::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Monday, October 24, 2011

கூத்தாநல்லூர் நகராட்சி அதிமுக வசமானது

கூத்தாநல்லூர் நகர்மன்றத் தலைவராக அதிமுக வேட்பாளர் ‌ஜெயராஜ் வெற்றி பெற்றார்.

கூத்தாநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சை (மமக) என மொத்தம் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக வேட்பாளர் ஜெயராஜ் 4,197 வாக்குகளும், திமுக வேட்பாளர் பக்கிரிசெல்வம் 3,301 வாக்குகளும், சுயேச்சை (மமக) வேட்பாளர் பிரபுதாஸ் 2,387 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முருகேஷ் 1,654 வாக்குகளும் பெற்றனர்.

கூத்தாநல்லூர் நகர்மன்றம்: கூத்தாநல்லூர் நகராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: 1. சிவதாஸ் (இந்திய கம்யூ.), 2. முகமது ரபீக் (அதிமுக), 3. சேகர் (திமுக), 4. சொற்கோ (அதிமுக), 5. வல்லரசன் (அதிமுக), 6. சத்யா (திமுக), 7. ஹாஜா கமாலுதீன் (சுயே), 8. ஜஸ்வர்யா (அதிமுக), 9. கே. ஜயராமன் (அதிமுக), 10. நாச்சியா (சுயே), 11. ராஜசேகரன் (அதிமுக), 12. மைதிலி (இந்திய கம்யூ.), 13. எஸ்.எம். காதர் உசேன் (திமுக), 14. நாகராஜன் (இந்திய கம்யூ.), 15. மெகருன்னிசா (அதிமுக), 16. முகமது அஷ்ரப் (அதிமுக), 17. ஹாஜா நஜிமுதீன் (திமுக), 18. அகமது சாதிக் (காங்கிரஸ்), 19. ரபியுதீன் (சுயே), 20. பாத்திமா சித்திக் (சுயே), 21. பாத்திமா ரிபைதா (திமுக), 22. ஸ்ரீதேவி (அதிமுக), 23. அப்துல் ஹமீது (அதிமுக), 24. மீரான் மைதீன் (அதிமுக).

Blog Archive