::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Thursday, October 20, 2011

கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - பதிவான வாக்குகள் மொத்தம் 72%

கடந்த 17ம் தேதி நடைபெற்ற நமது கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக அதிக அளவிலான போட்‌டியாளர்கள் (வேட்பாளர்கள்) களமிறங்கினர். கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் பங்கிற்கு ஓட்டு வேட்டை, துண்டு பிரசுரம், பிரச்சாரம் என வலம் வர கடந்த வாரம் முழுவதும் நமது கூத்தாநல்லூர் நகரமே களைக்கட்‌டியது.

இந்நிலையில் 17ம் தேதி நடந்த தேர்தலில் நமது கூத்தாநல்லூர் நகராட்சி தேர்தல் அலுவலராக நகராட்சி ஆணையர் ப.நாராயணன் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு, அமைதியான முறையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி வாக்களித்தனர். பெரும்பாலும் வாக்குச்சாவ‌டிக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தவும், கூட்டமாக நிற்கவும் தடைசெய்யப்பட்டதால் பெண்கள் வாக்குச்சாவ‌டிக்கு வருவதில் சிரமம் ஏதும் ஏற்படவில்லை. எனவே வழக்கம் போல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெண்களே அதிக அளவில் வாக்களித்தனர்.

பதிவான வாக்குகள் கீழே பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆண்கள் 66 %சதவிகிதமும், பெண்கள் 78% சதவிகிதமும் வாக்களித்துள்ளனர். மொத்த 15945 வாக்குகளில் 11506 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது மொத்த வாக்குகளில் 72% சதவிகிதமாகும். இது நல்ல வாக்கு சதவிகிதமாக இருப்பதால் தேர்தல் முடிவுகளில் மக்களின் மனம் பிரதிபலிக்கும் என அனைவரும் கருதுகின்றனர்.



இப்போது ஒருவழியாக அனைவரும் தேர்தல் பரபரப்பிலிருந்து விடுபட்டு நமது ஊர் அமைதியாக இருக்கின்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் நமது ஜாமியா பெண்கள் தொடக்கப்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு பகலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில் நாளை 21ம் தேதி வாக்குப்பதிவுகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதால் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இடையே பெரிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் எண்ணப்பட இருப்பதால் இந்த சூழ்நிலை நாளை காலை அதிகபட்சமாக 9 மணிவரைதான் இருக்கும். பெரும்பாலும் அனைத்து வார்டுகளின் இறுதி முடிவுகளும் அதிகபட்சமாக 11 மணிக்குள் தெரிந்து விடும் என்பதால் நமதூர் மக்கள் அனைவரும் மிக ஆர்வமாக உள்ளனர்.

நமது நிருபர் - www.koothanallur.co.in

Blog Archive