::: இணையதள பார்வையாளர்களுக்கு, நமது www.koothanallur.co.in இணையத்தளத்தில் வெளியிடப்படும் அனைத்து தகவல்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் (Notice) ஆகியவை நமது ஊரில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை வெளிநாடு வாழ் கூத்தாநல்லூர் மக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகவே வெளியிடப்படுகின்றன ::: மற்றபடி எந்த ஒரு தனிநபர் சொந்த விருப்பத்திற்கோ, இயக்கத்திற்கோ அல்லது கட்சிக்கோ சாதகமாகவோ பாதகமாகவோ செய்திகள் வெளியிடப்படுவதில்லை என்பதை நினைவுகூறுகிறோம் ::: (100% தெளிவாக காண்பதற்கு படத்தின் மீது கிளிக் செய்யவும்) :::

Saturday, May 28, 2011

நமதூர் 10ம் வகுப்பு மாணவ மாணவியரின் தேர்ச்சி

நமதூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இவ்வாண்டு 10 வகுப்பு SSLC தேர்வு எழுதிய 233 மாணவிகளில் 208 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான மாணவிகளை களமிறக்கி இப்பள்ளி 83% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. 489 மதிப்பெண்கள் பெற்று A.நாகூர்கனி சம்சுநிஷா பள்ளியில் மட்டுமல்லாது மாவட்ட அளவிலான அரசு பள்ளிகளில் முதலிடம் பெற்றுள்ளார். 472 மதிப்பெண்கள் பெற்று B.ரஜபுநிஸா பள்ளியில் இரண்டாம் இடமும், 469 மதிப்பெண்கள் பெற்று A.யாஸ்மின் பர்வின் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனர்.

அடுத்து நமதூர் மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பிரிவில் 100% தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அதாவது 31 மாணவர்கள் தேர்வெழுதி அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ் பிரிவில் 114 மாணவர்கள் தேர்வெழுதியதில் 112 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 98 % தேர்ச்சி. இப்பள்ளியில் 478 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் K.எழில் விக்னேஷ் மற்றும் 9 மாணவர்கள் கணிதத்தில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

நமதூர் NATIONAL MATRICULATION SCHOOL - 34 மாணவ மாணவியர் MATRIC தேர்வெழுதியதில் 26 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 76 % தேர்ச்சியாகும். இவர்களில் T.A.நஸ்ஹத் ஷாஹிதா 472 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

நமதூர் OXFORD MATRICULATION SCHOOL - 41 மாணவ மாணவியர் MATRIC தேர்வெழுதியதில் 31 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதாவது 76 % தேர்ச்சி. இதில் S.நூருல் மும்தாஜ் ரிஸ்வானா 443 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார்.

வெற்றி பெற்றவர்களை வாழ்த்தும் வேளையில் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு அயராது பாடுபட்ட தாளாளர்களையும், தலைமை ஆசிரியர்களையும் ஏனைய ஆசிரிய பெருந்தகைகளையும் அனைவரும் மனதார பாராட்டுவோம்.

நன்றி - தகவல்: அப்துல் அலீம்

Thursday, May 26, 2011

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள்... நமது இணையதளத்தில்

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் நாளை வெள்ளிக்கிழமை (மே 27) வெளியாகிறது. இதனை அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

9.5 லட்சம் பேர் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.

இப்போது ரிசல்ட் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை காலை எஸ்எஸ்எல்சி, மெட்ரிகுலேஷன், ஒஎஸ்எஸ்எல்சி உள்ளிட்ட அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியாகின்றன.

காலை 10 மணிக்கு முடிவுகள் வெளியிடப்படுகின்றன. அடுத்த சில நிமிடங்களில் அவை நமது www.koothanallur.co.in இணையதளத்தில் வெளியிடப்படும்.

Monday, May 16, 2011

அன்னை கஸ்தூரிபா காந்தி பள்ளியில் இன்று (16 மே) முதல் மாணவர் சேர்க்கை

லெட்சுமாங்குடி - கம்பர் தெரு அன்னை கஸ்தூரிபா காந்தி நர்சரி & பிரைமரி பள்ளியில் இன்று (மே 16) திங்கட்கிழ‌மை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

2011-12 ஆம் ஆண்டுக்கான PreKG, LKG, UKG, 1 முதல் 5 வகுப்புகளுக்கு புதிய மாணவர் சேர்க்கை (மே 16) திங்கட்கிழ‌மை காலை 10 மணிமுதல் நடைபெற்று வருகிறது. வேலை நேரம்: காலை 10 முதல் மதியம் 2 வரை - மாலை 3 முதல் 5 மணிவரை. மேலும், விவரங்களுக்கு 04367 234384 அல்லது 9976 234384 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

பெரிதாக காண படத்தின் மீது கிளிக் செய்யவும்


Saturday, May 14, 2011

திருவாரூர் தொகுதியில் கருணாநிதி வெற்றி

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு. கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தொகுதி மறுசீரமைப்பில் தனித் தொகுதியாக இருந்த திருவாரூர் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக தான் இளவயதில் படித்து, வளர்ந்த திருவாரூரில் போட்டியிட்டார் கருணாநிதி.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அக் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலர் குடவாசல் எம். ராஜேந்திரன், பாஜக சார்பில் ஆர். பிங்களன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் டி. ஜயராமன், சுயேச்சையாக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண்கள் - 1,04,822, பெண்கள் - 1,04,511, இதரர் 4 என மொத்தம் 2,09,337 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஏப். 13-ல் நடைபெற்ற வாக்குப்பதிவில் அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 1,73,159 வாக்குகள் பதிவாயின.

