Monday, October 24, 2011
கூத்தாநல்லூர் நகராட்சி அதிமுக வசமானது
கூத்தாநல்லூர் நகர்மன்றத் தலைவராக அதிமுக வேட்பாளர் ஜெயராஜ் வெற்றி பெற்றார்.
கூத்தாநல்லூர் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சை (மமக) என மொத்தம் 4 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் அதிமுக வேட்பாளர் ஜெயராஜ் 4,197 வாக்குகளும், திமுக வேட்பாளர் பக்கிரிசெல்வம் 3,301 வாக்குகளும், சுயேச்சை (மமக) வேட்பாளர் பிரபுதாஸ் 2,387 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் முருகேஷ் 1,654 வாக்குகளும் பெற்றனர்.
கூத்தாநல்லூர் நகர்மன்றம்: கூத்தாநல்லூர் நகராட்சியில் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்: 1. சிவதாஸ் (இந்திய கம்யூ.), 2. முகமது ரபீக் (அதிமுக), 3. சேகர் (திமுக), 4. சொற்கோ (அதிமுக), 5. வல்லரசன் (அதிமுக), 6. சத்யா (திமுக), 7. ஹாஜா கமாலுதீன் (சுயே), 8. ஜஸ்வர்யா (அதிமுக), 9. கே. ஜயராமன் (அதிமுக), 10. நாச்சியா (சுயே), 11. ராஜசேகரன் (அதிமுக), 12. மைதிலி (இந்திய கம்யூ.), 13. எஸ்.எம். காதர் உசேன் (திமுக), 14. நாகராஜன் (இந்திய கம்யூ.), 15. மெகருன்னிசா (அதிமுக), 16. முகமது அஷ்ரப் (அதிமுக), 17. ஹாஜா நஜிமுதீன் (திமுக), 18. அகமது சாதிக் (காங்கிரஸ்), 19. ரபியுதீன் (சுயே), 20. பாத்திமா சித்திக் (சுயே), 21. பாத்திமா ரிபைதா (திமுக), 22. ஸ்ரீதேவி (அதிமுக), 23. அப்துல் ஹமீது (அதிமுக), 24. மீரான் மைதீன் (அதிமுக).

Friday, October 21, 2011
கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் -தலைவர் மற்றும் வார்டு 1 முதல் 24 வரை முடிவுகள்
Thursday, October 20, 2011
கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - பதிவான வாக்குகள் மொத்தம் 72%
கடந்த 17ம் தேதி நடைபெற்ற நமது கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்காக அதிக அளவிலான போட்டியாளர்கள் (வேட்பாளர்கள்) களமிறங்கினர். கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் பங்கிற்கு ஓட்டு வேட்டை, துண்டு பிரசுரம், பிரச்சாரம் என வலம் வர கடந்த வாரம் முழுவதும் நமது கூத்தாநல்லூர் நகரமே களைக்கட்டியது.
இந்நிலையில் 17ம் தேதி நடந்த தேர்தலில் நமது கூத்தாநல்லூர் நகராட்சி தேர்தல் அலுவலராக நகராட்சி ஆணையர் ப.நாராயணன் தலைமையில் அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு, அமைதியான முறையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் பாதுகாப்புடன் அச்சமின்றி வாக்களித்தனர். பெரும்பாலும் வாக்குச்சாவடிக்கு அருகில் வாகனங்கள் நிறுத்தவும், கூட்டமாக நிற்கவும் தடைசெய்யப்பட்டதால் பெண்கள் வாக்குச்சாவடிக்கு வருவதில் சிரமம் ஏதும் ஏற்படவில்லை. எனவே வழக்கம் போல் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பெண்களே அதிக அளவில் வாக்களித்தனர்.
பதிவான வாக்குகள் கீழே பட்டியலில் இடம்பெற்றுள்ளது. ஆண்கள் 66 %சதவிகிதமும், பெண்கள் 78% சதவிகிதமும் வாக்களித்துள்ளனர். மொத்த 15945 வாக்குகளில் 11506 வாக்குகள் பதிவாகியுள்ளது. இது மொத்த வாக்குகளில் 72% சதவிகிதமாகும். இது நல்ல வாக்கு சதவிகிதமாக இருப்பதால் தேர்தல் முடிவுகளில் மக்களின் மனம் பிரதிபலிக்கும் என அனைவரும் கருதுகின்றனர்.

