், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் அன்வர்தீன், தலைமை ஆசிரியர் உதயகுமார் மற்றும் பலர் பாராட்டினர்.

திருவாரூர் மாவட்டத்தில் 100 சதத் தேர்ச்சி பெற்ற பள்​ளி​கள்

திரு​வா​ரூர் மாவட்​டத்​தில் பல்​வேறு பள்​ளி​கள் 100 சதத் தேர்ச்​சியை பெற்​றுள்​ளன.​ ஆனால்,​​ ஒரு அர​சுப் பள்​ளி​யும் முழு​மை​யான தேர்ச்சி விகி​தத்தை எட்டி பிடிக்​க​வில்லை.​ ​​ ​ ​

புனித தெர​சாள் பெண்​கள் மேல்​நி​லைப் பள்ளி ​(திருத்​து​றைப்​பூண்டி)​,​​ நீலன் மெட்​ரிக் பள்ளி ​(நீடா​மங்​க​லம்)​,​​ நவ​பா​ரத் மெட்​ரிக் பள்ளி ​(உள்​ளிக்​கோட்டை)​,​​ மகா​தேவ குருஜி மெட்​ரிக் பள்ளி ​(வலங்​கை​மான்)​,​​ புனித அந்​தோ​னி​யார் மெட்​ரிக் பள்ளி ​(திருத்​து​றைப்​பூண்டி)​,​​ மன்ப உல்​உலா மேல்​நி​லைப் பள்ளி ​(கூத்​தா​நல்​லூர்)​,​​ சண்​முகா மெட்​ரிக் பள்ளி ​(மன்​னார்​குடி)​,​​ சங்​கரா மெட்​ரிக் பள்ளி ​(பேர​ளம்)​ ஆகிய பள்​ளி​கள் 100சதத் தேர்ச்​சியை பெற்​றுள்​ளன.​ ​

பின்​தங்​கிய அர​சுப் பள்​ளி​கள்:​​ அரசு பள்​ளி​கள் அள​வில் மகா​தே​வப்​பட்​டி​னம் மேல்​நி​லைப் பள்ளி 96 சத​மும்,​​ பூந்​தோட்​டம் மேல்​நி​லைப் பள்ளி 95.8 சத​மும்,​​ திருத்​து​றைப்​பூண்டி பெண்​கள் மேல்​நி​லைப் பள்ளி 93.3 சத​மும்,​​ நன்​னி​லம் மேல்​நி​லைப் பள்ளி 92.9 சத​மும்,​ஆவூர் 92.50 சத​மும்,​​ பொதக்​குடி பெண்​கள் பள்ளி 92.43 சத​மும்,​​ குளிக்​கரை அர​சுப் பள்ளி ​ 91.76 சத​மும்,​​ ஆலங்​கோட்டை அர​சுப் பள்ளி 90 சத​மும் தேர்ச்சி பெற்​றுள்​ளன.

நன்றி - தினமணி.காம்