இந்தத் தொகுதியில் பதிவான வாக்குகள் திருவாரூர் கிடாரங்கொண்டான் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டன.

திமுக சார்பில் போட்டியிட்ட மு. கருணாநிதி 1,09,014 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக வேட்பாளர் குடவாசல் எம். ராஜேந்திரன் - 58,765 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தற்போது நடைபெற்ற தேர்தல் வெற்றியின் மூலம், தொடர்ந்து 4-வது முறையாக திமுக தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு. கருணாநிதி திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டதால், இத் தொகுதி வி.வி.ஐ.பி. தொகுதியாகவும், அனைவரின் கவனத்தை ஈர்த்த தொகுதியாகவும் நிகழ்ந்தது.

திருவாரூர் தொகுதியில் வெற்றி பெற்ற மு. கருணாநிதிக்குப் பதிலாக அவரது முதன்மை முகவரும், தொ.மு.ச. மாநிலச் செயலருமான சண்முகம் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, தொகுதி தேர்தல் அலுவலரும், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியருமான ராமனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

Monday, May 9, 2011

மன்ப உல் உலாவுக்கு மற்றுமோர் மகுடம் !!!

நமதூர் மன்ப உல் உலா மேனிலை பள்ளி மாணவர்கள் +2 தேர்வில் 100 % வெற்றி பெற்றுள்ளனர். (79 மாணவர்கள் தேர்வெழுதி 79 மாணவர்களும் பாஸ்) இப்பள்ளியில் முதலிடம் வாஹிது ஜமான் (மார்க் 1127)

இதற்கு அடுத்தபடியாக ஆக்ஸ்போர்ட் ஆங்கில மேனிலை பள்ளி 90 % வெற்றி பெற்றுள்ளனர்.(அதாவது 39 மாணவ மாணவிகளில் 35 பேர் பாஸ்) இப்பள்ளியில் முதலிடம் K.H.உவைதா பெனாசிர் (1098 மார்க்)

இதனை தொடர்ந்து நமதூர் அரசினர் பெண்கள் மேனிலை பள்ளி மாணவிகள் 71 % வெற்றி பெற்றுள்ளனர். (182 மாணவிகளில் 129 பேர் பாஸ்)

கடைசியாக நமதூர் அரசினர் ஆண்கள் மேனிலை பள்ளி மாணவர்கள் 27 % தேர்ச்சியடைந்துள்ளனர்.

மன்ப உல் உலா மேனிலை பள்ளியின் இவ்வெற்றிக்கு பெரிதும் பாடுபட்ட மன்ப உல் உலா பள்ளியின் தாளாளர் T.M.தமிஜுதீன் அவர்களையும், தலைமை ஆசிரியர் T.உதயகுமார் அவர்களையும் ஏனைய ஆசிரிய பெருந்தகைகளையும் மன்ப உல் உலா சபையையும் அனைவரும் பாராட்டுவோம்.

நன்றி - தகவல்: அப்துல் அலீம்

Sunday, May 8, 2011

பிளஸ் டூ தேர்வு முடிவுகள்...நமது இணையதளத்தில்

தமிழகத்தில் கடந்த மார்ச் 2011-ல் நடந்து முடிந்த ப்ளஸ்டூ தேர்வு முடிவுகளை நாளை (09-05-2011) காலை உங்கள் www.koothanallur.co.in இணைய தளத்தில் பார்க்கலாம்.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை மொத்தம் 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பள்ளிகள் மூலம் நேரடியாகவும், 50,000க்கும் அதிகமானோர் தனித் தேர்வர்களாகவும் எழுதியுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகளை எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் உங்கள் Mobile Phone-ல் பெற www.tnpubliclibraries.gov.in/+2-results.html என்ற முகவரிக்கு சென்று மாணவன்/மாணவி பெயர் ,பதிவு எண் (Reg No),அலைப்பேசி எண் (Mobile No.), மற்றும் முகவரி கொடுத்து Register செய்ய வேண்டும். பிறகு 9ம் தேதி காலை 9 மணிக்கு தேர்வு முடிவுகள் உங்கள் அலைப்பேசியில் (Mobile) எஸ்.எம்.எஸ். (SMS) மூலம் பெற்றுக்கொள்ளலாம்.


மே 9-ம் தேதி காலை 8.45 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. அடுத்த சில நிமிடங்களில் நமது இணையதளத்தில் முடிவுகளைக் காணலாம்.

Blog Archive