இப்போது ஒருவழியாக அனைவரும் தேர்தல் பரபரப்பிலிருந்து விடுபட்டு நமது ஊர் அமைதியாக இருக்கின்றது. அனைத்து வாக்குச்சாவடிகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட வாக்கு இயந்திரங்கள் நமது ஜாமியா பெண்கள் தொடக்கப்பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு பகலாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாளை 21ம் தேதி வாக்குப்பதிவுகளை எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட இருப்பதால் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இடையே பெரிய ஆர்வமும் எதிர்பார்ப்பும் தொற்றிக் கொண்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குகள் எண்ணப்பட இருப்பதால் இந்த சூழ்நிலை நாளை காலை அதிகபட்சமாக 9 மணிவரைதான் இருக்கும். பெரும்பாலும் அனைத்து வார்டுகளின் இறுதி முடிவுகளும் அதிகபட்சமாக 11 மணிக்குள் தெரிந்து விடும் என்பதால் நமதூர் மக்கள் அனைவரும் மிக ஆர்வமாக உள்ளனர்.
நமது நிருபர் - www.koothanallur.co.in

Friday, October 14, 2011
கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பதவி - வழக்கில் தீர்ப்பு
கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் தேர்தலின் சுழற்சி முறையில் மாற்றம் வேண்டி கூத்தாநல்லூர் ஜமாஅத்தின் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு (ரிட் மனு) இன்று (14-10-2011) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விசாரணையின் முடிவில்- எதிர்மனுதாரருக்கு (தேர்தல் ஆணையத்திற்கு) 3 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் எனவும், இதனிடையே எதிர்வரும் 17ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டாலும், அது நீதிமன்ற தீர்ப்பிற்கு உட்பட்டது எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றிபெற்ற வேட்பாளர் பதவியேற்க நீதிமன்ற தீர்ப்பு வரும் நாள் வரை காத்திருக்க வேண்டும்.
இந்நிலையில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் பிரச்சாரம் நாளை (15-10-2011) சனிக்கிழமை மாலை 5 மணியுடன் நிறைவடையும் இவ்வேளையில், கூத்தாநல்லூர் மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இவ்வழக்கின் தீர்ப்பு விரைவில் நமது எதிர்பார்ப்பை நிறைவேற்ற இறைவனிடம் துஆச் செய்ய வேண்டுமாய் கூத்தாநல்லூர் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Wednesday, October 12, 2011
கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - களம் காணும் வேட்பாளர்கள் வார்டு வாரியாக...
கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்து உங்கள் பகுதி வேட்பாளர்களை அறிந்து கொள்ளவும்.

எதிர்வரும் 17-10-11 அன்று நடைபெறவிருக்கும் உள்ளாட்சி நிர்வாகத்திற்கான கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து பின்னர் வேட்புமனு பரிசீலனை மற்றும் திரும்ப பெறுதல் ஆகியவை முடிந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்காக 4 பேரும், மொத்தமுள்ள 24 வார்டுகளின் உறுப்பினர் பதவிக்காக மொத்தம் 110 பேரும் போட்டியிடுகின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவில் அனைத்து கட்சிகளும் தனித்தனியே களம் காணும் வேளையில், அதிகமான சுயேட்சை வேட்பாளர்களும் புதிதாக களம் கண்டுள்ளனர்.
கட்சி - சுயேட்சை என பேதம் பாராமல் தலைவர் பதவிக்கும் அந்தந்த வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர் பதவிகளுக்கும் தன்னலமில்லா நல்லவர்களை, தனிமனித ஒழுக்கமுள்ளவர்களை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர்களை, பொதுநலனில் அக்கறை கொண்டுள்ளவர்களை சரியாக அடையாளம் கண்டு, கையூட்டிற்கு மயங்காது, நேர்மையாக சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- www.koothanallur.co.in குழுவி்னர்

கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்காக 4 பேரும், மொத்தமுள்ள 24 வார்டுகளின் உறுப்பினர் பதவிக்காக மொத்தம் 110 பேரும் போட்டியிடுகின்றனர். முன் எப்போதும் இல்லாத அளவில் அனைத்து கட்சிகளும் தனித்தனியே களம் காணும் வேளையில், அதிகமான சுயேட்சை வேட்பாளர்களும் புதிதாக களம் கண்டுள்ளனர்.
கட்சி - சுயேட்சை என பேதம் பாராமல் தலைவர் பதவிக்கும் அந்தந்த வார்டுகளைச் சேர்ந்த உறுப்பினர் பதவிகளுக்கும் தன்னலமில்லா நல்லவர்களை, தனிமனித ஒழுக்கமுள்ளவர்களை, கூப்பிட்ட குரலுக்கு ஓடிவருபவர்களை, பொதுநலனில் அக்கறை கொண்டுள்ளவர்களை சரியாக அடையாளம் கண்டு, கையூட்டிற்கு மயங்காது, நேர்மையாக சிந்தித்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
- www.koothanallur.co.in குழுவி்னர்
கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்து உங்கள் பகுதி வேட்பாளர்களை அறிந்து கொள்ளவும்.

Wednesday, October 5, 2011
Subscribe to:
Comments (Atom)
Blog Archive
-
▼
2011
(90)
-
▼
October
(10)
- கூத்தாநல்லூர் நகராட்சி - பதவியேற்பு விழா
- கூத்தாநல்லூர் நகராட்சி அதிமுக வசமானது
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் -தலைவர் மற்றும் வார...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - பதிவான வாக்குகள் ...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பதவி - வழக்கில் தீர்...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற வேட்பாளர்களின் பிரசுரங்கள்
- வெள்ளிக்கிழமை வெளியான துண்டு பிரசுரங்கள்
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் - களம் காணும் வேட்ப...
- கூத்தாநல்லூர் நகர்மன்ற தேர்தல் செய்திகள்