திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகள் கண்டறியும் சிறப்பு முகாம்
ஜூன் 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது .
இதுகுறித்து ஆட்சியர் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் சிறப்புச் செயல்பாடாக வரும் ஜூன் மாதம் 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 18-ம் தேதி வரை 73 நாள்களுக்கு நாளொன்றுக்கு ஒரு முகாம் என்ற அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட 5 தனியார் மருத்துவமனைகள் மூலம் பயனாளிகளைக் கண்டறியும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
பயனாளிகள், அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கீகரிக்கப்பட்ட 5 தனியார் மருத்துவமனைகளை அணுகி முகாம் நடத்தப்படவுள்ள தேதி மற்றும் விவரங்களை அறிந்து கொண்டு, குறிப்பிட்ட நாளில் சென்று பரிசோதனை செய்து, அரசு செலவிலேயே உயர் சிகிச்சைப் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.